நாள் : 04-07-2022 முதல் 08-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பேச்சு மொழியும், எழுத்து மொழியும்
2. சொலவடைகள்
3. குற்றியலுகரம், குற்றிய லிகரம்
கருபொருள் :
Ø பேச்சுமொழி,எழுத்து மொழியின் நுட்பங்களை அறிதல்
Ø சொலவடைகளில் பொதிந்துள்ள
சமூக உண்மைகளைக் கண்டறிதல்
Ø குற்றியலுகர,குற்றியலிகரச்
சொற்களை அடையாளம் கண்டு அதன் வகைகளை அறிதல்
உட்பொருள் :
Ø பேச்சு மொழி, எழுத்து
மொழி இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை,வேற்றுமை அறிதல்
Ø பேச்சுமொழி,எழுத்து மொழி
நுட்பங்களை அறிதல்
Ø சொலவடைகளில் உள்ள உண்மைகளை
அறிதல்
Ø எழுத்துகளின் வகைகள்
அறிதல்
Ø குற்றியலுகர, குற்றியலிகர சொற்களின் வகைகளை அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்
கற்றல் விளைவுகள் :
Ø பேச்சுமொழி,எழுத்து மொழியின்
நுட்பங்களை அறிதல்
Ø சொலவடைகளில் பொதிந்துள்ள
சமூக உண்மைகளைக் கண்டறிதல்
Ø குற்றியலுகர,குற்றியலிகரச்
சொற்களை அடையாளம் கண்டு அதன் வகைகளை அறிதல்
ஆர்வமூட்டல் :
Ø அன்றாடம் நாம் வீட்டிலும்,
வகுப்பிலும் எவ்வாறு உரையாடுகிறோம்? என்பதனைக் கேட்டறிந்து ஆர்வமூட்டல்.
Ø நீ
அறிந்த சில பழமொழிகளைக் கூற வைத்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
Ø தமிழ்
எழுத்துகளின் வகைத் தொகைகளை கூற வைத்து ஆர்வமூட்டல்.
படித்தல் :
Ø உரைநடைப் பகுதியினை பிழையின்றி
வாசித்தல்
Ø உரைநடைப் பகுதியினைப்
பத்திப் பத்தியாகப் பிரித்து வாசித்தல்
Ø நிறுத்தற்குறி அறிந்து
வாசித்தல்
Ø பேச்சு வழக்கில் அமைந்துள்ள
சொலவடைகளை அவ்வாறே வாசித்தல்
Ø சொலவடைகளின் உண்மைகளையும்
அதன் பொருளையும் அறிதல்
Ø எழுத்துகளின் தன்மைகளை
அறிதல்
Ø குற்றியலுகரச் சொற்களை
அறிதல்
Ø குற்றியலுகர, குற்றியலிகரச்
சொற்களை அறிந்து வாசித்தல்
Ø முக்கியப்பகுதிகளை அடிக்கோடிடல்.
Ø புதிய வார்த்தைகளைக்
கண்டு அதன் பொருள் அறிதல்
நினைவு வரைபடம் :
பேச்சுமொழியும்,
எழுத்து மொழியும்
சொலவடைகள்
குற்றியலுகரம், குற்றியலிகரம்
தொகுத்து வழங்குதல் :
பேச்சு
மொழியும், எழுத்து மொழியும்
Ø ஒருவர் கருத்தை மற்றொருவர்
அறிந்து செயல்பட உதவுவது மொழி.
Ø பேசுவதும்,கேட்பதும்
மொழியின் முதல் நிலை.
Ø எழுதுவதும் படிப்பதும்
மொழியின் இரண்டாம் நிலை
Ø மொழியின் உயிர் நாடி
பேச்சுமொழி
Ø பேசும் சூழலைப் பொறுத்து
பேச்சு மொழியின் பொருள் மாறுபடும்.
Ø வட்டார மொழி : பேசும்
மொழி இடத்திற்கு இடம் மாறுபடும். ஒரே மொழியின் வேறு வேறு வடிவங்கள் வட்டார மொழி.
