8TH - TAMIL - NOTES OF LESSON - JUNE 4TH WEEK

 

 நாள்                :           27-06-2022 முதல்  01-07-2022        

மாதம்                :           ஜூன்

வாரம்               :           ஜூன் – நான்காம்   வாரம்                       

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :           1. தமிழ்மொழி வாழ்த்து

                                                2. தமிழ் மொழி மரபு       

 

கருபொருள்                              :

Ø   செய்யுளைப் படித்து அதன் நயங்களைப் போற்றும் திறன் பெறுதல்

Ø  தமிழ் மொழியின் மரபுகளை அறிந்து பயன்படுத்துதல்

உட்பொருள்                              :

Ø  பாரதியார் பற்றிய குறிப்பு

Ø  பாரதியார் தமிழ்மொழியினை வாழ்த்திய விதம்

Ø  தொல்காப்பியம் பற்றி அறிதல்

Ø  தொல்காப்பியம் மூலம் தமிழ்மொழியின் மரபுகளை அறிதல்

கற்றல் மாதிரிகள்                     :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், அரிச்சுவடிகள், தமிழ் அகராதி

கற்றல் விளைவுகள்                  :

Ø  செய்யுளைப் படித்து அதன் நயங்களைப் போற்றும் திறன் பெறுதல்

Ø  தமிழ் மொழியின் மரபுகளை அறிந்து பயன்படுத்துதல்

ஆர்வமூட்டல்                             :

Ø  பாரதியாருக்கும் தமிழ்மொழி பற்றுக்கும் உள்ள உண்மை நிகழ்வினைக் கூறி ஆர்வமூட்டல்

Ø  உமது பெற்றோர் பெயர், அவரின் பெற்றோர் பெயர்,என முன்னோர்களின் பெயர்களைக் கேட்டறிந்து ஆர்வமூட்டல்

படித்தல்                                    :

Ø  பாடலைச் சீர் பிரித்து படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைகளுக்கு அகராதிக் கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்

Ø  நூல் வெளிகளை வாசித்தல்

Ø  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

நினைவு வரைபடம்                   :

தமிழ்மொழி வாழ்த்து



தமிழ் மொழி மரபு



 

தொகுத்து வழங்குதல்              :

 

தமிழ்மொழி வாழ்த்து

பாரதியார் குறிப்பு

Ø  ஆசிரியர் இயற்பெயர் : சி.சுப்ரமணிய பாரதியார்

Ø  புகழ் பெயர்    : சிந்துக்கு தந்தை,செந்தமிழ்த் தேனீ,புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன்

Ø  இயற்றிய நூல்கள் : சந்திரிகையின் கதை,தராசு

Ø  நடத்திய இதழ் : இந்தியா, விஜயா

Ø  பாரதியின் பன்முக ஆற்றல் : கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர்

Ø  தமிழ் எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க.

Ø  ஆகாயத்தால் சூழப்பட்ட யாவையும் அறிந்து உரைக்கும் தமிழ்மொழி வாழ்க

Ø  ஏழ்கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தமிழ் மொழி வாழ்க

Ø  உலகம் உள்ளவரை தமிழ் மொழி வாழ்க

Ø  அறியாமை என்னும் இருள் நீங்க தமிழ்மொழி வாழ்க

Ø  வானம் வரை உள்ளடங்கிய எல்லாப் பொருண்மையையும் அறிந்து மேன்மேலும் தமிழ் வாழ்க

தமிழ்மொழி மரபு

Ø  தமிழில் தோன்றிய மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்

Ø  தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்

Ø  எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது தொல்காப்பியம்.

Ø  இவ்வுலகம் நிலம்,நீர்,காற்று, தீ, வானம் என்னும் ஐந்தும் கலந்த கலவை.

Ø  உலகத்துப் பொருள்கள் யாவும் இரு திணைகளாகவும்,ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறல் தமிழ்மொழி மரபு

Ø  முன்னோர்கள் கூறிய சொற்களால்  கூறுதல் மரபு

Ø  தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

வலுவூட்டல்                  :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் பாடப்பொருளை வலுவூட்டல்

 

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  சிந்துக்குத் தந்தை எனப் போற்றப்படுபவர் _________

Ø  மிழில் தோன்றிய மிகப் பழமையான இலக்கண நூல்________

MOT :

Ø  தமிழ் எவற்றை எல்லாம் அறிந்து வளர்கிறது?

Ø  இருதிணை, ஐம்பால்கள் யாவை?

HOT

Ø  பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

Ø  நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

குறைதீர் கற்றல்                        :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்களைக் கொண்டு  பயிற்சி வழங்கி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

எழுத்துப் பயிற்சி                      :

Ø   பாட நூல் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   பாரதியார், தொல்காப்பியம் பற்றி அறிதல்

Ø   நூல் வெளிகளை பிழையின்றி வாசித்தல்

Ø   செய்யுள் பகுதியினை சீர் பிரித்து வாசித்தல்

Ø   செய்யுளில் புதிய வார்த்தைகளை அடையாளம் காணல்

Ø   செய்யுள் பகுதியில் மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்

தொடர் பணி                            :

Ø  தமிழ் மொழி பற்றி பாரதியார் இயற்றிய வேறு பாடலை எழுதி வருக

Ø  ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத் தொகுப்பு உருவாக்கி,அவற்றிற்கு வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

                                               

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post