நாள் : 27-06-2022 முதல் 01-07-2022
மாதம் : ஜூன்
வாரம் : ஜூன் – நான்காம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. இன்பத்தமிழ்
2.
தமிழ்க்கும்மி
கருபொருள் :
Ø செய்யுளின் பொருளைச் சொந்த நடையில் எழுதுதல் – கூறுதல்
Ø தமிழ் மொழியின் இனிமையை
உணர்ந்து போற்றுதல்
உட்பொருள் :
Ø செந்தமிழுக்கு பாரதிதாசன்
சூட்டியுள்ள பெயர்களை அறிதல்
Ø பாரதிதாசன் பற்றிய குறிப்பு
அறிதல்
Ø பெருஞ்சித்திரனார் பற்றிய
குறிப்பு அறிதல்
Ø கும்மி மூலம் தமிழ்மொழியின்
பெருமைகளை உணர்தல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், அரிச்சுவடிகள், தமிழ் அகராதி
கற்றல் விளைவுகள் :
Ø செய்யுளின் பொருளைச்
சொந்த நடையில் எழுதுதல் – கூறுதல்
Ø தமிழ் மொழியின் இனிமையை
உணர்ந்து போற்றுதல்
ஆர்வமூட்டல் :
Ø முன்னர் வகுப்பில் கற்ற
தமிழ்ப்பாடல்களைப் பாடச்சொல்லி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்,
படித்தல் :
Ø பாடலைச் சீர் பிரித்து
படித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கு
அகராதிக் கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
Ø நூல் வெளிகளை வாசித்தல்
Ø மனப்பாடப்பகுதியினை இனிய
இராகத்தில் பாடுதல்
நினைவு வரைபடம் :
இன்பத்தமிழ்
தமிழ்க்கும்மி
தொகுத்து வழங்குதல் :
இன்பத்தமிழ்
பாரதிதாசன்
குறிப்பு
Ø ஆசிரியர் இயற்பெயர்
: சுப்புரத்தினம்
Ø சிறப்புப் பெயர் : பாரதிதாசன்,பாவேந்தர்,புரட்சிக்கவி
Ø இயற்றிய நூல்கள் : குடும்ப
விளக்கு,பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி
Ø கருத்துகள் : பெண்கல்வி,
கைம்பெண், மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு
Ø தமிழுக்கு பாரதிதாசன்
வழங்கிய பெயர்கள் : நிலவு, அமுது, மணம்
Ø தமிழ் உயிருக்கு இணையானது
Ø சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான
நீர் போன்றது தமிழ்
Ø தமிழ் இளமைக்குப் பால்,
அது புலவர்க்கு கூர்மையான வேல்
Ø தமிழ் உயர்வுக்கு வான்,
அது அசதிக்குத் தேன்
Ø தமிழ் துணை கொடுக்கும்
தோள், அது கவிதைக்கு உறுதி மிக்க வாள்
தமிழ்க்கும்மி
பெருஞ்சித்திரனார்
குறிப்பு
o
ஆசிரியர்
இயற்பெயர் : மாணிக்கம்
o
சிறப்புப்
பெயர் : பாவலரேறு
o
இயற்றிய
நூல்கள் : கனிச்சாறு, கொய்யாக்கனி,பாவியக் கொத்து, நூறாசிரியம்
o
நடத்திய
இதழ் : தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்
Ø தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும்
பரவிட கும்மியடிப்போம்.
Ø பல நூறு ஆண்டுகளைக் கண்டது
தமிழ்
Ø தமிழ் பொய்யை அகற்றும்
மொழி
Ø தமிழ் அறியாமையை நீக்கும்
மொழி
Ø இன்பம் நிறைந்த பாடல்களைக்
கொண்டது தமிழ் மொழி
Ø வாழ்வுக்கு வழிகாட்டும்
மொழி
லுவூட்டல் :
Ø வலையொளி மூலம் தமிழ்
எழுத்துகள் பற்றிய காணொளிக் காட்சியைக் காண்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
LOT
:
Ø இன்பத் தமிழ் பாடலை எழுதியவர்
யார்?
Ø தமிழ்க்கும்மிப் பாடலை
எழுதியவர் யார்?
MOT :
Ø நீங்கள் தமிழை எதனோடு
ஒப்பிடுவீர்கள்?
Ø தமிழ்க்கும்மி பாடலின்
வழி நீங்கள் அறிந்து கொண்டவற்றை உம் சொந்த நடையில் எழுதுக
HOT
Ø வேல் என்பது ஓர் ஆயுதம்.
தமிழ் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?
Ø தமிழ்மொழி எவ்வாறு அறியாமையை
அகற்றும்?
குறைதீர் கற்றல் :
Ø
மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்களைக் கொண்டு பயிற்சி வழங்கி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்
எழுத்துப் பயிற்சி :
Ø பாட நூல் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்
மெல்லக் கற்போர் செயல்பாடு :
Ø
பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் பற்றி அறிதல்
Ø
நூல் வெளிகளை பிழையின்றி வாசித்தல்
Ø
செய்யுள் பகுதியினை சீர் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளில் புதிய வார்த்தைகளை அடையாளம் காணல்
Ø செய்யுள் பகுதியில் மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்
தொடர் பணி :
Ø நீ அறிந்த பாரதிதாசன் பாடல்களை எழுதி வருக.
Ø தமிழ் மொழியினை நீங்கள் எவ்வகையில் கொண்டு சேர்ப்பீர் என்பது
குறித்து எழுதி வருக.?
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை