9TH - TAMIL - NOTES OF LESSON - 4TH JUNE

 

நாள்                 :           27-06-2022 முதல்  01-07-2022       

மாதம்                :         ஜூன்              

வாரம்               :           நான்காம் வாரம்                                      

வகுப்பு              :        ஒன்பதாம் வகுப்பு         

 பாடம்               :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :1. தமிழ்விடுதூது

                                     2. வளரும் செல்வம்

கரு பொருள்:

·         வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்

·         தமிழ்ச் சொற்களையும், பிறமொழிச் சொற்களையும் வேறுபடுத்தி அறிதல்

உட்பொருள்:

Ø  சிற்றிலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தமிழின் பெருமைகளை உணர்தல்

Ø  சொற்கள் புலப்படுத்தும் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உரையாடல் வழி அறிதல்

கற்றல் விளைவுகள் :

Ø  தமது எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதாக எடுத்துரைக்க உதவுவது தமிழ் மொழி என அறிந்து பயன்படுத்துதல்

Ø  பிறமொழிக் கலப்பின்றி பேசுதல்,எழுதுதல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

1. இன்றைய அறிவியல் காலத்தில் பிறரிடமிருந்து நமக்கு எவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன?

2. நீ அன்றாடம் வீட்டிலும், பள்ளியிலும் செய்யும் செயல்பாடுகளை பிறமொழி கலப்பின்றி கூறுக

 என்பன போன்ற வினாக்கள் கேட்டு பாடப் பொருளை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

                               வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

·         சிற்றிலக்கிய்ங்கள் பற்றி அறிதல்

·         கண்ணி என்பதன் பொருளை அறிதல்

·         அன்றைய சங்க இலக்கியத்தில் அனுப்பப்பட்ட தூது பொருள்களை அறிதல்

·         எண் வனப்பு,பத்து குணம், ஐந்து வண்ணங்கள், ஒன்பது சுவை பற்றிக் அறிதல்

·         தமிழின் கலைச்சொல்லாக்கத்தின் தேவையினை உணர்தல்

·         தமிழ் எண்ணிக்கையின் பெயர்களை அறிதல்

·         கடல் சார்ந்த சொற்களை கிரேக்க மொழியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதனை அறிதல்

·         அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிறமொழிச்சொற்களின் தமிழ்ச்சொற்களை கூறல்

·         தமிழ்மொழியின் சிறப்புகளை கவிதை மூலம் அறிதல்

·         செய்யுளில் உள்ள நயங்களை அறிதல்

ஆசிரியர் செயல்பாடு:

Ø     செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்

Ø     மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø   செய்யுளின் நயங்களை கூறல்

Ø   எண் வனப்பு, பத்து குணம், ஒன்பது சுவை, நூறு வண்ணங்கள் பற்றிக் கூறல்

Ø   கண்ணி என்பது பற்றி கூறல்

Ø   அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிற மொழிச் சொற்களின் தமிழ் சொற்கள் அறிதல்

Ø   தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளில் பயன்படும் விதம் குறித்து கூறல்

 

மாணவர் செயல்பாடு:

Ø     சிற்றிலக்கியங்கள் பற்றி அறிதல்

Ø     கண்ணி என்பதன் பொருள் அறிதல்

Ø     மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

Ø     செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்

Ø     செய்யுளின் பொருள் உணர்தல்

Ø     அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களை அறிதல்

Ø     பிறமொழி கலப்பின்றி தமிழ்ச்சொற்களை  வாசித்தல்

Ø     கலைச்சொல்லாக்கத்திற்கான தேவையினை உணர்தல்

Ø     பிறமொழிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களை அறிதல்

கருத்துரு வரைபடம்

தமிழ்விடு தூது

 


வளரும் செல்வம்

வலுவூட்டல்:

                                               விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

                                                மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக்                     கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களைப் படித்தல்

Ø  ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

Ø  செய்யுளில் காணும் நயங்களை அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

Ø  பிறமொழிச் சொற்களை அறிதல்

மதிப்பீடு:

                LOT :

Ø  வண்ணங்கள் ____________

Ø  தமிழ்விடு தூது செய்யுளை இயற்றியவர் ________

Ø  நோட்டு என்பதன் தமிழ்ச்சொல்_______

MOT :

Ø  எண் வனப்பு என்பது யாது?

Ø  அறுசுவைகள் யாவை?

Ø  எண்களின் தமிழ்ப் பெயர்கள் யாவை?

Ø  கலைச்சொல்லாக்கத்திற்கான அவசியம் யாது?

HOT :

Ø  நமது எண்ணங்களை எளிதாக வெளிப்படுத்த  தமிழே சிறந்தது என்பதனை நிறுவுக.

Ø  நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு அவற்றில் இடம் பெற்றுள்ள பிற மொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்சொற்களை அறிந்து எழுதுக

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post