ஆறாம் வகுப்பு
தமிழ் – பணித்தாள்
பருவம் : 1 இயல் : 1
பாடம் : இன்பத்தமிழ் மதிப்பெண்கள் : 25
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5×1=5
1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்
அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள் ஈ) தமிழ்எங்கள்
5. ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
அ) அமுது + தென்று ஆ) அமுது + என்று இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
6. 'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
ஆ) இன்பத்தமிழ் - பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக. 4×1=4
1. விளைவுக்கு – பால்
2. அறிவுக்கு - வேல்
3. இளமைக்கு - நீர்
4. புலவர்க்கு - தோள்
இ) ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக. 2×1=2
(எ.கா.) பேர் - நேர்
ஈ) குறுவினா . 2×1=2
1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை? 2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
உ) சிறுவினா . 3×2=6
1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
ஊ) சிந்தனை வினா 6×1=6
வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது ?
ஆக்கம் :
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்
பணித்தாள் - PDF பெற