அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். கல்வியாண்டு 2022-2023 முழுப்பாடத்திட்டமாக உள்ளது. இந்த முழுப்பாடத்திட்டத்திற்கு பாடத்திட்டம் நமது கல்விவிதைகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இவற்றைப் பதிவிறக்கம் செய்துக் கொண்டு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும். நேற்றைய தினம் பொதுத்தேர்வு முடிவுகள் சில ஆசிரியர்களுக்கு உற்சாகத்தையும், இன்னும் சிலருக்கு பரவாயில்லை என்பது போலவும், பிற ஆசிரியர்களுக்கு எவ்வளவு பயிற்சிக் கொடுத்தும் பலனில்லையே என்ற வருத்தமும் இருக்கலாம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். என்பதனை அறிந்து இந்த கல்வி ஆண்டில் நாம் சிறப்பாக பணியாற்றி நமது கடமையை சிறப்பாக செய்வோம். அதற்கு இந்த பாடத்திட்டம் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனைக் கொண்டு நாம் திட்டங்களை செயல்படுத்தி இந்த கல்வி ஆண்டில் சிறப்பானதொரு முடிவினை வழங்குவோம்.
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு
பாடத்திட்டம்