எட்டாம் வகுப்பு
தமிழ் – பணித்தாள்
பருவம் : 1 இயல் : 1
பாடம் : தமிழ்மொழி மரபு மதிப்பெண்கள் : 25
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 4 × 1 = 4.
1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ) நீரில்
2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.
அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு
3. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _______
அ) இரண்டு + திணை ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை ஈ) இருந்து + திணை
4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _________.
அ) ஐம் + பால் ஆ) ஐந்து + பால் இ) ஐம்பது + பால் ஈ) ஐ + பால்
ஆ) குறுவினா 2 × 2 = 4.
1. உலகம் எவற்றால் ஆனது?
2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
இ) சிந்தனை வினா 1 × 3 = 3
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
உ) இளமைப் பெயர்களை காண்க. 5 × 1 = 5
புலி ; சிங்கம் , யானை, பசு, ஆடு
ஊ) ஒலி மரபுகளைக் காண்க. 5 × 1 = 5
புலி ; சிங்கம் , யானை, பசு, ஆடு
எ) எவையேனும் நான்கு பறவைகளின் ஒலி மரபுகளை எழுதுக. 4 × 1 = 4.
----------------------
------------
------------
-------------
ஆக்கம் :
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
CLICK HERE TO GET DOWNLOAD - PDF