இயல் – 6
திருக்குறள்
அ) குறுவினா:-
1. கரப்பிடும்பை
இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக:-
கரப்பிடும்பை
இல்லார் – தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக்
கூறாதவர்.
2. தஞ்சம்
எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும்
எழுதுக.
சீர் |
அசை |
வாய்பாடு |
தஞ்/ சம் |
நேர் – நேர் |
தேமா |
எளி/ யர் |
நிரை – நேர் |
புளிமா |
பகைக்/ கு |
நிரை – நேர் |
புளிமா |
3. வறுமையின்
காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறிளின் கருத்து
என்ன?
ஏளனம் செய்யாமல்
பொருள் கொடுப்பவரைக் காணும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
4. பின்
வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்தால்
கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்
v
கூரான ஆயுதம் - உழைத்தால்
கிடைத்த ஊதியம்.
v
பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் உழைத்ததால் கிடைக்கும்
ஊதியமே ஆகும்.
ஆ) சிறு
வினா
1. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்கு கூறிய இலக்கணங்கள்
நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
·
தொழில் செய்வதற்கு தேவையான கருவி,அதற்கு ஏற்ப காலம்,செயலின்
தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும்
பொருத்தமாக அமைகிறது.
·
மனவலிமை,குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல்,நூல்களைக்
கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.
·
இயற்கையான நுண்ணறிவு,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும்
நடைபெறாது
·
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும்
உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.
2. பலரிடம் உதவி பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும்
அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில்
வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
· மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய்,பொருந்தும் பண்பு இல்லாதவராய்,பிறருக்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.
இயல் - 6 திருக்குறள் - இளந்தமிழ் சிறப்பு வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள் காத்திருக்கவும்