நாள் : 04-07-2022 முதல் 08-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. வளர் தமிழ்
2. கனவு பலித்தது
கருபொருள் :
Ø தமிழ் மொழியின் இனிமையை
உணர்ந்து போற்றுதல்
Ø தமிழில் உள்ள அறிவியல்
செய்திகளை கடிதம் எழுதும் போக்கில் இலக்கிய வடிவத்தில் காணல்.
உட்பொருள் :
Ø தமிழ் மொழியின் தனிச்
சிறப்புகளை பட்டியலிடுதல்
Ø தன்னம்பிக்கையுடன் தனக்கான
இலக்கை உருவாக்குதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், அரிச்சுவடிகள், தமிழ் அகராதி
கற்றல் விளைவுகள் :
Ø செய்யுளின் பொருளைச்
சொந்த நடையில் எழுதுதல் – கூறுதல்
Ø
தமிழ்
மொழியின் இனிமையை உணர்ந்து போற்றுதல்
ஆர்வமூட்டல் :
Ø இன்பத்தமிழ் பாடலைப்
இனிய இராகத்தில் பாடி ஆர்வமூட்டல்
Ø உறவினருக்கு கடிதம் எழுதும்
போக்கினை கூறி ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø தமிழின் சிறப்புகளை உரைப்பத்தி
வடிவில் காணுதல்
Ø உரைப்பத்தியினை நிறுத்தற்குறி
அறிந்து படித்தல்
Ø புதிய வார்த்தைகளுக்கு
அகராதிக் கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
Ø தமிழின் சீர்மையை அறிந்து
போற்றுதல்
Ø கடிதம் எழுதும் பாங்கினை
அறிந்து வாசித்தல்
Ø கடிதத்தில் காணும் இலக்கிய
வடிவங்களை வாசித்தல்
நினைவு வரைபடம் :
வளர்தமிழ்
கனவு பலித்தது
தொகுத்து வழங்குதல் :
வளர்தமிழ்
Ø உலகில் ஆறாயிரத்திற்கும்
மேற்பட்ட மொழிகள் உள்ளன.
Ø அவற்றுள் சிறப்பு மிக்க
மொழி செம்மொழி நம் தமிழ்.
Ø தமிழ்மொழியின் இனிமை
அறிந்து பாரதியார் வியந்து பாடுகிறார்.
Ø தமிழ் மிகவும் தொன்மையான
மொழி – தொல்காப்பியம்
Ø தமிழ்மொழியை எழுதும்
முறை மிக எளிது.
Ø தமிழ் மொழி பெரும்பாலும்
வலஞ்சுழி எழுத்துகளாக உள்ளன.
Ø தமிழ் மொழி சீர்மை மிக்கது.
சீர்மை என்பது ஒழுங்கு முறை
Ø தமிழ் மொழி சங்க இலக்கியங்கள்
கொண்ட வளமைமிக்க மொழி
Ø தமிழ்மொழி தற்போது அறிவியல்
தமிழ், கணினித் தமிழ் என வளர் மொழியாக வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.
Ø கணினிகளிலும் தமிழ் மொழியைப்
பயன்படுத்தும் விதமாக அறிவியல் தொழில் நுட்ப
மொழியாக உள்ளது.
கனவு பலித்தது
o
கடிதம்
எழுதும் பாங்கினை அறிதல்
o
கடிதம்
எழுதும் நடைமுறைகளை அறிதல்
o
உலகம்
ஐந்து பூதங்களால் ஆனது – தொல்காப்பியர்
o
உலக
உயிர்களை வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்
o
அறிவியல்
செய்திகளை குறிப்பிடும் நூல்கள் : முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது,
திருப்பாவை
Ø மருத்துவத் துறை சார்ந்த
குறிப்புகளைக் கொண்ட நூல்கள்
Ø பதிற்றுப்பத்து, நற்றிணை
லுவூட்டல் :
Ø வலையொளி மூலம் தமிழ்
எழுத்துகள் பற்றிய காணொளிக் காட்சியைக் காண்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
LOT
:
Ø நாம் சிந்திக்கவும்,
சிந்தத்தை வெளிப்படுத்த உதவுவது ______
Ø உலகில் உள்ள மொழிகளின்
எண்ணிக்கை_____
Ø உலகம் ஐம்பூதங்களால்
ஆனது எனக் கூறியவர் _______
Ø உலக உயிர்களை எவ்வாறு
வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்?
MOT :
Ø தமிழ் எழுத்துகளின் எண்களை
வரிசைப்படுத்துக,
Ø பூவின் நிலைகளை தமிழ்
எவ்வாறு சீர்மைப்படுத்தியுள்ளது?
Ø சுறா மீன் குத்தியதால்
ஏற்பட்ட புண்ணை சரி செய்ததைக் குறிப்பிடும் நூல் ?
Ø கலீலியோ கருத்தினை வெளிப்படுத்தும்
நூல்_______
HOT
Ø மாற்றத்திற்கு ஏற்ப தன்னைப்
புதுப்பித்துக் கொள்ளும் மொழி தமிழ் என்பது குறித்து நீ கூறும் கருத்துகள் யாவை?
Ø உன் எதிர்கால கனவுக்
குறித்து உன் உறவினர்களுக்கு கடிதத்தின் மையக் கருத்தினைக் கூறுக.
குறைதீர் கற்றல் :
Ø
மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்களைக் கொண்டு பயிற்சி வழங்கி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்
எழுத்துப் பயிற்சி :
Ø பாட நூல் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்
மெல்லக் கற்போர் செயல்பாடு :
Ø
உரைப்பத்தியினை வாசித்தல்
Ø
வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை வாசித்தல்
Ø
உரைப்பத்தியின் நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்
தொடர் பணி :
Ø உங்கள் உறவினர்களில் தமிழ் தெரியாத உறவினர்களுக்கு நீ எவ்வகையான
தமிழ்ச்சொற்களை கூறுவாய் அவற்றைப் பட்டியலிடுக.
Ø உங்கள் கனவு குறித்து உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுக.
________________________________________