இளந்தமிழ்
பாடத்திற்கான வழிகாட்டி
மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் – 6
நிலா முற்றம்
அ) பலவுள் தெரிக:-
1. குளிர் காலத்தைப் பொழுதாக்க் கொண்ட நிலங்கள்__________________
அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்
ஆ)குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
2. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். – இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
ஆ) ஒயிலாட்டத்தில் ஒரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.
இ) ஒயிலாட்டம் ஒரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.
ஈ) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
3. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந்தால்
4. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக் கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
அ) கரகாட்டம் என்றால் என்ன?
ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?
இ) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
ஆ. குறு வினா.
1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள்,கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
முதற்பொருள்:
Ø நிலம் – காட்டில்
Ø பெரும் பொழுது - மழைக்காலம்
Ø சிறுபொழுது - மாலை
கருப்பொருள்:
Ø உணவு - வரகு
2. “நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக:-
சேகர் தான் பார்த்த அர்ஜூனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக அவனிடம் கூறினான்.
3. உறங்குகின்ற கும்பகன்ன’ எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
· . கும்பகர்ணனே எழுந்திடுவாய்!ஏழுந்திடுவாய்!
· கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய்.
4. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.
5. கீழ் வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்
முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
வெற்பர்கள் வயலில் உழுதனர்.
தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
இ) சிறு வினா
1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய விதத்தை விளக்குக.
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது
· அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன .
· இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன
· நெற்றியில் சுட்டி பதிந்தாடுகின்றன.
· காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்
நவீன கவிதை
கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்
காம்பழுகிப் போகுமின்னு
விரலாலே பூவடுத்தா – மாரிக்கு
வெம்பி விடுமென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்
தாங்கி மலரெடுத்தார்
நாட்டுப்புறப் பாடல்
நவீன கவிதை
நாட்டுபுறப் பாடல்
1. பூ பெண்களோடு ஒப்பிடப்படுகிறது.
2. பூக் காம்புகள் முறிவது போல் பெண்களின் கழுத்து முறிகிறது.
3. தளர பிணைக்கும் போது பூ நழுவது போல் பெண்கள் தளர்ந்தால் வாழ்வு நழுவும்.
4. வருந்தாமல் சிரிக்கும் பூவைப் போல் பெண்கள் வருத்தத்தை சுமையாக கருதாது குடும்பத்தைக் காப்பாள்.
1. பெண் தெய்வமான மாரிக்கு பூப்பறிக்கும் விதம் பற்றி கூறுகிறது.
2. கைகளால் பூப்பறித்தால் காம்புகள் அழுகும். அதனால் கையால் பூப் பறிக்கவில்லை.
3.விரலால் பறித்தால் பூ வெம்பும் என்பதால் பூப்பறிக்கவில்லை.
4. தங்கத் துரட்டிக் கொண்டு மாரிக்கு பூக்களால் பறிக்கப்பட்டது.
3. “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
· கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன.எனினும் மீன் பிடித்தல், உப்பு காய்ச்சுதல் தொழில்கள் நடைபெறுகின்றன.
· மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.எனினும் காபி,தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
· நிலப்பகுதிகளில் வீடுகள்,தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. எனினும் உழவுத் தொழில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
4. படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
1. காலில் சலங்கை கட்டி ஆடும் நிகழ்கலைகள் எவை?
கரகாட்டம், தேவராட்டம்
2. தலையில் கரகம் வைத்து ஆடும் நிகழ்கலை எது?
கரகாட்டம்
ஈ) நெடுவினா:-
1 நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்கு பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
பாராட்டுரை
நெகிழ்ப் பைகளின் தீமை விழிப்புணர்வு
இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.
அன்புடையீர் வணக்கம்,
எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகைத் தந்து பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளியின் சார்பாக வணக்கம்.
நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.
நெகிழிப்பைகள் மூலம் மனிதர்களுக்கு புற்றுநோய் வரக்கூடும் என்பதனை அழகாக எடுத்துரைத்தமைக்கு பாராட்டுகள்.
நெகிழிகளை எரிப்பதால் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமையை அழகாக எடுத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த பாரட்டுகள்.
இதன் மூலம் எங்கள் பள்ளி மாணவர்கள் இனிமேல் நெகிழியைப் பயன்படுத்தமாட்டோம் என உறுதிக் கொண்டுள்ளோம்.
நன்றி.
நிகழ்கலை வடிவங்கள்
நிகழும் இடங்கள்
ஒப்பனைகள்
சிறப்பும்,பழமையும்
அருகி வரக் காரணம்
நாம் செய்ய வேண்டுவன
நிகழ்கலை வடிவங்கள் :
சமூக பண்பாட்டுத் தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள். பழந்தமிழ் மக்களின் கலை,அழகியல்,புதுமை ஆகியவற்றை அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும் நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன.
நிகழும் இடங்கள் :
நிகழ்கலைகள் பொதுவாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நிகழ்த்தப்படும். கோயில் திருவிழாக்களில் இவ்வகை கலைகளை நாம் காணலாம்.
ஒப்பனைகள் :
பல்வேறு விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர். தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள், மன்னர்கள் போன்ற பல்வேறு விதமான ஒப்பனைகளை காணலாம்.
சிறப்பு, பழமையும்
வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது, பொம்மலாட்டம், கையுறை கூத்து, தெருக் கூத்து போன்றவை முன்னோர்களின் பழமை வாய்ந்த கலைகள் ஆகும்.
அருகி வரக் காரணம்:
· நாகரிக வளர்ச்சி
· கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லை
· திரைத்துறை வளர்ச்சி
· அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி
நாம் செய்ய வேண்டுவன:
· நமது இல்லங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது.
· நமது ஊர் கோவில் திருவிழாக்களில் இக்கலைகளை ஊக்கப்படுத்துவது.
· ஊடகங்களில் இக்கலைகளைப் பற்றி விளம்பரப்படுத்துவது.
3. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட....... இவ்வுரையைத் தொடர்க.
Ø மயில்கள் அழகுற ஆடுகிறது.
Ø தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.
Ø மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.
Ø குவளை மலர்கள் கண்கள் விழித்து பார்ப்பது போல உள்ளது.
Ø அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.
Ø வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசைப் போல இருக்கிறது.
மொழியை ஆள்வோம்
அ) மொழி பெயர்க்க:-
Koothu
Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the steets.It is performed by rural artists.The stories are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu is very popular amoung rural areas.
கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாக “ கூத்து குழு “ ஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை
ஆ. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )
விடை: அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்
2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார்.புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.(தொடர் சொற்றொடராக மாற்றுக )
விடை: இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்து,புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்
3. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு,காலில் சலங்கை அணிந்து கொண்டு,கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர். ( தனிச் சொற்றொடர்களாக மாற்றுக )
விடை: ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொள்வர்.காலில் சலங்கை அணிந்து கொள்வர். கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
4. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )
விடை: கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
5. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன்,அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.( தனிச் சொற்றொடராக மாற்றுக )
விடை: ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றதும் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
இ) பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-
புதிர்
உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
விடை
தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள்.இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால்,கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!.
பிறமொழிச் சொல்
தமிழ்ச்சொல்
பிறமொழிச் சொல்
தமிழ்ச்சொல்
கோல்ட் பிஸ்கட்
தங்கக்கட்டி
வெயிட்
எடை
யூஸ்
பயன்படுத்தி
எக்ஸ்பெரிமெண்ட் ரிப்பீட்
சோதனை மீண்டும்
ஆல் தி பெஸ்ட்
வாழ்த்துகள்
ஈக்வலாக
சரிசம்மாக
பட்
ஆனால்
ஆன்சரை
விடையை
ஈ) நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக:-
பாடல்
பாடல் எழுந்த சூழல்
பாடறியேன் படிப்பறியேன் – நான் தான்
பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் – நான் தான்
எழுத்துவகை தானறியேன்
படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா – நான் தான்
பங்காளிய ஏன் தேடுறேன்
எழுத நல்லா தெரிஞ்சிருந்தா – நான் தான்
எதிராளிய ஏன் தேடுறேன்
நாலெழுத்துப் படிச்சிருந்தா – நான் தான்
நாலு தேசம் போய்வருவேன்
நாலு பக்கம் வரப்புக்குள்ள – தெனமும்
நான் பாடுறேன் தெம்மாங்கு தான்
படிக்காதவர் தனது ஏக்கத்தை சித்தரிக்கும் விதமாக பாடல் அமைந்துள்ளது
உ) மனுதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க;-
Ø வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
Ø பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
Ø பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
Ø பூக்களிடம் விழுவது மனிதர்களே!
Ø தென்றலின் வருடலில்
Ø பூக்களிடம் விழுவது மனிதர்களே
Ø இறகை விட மென்மைக் கொண்ட
Ø பூக்களில் மயங்குவது மனிதர்களே.
ஊ) கட்டுரை எழுதுக.
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
குறிப்புச்சட்டகம்
முன்னுரை
பொருட்காட்சி
நுழைவுச் சீட்டு
பல்துறை அரங்கம்
அங்காடிகள்
பொழுதுபோக்கு
முடிவுரை
முன்னுரை :
எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.
பொருட்காட்சி :
மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.
நுழைவுச் சீட்டு:
பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்துறை அரங்கம் :
அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.
அங்காடிகள்:
வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.
பொழுதுபோக்கு :
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.
முடிவுரை:
எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.
மொழியோடு விளையாடு
அ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது
3. வெள்ளந்தி மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும் புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல் கருத்து விடும்
ஆ. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை,கவிழும்,விருந்து
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் மரவீடு
2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்
3. மலைமுகட்டில் மேகம் தங்கும் அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்
4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவை கூத்து சொல்லும்.
5. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.
இ) அகராதியில் காண்க.
தால்
நாக்கு
உழுவை
புலி
அகவுதல்
குரல் எழுப்புதல்
ஏந்தெழில்
மிகுந்த அழகு
அணிமை
அண்மை,பக்கம்
ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது
இந்தக் காட்சி
கலை என் சிறப்பைப் பற்றி எழுது என்றது
கலைஞர் என் கலையைப் பற்றி எழுது என்றார்
நான் எழுதுகிறேன் கலையே உயிர் என்று
உ) செயல் திட்டம்
பல்வேறு நிகழ்கலைகள் குறித்து தொகுத்து எழுதுக.
கரகாட்டம் – தலையில் கரகம் வைத்து ஆடுவது
ஒயிலாட்டம் – இரு வரிசையில் நின்று ஒரே நிறத் துணியை முண்டாசு போல கட்டி ஆடுவது
தேவராட்டம் - வானத்து தேவர்கள் ஆடியது. ஆண்கள் மட்டும் ஆடுவது
பொய்க்கால் குதிரையாட்டம் – போலச் செய்தல் பண்பை அடிப்படையாக கொண்டது. இது புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என அழைக்கப்படும்.
தப்பு ஆட்டம் – தோற் கருவிக் கொண்டு இசைத்து இசைக்கேற்ப ஆடுவது.
புலி ஆட்டம் - புலிப் போல் வேடமிட்டு ஆடுவது.
தெருக்கூத்து – நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்படுவது.
ஊ ) நிற்க அதற்குத் தக.
அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள்.ஒரு புறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள்….இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்
நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்கவும்,வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
1. பிறந்தநாள் விழாவில் மயிலாட்டம் நிகழ்த்துதல்
2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துதல்
3. கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், காவடியாட்டம் நிகழ்த்துதல்
4. விடுமுறை காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்துதல்.
5. விளையாட்டு விழாக்களில் புலியாட்டம் நிகழ்த்துதல்.
ஏ ) கலைச் சொல் அறிவோம்
Aesthetics
அழகியல்,முருகியல்
Artifacts
கலைப்படைப்புகள்
Terminology
கலைச்சொல்
Myth
தொன்மம்
இயல்- 6 க்கான இளந்தமிழ் வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள் காத்திருக்கவும்