10TH - TAMIL - JULY 1ST WEEK QUESTION PAPER - PDF

 

 பத்தாம் வகுப்பு

தமிழ்

வாராந்திரத் தேர்வு - 1 

வினாத்தாள்

ஜூலை - முதல் வாரம்

( 04-07-2022 )

பத்தாம் வகுப்பு

தமிழ் – பணித்தாள் – மொழித்திறன்

பாடம் : இயல் : 1                                                   மதிப்பெண்கள் : 40

அ ) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-                          2×1=2

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

ஆ ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுது     2×1=2

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

 

புல்

 

பழம்

 

ஆடு

 

இ ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.                                                                             4 ×1=4

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

ஈ ) தொடர்களில் உள்ள தடித்த அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.   5×1=5

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-                        2×1=2

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

உ ) குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-                                                  5×1=5

          குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

ஊ )எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.                  5×1=5

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

 

 

எறும்புந்தன் கையால் எண் சாண்

 

 

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

 

 

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

 

 

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணீ

 

 

கலைச்சொல் அறிக:                                                                5×1=5

Vowel , Consonant , Homograph , Monolingual , Conversation , Discussion

அகராதியில் காண்க:-                                                             6×1=6

அடவி, அவல், சுவல் , செறு , பழனம் ,புறவு

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.                                              4×1=4

CLICK HERE TO DOWNLOAD PDF




Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post