9TH - TAMIL - NOTES OF LESSON - JULY 1ST WEEK

  

நாள்                 :           04 -07 -2022 முதல்  08 -07-2022        

மாதம்                        ஜூலை            

வாரம்               :           முதல் வாரம்                                     

வகுப்பு              :         ஒன்பதாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :         1. தொடர் இலக்கணம்

                            2. நீரின்றி அமையாது உலகு

                            3. பட்டமரம்


கரு பொருள்:

·         தொடர்களின் அமைப்புகளை அறிந்து பயன்படுத்துதல்

·         நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல்

·         கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்

·         இயற்கை வளங்களை பாதுகாத்தல்

உட்பொருள்:

Ø  தொடர்களின் வகைகள், வினைவகைகள், பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்

Ø  நீரின் முக்கியத்துவத்தை கலந்துரையாடல் வடிவில் பங்கேற்று கற்றல்

Ø  பட்டுப்போன மரத்தின் வருத்தத்தை உணர்தல்

கற்றல் விளைவுகள் :

·         தொடர்களின் அமைப்புகளை அறிந்து பயன்படுத்துதல்

·         நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல்

·         கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்

·         இயற்கை வளங்களை பாதுகாத்தல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

1.  தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை கேட்டறிந்து சொற்களை அறிமுகப்படுத்தி பாடப்பொருளை ஆர்வமூட்டல்

2. நமது உடலில் இரத்தம் எவ்வாறு உற்பத்தியாகிறது? நமது உடல் வியர்வைகள் எவ்வாறு எதன் காரணமாக வெளிப்படுகிறது எனக் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

3. மரங்களை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? மரங்கள் இல்லையெனில் உலகம் என்னவாகும்? என சிந்திக்கும் விதமான வினாக்களைக் கேட்டு ஆரவமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

தொடர் இலக்கணம்

·         தொடர் என்பது குறித்து  அறிதல்

·         பயனிலை, பெயரடை,வினையடை குறித்து அறிதல்

·         செய்வினை,செயபாட்டு வினை, தன்வினை,பிற வினை குறித்து அறிதல்

·         பகுபத உறுப்பிலக்கண உறுப்புகள் அறிதல்.

·         உறுப்புகள் இடம் பெறும் இடங்களை அறிதல்

 

நீரின்றி அமையாது உலகு.

·         நீரே மனித வாழ்வின் அடிப்படை

·         நீர் மேலாண்மை அறிதல்

·         நீர் நிலைகளின் பெயர்களை அறிதல்

·         இந்திய நீர் பாசன தந்தை ஆர்தர் காட்டன் பற்றி அறிதல்

·         சோழர்களின் குழித்தாம்பு குறித்து அறிதல்

·         நீர் அவசியம் உணர்ந்து அதனை பாதுகாக்கும் முறைகளை அறிதல்

 

பட்டமரம்

 

·         ஆசிரியர் குறிப்பு அறிதல்

·         கவிதையின் பாங்கு அறிதல்

·         மரத்தின் குமுறலை கவிதையின் மூலம் உணர்தல்

ஆசிரியர் செயல்பாடு:

Ø   தொடரின் தன்மைகளைக் கூறல்

Ø   எழுவாய், செயபடுபொருள்,பயனிலை பற்றிக் கூறல்

Ø   வினையின் வகைகளைக் கூறல்

Ø   பகுபத உறுப்பிலக்கணம் பற்றி கூறல்

Ø   பகுபத உறுப்புகள் இடம் பெறும் தன்மைகளை அறிதல்

Ø   நீரின் அவசியம் உணர்த்துதல்

Ø   உரைநடையினை நிறுத்தற் குறி அறிந்து வாசித்து காட்டல்

Ø   குமிழித்தாம்பு பற்றி அறிதல்

Ø   நீரினைப் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து கூறல்

Ø   நீர் நிலைகளின் பெயர்களை அறிந்து கூறல்

Ø   ஆசிரியரைப் பற்றிக் கூறல்

Ø   கவிதையின் பொருள் கூறல்

Ø   அன்றாட வாழ்வில் நாம் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளை கவிதையின் துணையுடன் காணல்

மாணவர் செயல்பாடு:

Ø     தொடர் என்பதனை அறிதல்

Ø     எழுவாய்,பயனிலை,செயபடுபொருள் பற்றி அறிதல்

Ø     வினையின் வகைகள் அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்

Ø     பகுபதம் என்பதனை அறிதல்

Ø     பகுபத உறுப்புகளின் தன்மைகள், அவை பெறும் இடங்கள் குறித்து அறிதல்

Ø     உரைப்பத்தியினை நிறுத்தற் குறி அறிந்து படித்தல்

Ø     உரைப்பகுதியில் இடம் பெறும் முக்கிய வினாக்களை அறிதல்

Ø     சோழர்களின் குமிழித்தாம்பு பு பற்றி அறிதல்

Ø     கல்லணை கட்டிய பாங்கு அறிதல்

Ø     ஆர்தர் காட்டன் என்பவரைப் பற்றி அறிதல்

Ø     கவிதையின் பொருள் உணர்தல்

Ø     கவிதையின் நயங்களை அறிதல்

Ø     கவிதையின் பொருள் உணர்ந்து மரங்களையும், இயற்கையையும் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிதல்

கருத்துரு வரைபடம்

 

தொடர் இலக்கணம்

 


நீரின்றி அமையாது உலகு


பட்டமரம்

 

வலுவூட்டல்:

                                               விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

                                                மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை

மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  தொடர் என்பது குறித்து அறிதல்

Ø  வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களைப் படித்தல்

Ø  ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

Ø  செய்யுளில் காணும் நயங்களை அறிதல்

மதிப்பீடு:

                LOT :

Ø  இளவரசி எழுதினாள் இதில் எழுவாய் எது?

Ø  இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை யார்?

Ø  பட்டமரம் எனும் கவிதையின் ஆசிரியர் யார்?

MOT :

Ø  நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். ( வினாத் தொடராக மாற்றுக )

Ø  சோழர் கால குமிழித்தாம்பு குறித்து கூறுக.

Ø  பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

HOT :

Ø  சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றன என்பதனை பதிவு செய்க.

Ø  நீரின்றி அமையாது உலகு, நீரின்றி அமையாது யாக்கை இவ்விரண்டு தொடர்களையும் ஒப்புமைப்படுத்திக் கூறுக.

Ø  விளைநிலங்கள் கட்டடங்களாக மாறி வருவது குறித்து உனது கருத்தை கூறுக.

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post