Ø கன்னடம்,தெலுங்கு,மலையாளம்
போன்றவை திராவிட மொழிகளிலிருந்து பிறந்த கிளைமொழிகள்
Ø பேச்சுமொழிக்கு கையால்
எழுதப்படும் வரிவடிவம் எழுத்து மொழி.
Ø பேச்சுமொழி – உலக வழக்கு,
எழுத்து மொழி – இலக்கிய வழக்கு.
சொலவடைகள்
Ø சிறு சிறு தொடர்களாக
வட்டார மொழிகளில் பேசப்படுவது.
Ø சொலவடைகள் பேச்சு மொழியின்
அழகியலையும், பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும்.
Ø சொலவடைகளில் சில :
o
புண்ணுக்கு
மருந்து போடமுடியும். புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
o
வெளச்சலுக்கும்,
வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை
o
உழைக்கிற
மாடுதான் ஊருக்குள்ள விலைப் போகும்.
o
அட
மழை விட்டாலும்,செடி மழை விடாது
குற்றியலுகரம், குற்றியலிகரம்
Ø எழுத்து முதல் எழுத்து,
சார்பெழுத்து என இரு வகைப்படும்
Ø சார்பெழுத்துகளில் குற்றியலுகரம்,
குற்றியலிகரம் அடங்கும்
Ø தனக்குரிய ஒரு மாத்திரைலிருந்து
அரை மாத்திரை அளவாக ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.
Ø கு,சு,டு,து,பு,று –
ஆகிய ஆறும் வல்லின மெய்களின் ஏறிய உகரம் குற்றியலுகரம்.
Ø ஓசை குறையாமல் தனக்குரிய
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது முற்றியலுகரம் ( வல்ல்லின மெய்களின் மேல் ஏறாத
உகரம் )
Ø குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
Ø நெடில் தொடர் குற்றியலுகரம்,
உயிர் தொடர் குற்றியலுகரம்,ஆய்த தொடர் குற்றியலுகரம், வன்தொடர் குற்றியலுகரம், மென்
தொடர் குற்றியலுகரம், இடைத் தொடர் குற்றியலுகரம்
Ø குற்றியலிகரம் :ஒரு மாத்திரை
அளவிலிருந்து குறைந்து குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம்.
Ø குற்றியலிகரம் இரண்டு
இடங்களில் வரும்.
லுவூட்டல் :
Ø வலையொளி மூலம் தமிழ்
எழுத்துகள் பற்றிய காணொளிக் காட்சியைக் காண்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
எளிய
வினாக்கள் :
Ø மொழியின் இரு வடிவங்கள்
யாவை?
Ø சொலவடைகள் _______ தொடராக
அமையும்
Ø சார்பெழுத்துகள்
_______ வகைப்படும்.
நடுநிலை வினாக்கள்:
Ø பேச்சு மொழிக்கும் ,எழுத்து
மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
Ø உங்கள் பகுதியில் வழங்கி
வரும் சொலவடைகள் சில கூறுக.
Ø குற்றியலுகரத்தின் வகைகள்
யாவை?
சிந்தனை வினா :
Ø இலக்கியங்கள் காலம் கடந்தும்
நிற்பதன் காரணம் என்னவாக இருக்கும்?
Ø சொலவடைகளில் ஏதேனும்
ஐந்தினை தொடர்களில் அமைத்து எழுதுக.
Ø கு,சு,டு,து,பு,று ஆகிய
குற்றியலுகர எழுத்தினைக் கொண்ட ஈரெழுத்து சொற்களை எழுதி வருக.
குறைதீர் கற்றல் :
Ø மதிப்பீட்டு வினாக்களைக்
கொண்டு பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடநூல் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருக.
மெல்லக் கற்போர் செயல்பாடு :
Ø
வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை வாசித்தல்
Ø உரைப்பத்தியினை நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
Ø
ஒரு மதிப்பெண் வினாக்களை வாசித்தல்
Ø
குற்றியலுகரம்,குற்றியலிகரம்,முற்றியலுகரம் இவற்றை
அறிதல்
தொடர் பணி :
Ø பாடப்பகுதியில் கற்பவை கற்றப்பின் பகுதியில் உள்ள செயல்பாடுகளை
செய்து வருதல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை