நாள் : 27-06-2022 முதல் 01-07-2022
மாதம் : ஜூன்
வாரம் : ஜூன் – நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. எங்கள் தமிழ்
2.
ஒன்றல்ல இரண்டல்ல
கருபொருள் :
Ø செய்யுளைப் படித்து மையக் கருத்தை எடுத்துரைத்தல்
Ø பழந்தமிழகத்தில் வாழ்ந்த
வள்ளல்கள் வரலாற்றை அறிதல்
உட்பொருள் :
Ø நாமக்கல் கவிஞர் பற்றி
அறிதல்
Ø வாழ்வுக்குத் தேவையான
அன்பையும் அறத்தையும் உணர்த்தும் தமிழ்மொழியை அறிதல்
Ø உடுமலை நாராயண கவி பற்றி
அறிதல்
Ø வள்ளல்கள் பற்றியும்
அவர்களின் கொடைத்திறம் பற்றியும் அறிதல்
Ø சரளமாக வாசிக்க வைத்தல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி
கற்றல் விளைவுகள் :
Ø பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்
Ø தமிழில் உள்ள பல்வேறு
இலக்கிய வடிவங்களின் பெயர்களை பட்டியலிடுதல்
Ø தமிழுக்கு கொடை கொடுத்த
வள்ளல்கள் பற்றிய செய்திகளை திரட்டுதல்
ஆர்வமூட்டல் :
Ø மாணவர்கள் முன் வகுப்பில்
கற்ற தமிழ் பாடலைப் பாடுதல்
Ø நீ
செய்த உதவியும் நீ பிறருக்கு செய்த உதவியும் குறித்து கூறுக.
படித்தல் :
Ø செய்யுளினை சீர் பிரித்து
வாசித்தல்
Ø செய்யுளில் இடம் பெற்ற
புதியச் சொற்களை அடிகோடிடல்.
Ø புதியச் சொற்களுக்கான
பொருளை அகராதி கொண்டு அறிதல்
Ø செய்யுளின் நயங்களை அறிதல்
Ø மனப்பாடப்பகுதி செய்யுளை
இனிய இராகத்தில் பாடுதல்
Ø ஆசிரியர் குறிப்பு, நூற்
குறிப்பு வாசித்தல்
நினைவு வரைபடம் :
எங்கள்
தமிழ்
ஒன்றல்ல இரண்டல்ல
தொகுத்து வழங்குதல் :
எங்கள் தமிழ்
Ø நம் தாய் மொழி தமிழ்,அருள்
நெறிகள் நிரம்பிய அறிவைத் தரும்.
Ø பொருள் பெறுவதற்காக யாரையும்
புகழ்ந்து பேசமாட்டார், தம்மைப் போற்றாதவரையும் இகழமாட்டார் தமிழ் பயின்றோர்
Ø கொல்லாமை குறிக்கோள்,
பொய்யாமை கொள்கையாக கொண்டு வாழ அன்பும் அறமும் உதவும்.
Ø தமிழ்மொழி தேன் போன்ற
மொழி
Ø ஆசிரியர் குறிப்பு :
பெயர் :
வெ.இராமலிங்கனார்
சிறப்பு
பெயர் : நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர்
பண்புகள்
: தமிழறிஞர்,கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்
எழுதிய நூல்கள்
: மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என் கதை, சங்கொலி
ஒன்றல்ல இரண்டல்ல
ஆசிரியர் குறிப்பு
பெயர் :
உடுமலை நாராயண கவி
சிறப்பு
பெயர் : பகுத்தறிவு கவிராயர்
பண்புகள்
: தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
Ø தமிழ் மொழியின் பெருமைகள்
ஒன்றல்ல இரண்டல்ல பல.
Ø தமிழ்நாட்டின் நன்செய்
நிலவளம் ஒன்றல்ல இரண்டல்ல
Ø பகைவரை வென்றதை பாடுவது
பரணி
Ø இசைபாடாலான நூல்கள் பரிபாடல்,
கலம்பகம், எட்டுத்தொகை
Ø அகம் புறம் என சங்க இலக்கியங்கள்
Ø முல்லைக்குத் தேர் தந்து
புகழ் பெற்றான் பாரி,
Ø புலவரின் சொல்லுக்கு
தன் தலையை தந்தான் குமணன்.
Ø வள்ளல்களின் வரலாறு ஒன்றல்ல
இரண்டல்ல பலவாகும்
வலுவூட்டல் :
Ø விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் காணொளியைக் காண்பித்து வலுவூட்டல்.
மதிப்பீடு :
எளிய
வினாக்கள் :
Ø நெறி என்னும் சொல்லின்
பொருள்_______
Ø காந்திய கவிஞர் என வழங்கப்படுபவர்________
Ø பகைவரை வெற்றிக் கொண்டவரை
பாடும் இலக்கியம்_________
Ø வானில்______ கூட்டம்
திரண்டால் மழை பொழியும்.
நடுநிலை வினாக்கள்:
Ø அன்பும் அறமும் எதற்கு
உதவுகிறது?
Ø தமிழ்மொழியைக் கற்றவரின்
இயல்புகளை எழுதுக.
Ø பாடலில் உள்ள எதுகை நயங்களை
எழுதுக.
Ø பாடலில் மோனை நயங்களை
எழுதுக.
சிந்தனை வினா :
Ø கவிஞர் தமிழை ஏன் தேனுடன்
ஒப்ப்பிடுகிறார்?
Ø தமிழில் அற இலக்கியங்கள்
மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
குறைதீர் கற்றல் :
Ø
மதிப்பீட்டு
வினாக்களைக் கொண்டு பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை
மேற்கொள்ளல்
எழுத்துப் பயிற்சி :
Ø பாடநூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதுதல்
மெல்லக் கற்போர் செயல்பாடு :
Ø
செய்யுளை சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளின் நயங்களை அறிதல்
Ø
ஒரு மதிப்பெண் வினாக்களை வாசித்தல்
Ø
மனப்பாடப்பகுதியினை மனனம் செய்யும் திறன் வளர்த்தல்
தொடர் பணி :
Ø தமிழை நீங்கள் எதனோடு ஒப்பிடுவீர்கள் என்பது குறித்து எழுதி வருக.
Ø தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்கள் பெயர்களை எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை