9TH - TAMIL - UNIT 1 - QUESTION AND ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

இயல் – 1                                                                                                         அமுதென்று பேர்

ஒன்பதாம் வகுப்புதமிழ்

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.

குழு -1

குழு-2

குழு-3

குழு-4

நாவாய்

மரம்

துறை

தன்வினை

………………….

………………….

………………..

…………………..

அ) 1-வங்கம்,2-மானு,3-தாழிசை,4-பிறவினை

ஆ) 1.தாழிசை2-மானு,3-பிறவினை,4-வங்கம்

இ) 1-பிறவினை,2-தாழிசை,3-மானு,4-வங்கம்

ஈ) 1-மானு,2-பிறவினை,3-வங்கம்,4-தாழிசை                    

2 தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

) தொடர்நிலைச் செய்யுள்            ) புதுக்கவிதை             ) சிற்றிலக்கியம்

 ஈ) தனிப்பாடல்

3. விடுபட்ட இடத்திற்கு பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

) _____குணம்            ) ______ வண்ணம் இ) _____ குணம்

) _____ வனப்பு

௧ ) மூன்று,நூறு,பத்து,எட்டு                      ௨) எட்டு,நூறு,பத்து,மூன்று

௩) பத்து,நூறு,எட்டு,மூன்று                        ௪) நூறு,பத்து,எட்டு,மூன்று

4. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த

   காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!.............

இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

) முரண்,எதுகை,இரட்டைதொடை ) இயைபு,அளபெடை,செந்தொடை

) மோனை,எதுகை,இயைபு        ஈ) மோனை,முரண்,அந்தாதி

5.. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு

) வேற்றுமை தொகை   ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்    

) பண்புத்தொகை          ) வினைத்தொகை

) குறுவினா                      

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

            திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

          காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழ். அது என்னென்றும் எக்காலமும் நிலையாக இருக்கும்.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

          இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை.

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.

          1. கீபோர்டு – விசைப்பலகை          2. கர்சர் - சுட்டி

            3. லேப்டாப் – மடிக்கணினி          4. ப்ரெளசர் – உலாவி

            5. சீடி - வட்டு

5. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை

   அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுப்பொருளாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

          அகஇலக்கியங்கள் – அகநானூறு,குறுந்தொகை

            புற இலக்கிய்ங்கள் – புறநானூறு, பத்துப்பாடு

இவை வாழ்வியலை விளக்கும் இலக்கணங்களாக அனைந்துள்ளன.

6. செய்வினையைச் செயபாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

படு – ஓவியம் அழகனால் வரையப்பட்டது.

ஆயிற்று – வீடு கட்டியாயிற்று

7. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.

வீணையோடு வந்தாள் – வேற்றுமைத் தொடர்

கிளியே பேசு – விளித்தொடர்

சிறுவினா

1. சங்க இலக்கியத்தில் காணப்படும்  கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

தமிழ்             -        கிரேக்கம்

எறிதிரை                    எறுதிரான்

கலன்                         கலயுகோய்

நீர்                             நீரியோஸ், நீரிய

நாவாய்                       நாயு

தோணி             -          தோணீஸ்

2. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

          1. தென் திராவிட மொழிகள்

            2. நடுத்திராவிட மொழிகள்

            3. வடதிராவிட மொழிகள்

தென் திராவிடம் : தமிழ் மொழி

            தமிழ் என்னென்றும் நிலைத்திருப்பது. மக்களின் அகப்புற வாழ்க்கையை அழகாக காட்டும் இலக்கியங்கள் உள்ளன. மனித வாழ்வுக்குத் தேவையான நீதிநெறி கருத்துகளை கூறும் நீதி நூல்கள் உள்ளன.

3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

            மூன்று – தமிழ்

            மூணு – மலையாளம்

            மூடு – தெலுங்கு

            மூரு – கன்னடம்

            மூஜி - துளு

4. வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக.

பிறமொழிச் சொற்கள்               -        தமிழ்ச்சொற்கள்

சாப்ட்வேர்                                  -          மென்பொருள்

லேப்டாப்                                    -          மடிக்கணினி

ப்ரெளசர்                                    -          உலாவி

சர்வர்                                        -          வையக விரிவு வலை

சைபர்பேஸ்                                -          இணைய வெளி

5. தன்வினை, பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையை செய்தல்

எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தல்

எ.கா : பந்து உருண்டது

எ,கா: பந்தை உருட்ட வைத்தான்

          அவன் திருந்தினான்

        அவனைத் திருந்தச் செய்தான்

6. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினை குறிப்பிடுக.

Ø  குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுவடிவெடுத்து தமிழை வளர்ப்போம்.

Ø  அறிவியல் தமிழாய்,கணினித்தமிழாய், இணையத் தமிழாய் வளர்ந்துள்ளது.

Ø  பல்வேறுத் துறைகளில் பலவிதமான கலைச்சொற்களை உருவாக்கி தமிழை வளர்த்து வருகிறோம்.

நெடுவினா

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்த்துணையாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.?

ü  திராவிட மொழிகளின் ஒப்பியக் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

ü  தமிழ் என்ற சொல்லிருந்து திராவிடா என்ற சொல் பிறந்தது என்கிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று  விளக்குகிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியன ஒரே இனம்.

ü  ஹோக்கன் ,மாக்க்சுமுல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய  மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றனர்.

ü  கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றார். சமஸ்கிருத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்றார். 

2. தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

ü  அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு 

ü  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

ü  மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

CLICK HERE TO GET DOWNLOAD - PDF 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post