10TH - TAMIL - UNIT - 5 - SLOW LEARNERS GUIDE

 


 இளந்தமிழ்

பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் – 5

 மணற்கேணி

) பலவுள் தெரிக:-

1.‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

2. அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

) அருமை + துணை    ) அரு + துணை          ) அருமை + இணை

) அரு + இணை

3.இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா. அதோ,அங்கே நிற்கும்என்று மற்றொருவர் கூறியது ___________ விடை.

) ஐய வினா,வினா எதிர் வினாதல்           ) அறிவினா,மறைவிடை

) அறியா வினா,சுட்டு விடை               ) கொளல்வினா,இனமொழிவிடை

4. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

) தமிழ்             ) அறிவியல்      ) கல்வி          ) இலக்கியம்

5. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்______இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்________

அ) அமைச்சர், மன்னன்                ஆ) அமைச்சர், இறைவன்            

இ) இறைவன், மன்னன்              ஈ) மன்னன்,இறைவன்

ஆ) . குறு வினா

1. “ கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல் “

இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

கழிந்த பெரும் கேள்வியினான் – குசேல பாண்டியன்

காதல் மிகு கேண்மையினான் – இடைக்காடனார்

2..செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

Ø  அறிவைத் திருத்தி சீராக்குவோம்

Ø  கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்

3. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன்

அமர் – பகுதி

த்(ந்) – சந்தி

ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி

4. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா?இல்லையா?

  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியாவினா

மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? – ஐய வினா

இ). சிறு வினா:-

1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்ததது ஏன்? விளக்கம் தருக.

·            மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

·            இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்

·            இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்

·            மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்

·            மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்

2. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

Ø  கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்

Ø  சமூகத்தில் நற்பெயருடன் இருக்க கல்வி அவசியம்.

Ø  பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம்

Ø  கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும்

3. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

        ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ( translation ) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது;ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது  ( Interpreting ) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளருக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் ( Headphone )  கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலி வாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன்  உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்.

இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

1. எந்த அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது?

2. மொழி பெயர்ப்பு என்பது யாது?

3. ஒரு மொழியினை மொழிப்பெயர்க்க ஒலியை உள்வாங்க பயன்படும் கருவி எது?

4. ஐ.நா அவையில் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது?

5. மொழி பெயர்ப்பில் காதணி கேட்பியின் செயல்பாடு யாது?

2. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.-இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

Ø  ஆற்றுநீர் பொருள்கோள்

Ø  விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது.

Ø  பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது.

 மொழியை ஆள்வோம்

) மொழி பெயர்ப்பு:-

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக:-

யாழிசை

It’s like new lute music

அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன்

பேத்தி,

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே.

               பாரதிதாசன்

Wondering at the lute music

Coming from the chamber

Entered I to look up to in still

My grand – daughter

Learning by rote the verses

Of a didactic compilation

 

Translated by Kavingar Desini

 

Lute music

யாழிசை

Grand - daughter

பேத்தி

chamber

அறை

rote

நெட்டுரு

To look up

பார்த்தல்

Didactic compilation

நீதிநூல் திரட்டு

ஆ. அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.

வேர்ச்

சொல்

எழுவாய்த் தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

விளித் தொடர்

வேற்றுமைத் தொடர்

ஓடு

அருணா ஓடினாள்

ஓடிய அருணா

ஓடி வந்தாள்

அருணா ஓடாதே!

அருணாவிற்காக ஓடினாள்

சொல்

அம்மா சொன்னார்

சொன்ன அம்மா

சொல்லிச் சென்றார்

அம்மா சொல்லாதே!

கதையைச் சொன்னார்

தா

அரசர் தந்தார்

தந்த அரசர்

தந்து சென்றார்

அரசே தருக!

புலவருக்குத் தந்தார்

பார்

துளிர் பார்த்தாள்

பார்த்த துளிர்

பார்த்துச் சிரித்தாள்

துளிரே பார்க்காதே

துளிருடன் பார்த்தேன்

வா

குழந்தை வந்தது

வந்த குழந்தை

வந்து பார்த்தது

குழந்தையே வா

குழந்தைக்காக வந்தாள்

 

இ. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

விடை: அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

விடை: நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

விடை: இன்பத் துன்பம் நிறைந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட    பாடங்களைக் கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

விடை: சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

விடை: சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

ஈ. மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு : நூலின் தலைப்பு – நூலின் மையப் பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்

 

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

 

நூலின் தலைப்பு:

                   பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                      சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

                   நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                   பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                   விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                   சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                   ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                   வீரமாமுனிவர்.

உ ) படிவத்தை நிரப்புக:-

மொழியோடு விளையாடு

) புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க:-

Ø    தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை

Ø    பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

Ø    சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

Ø    சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

Ø    வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன்

Ø  .நான் யார்?________காகம்_____________

. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ____புதையல் _____யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ புதைத்தல் __ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)

2. காட்டு விலங்குகளைச் ____ சுடுதல் ____தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் _______ சுட்டல் ____திருத்த உதவுகிறது.(  சுட்டல்,சுடுதல் )

3. காற்றின் மெல்லிய __ தொடுதல் ____ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ____ தொடுத்தல் ____பூக்களை மாலையாக்குகிறது.

( தொடுத்தல்,தொடுதல் )

4. பசுமையான ____ காட்சி ___ஐக்____ காணுதல் ______ கண்ணுக்கு நல்லது.( காணுதல்,காட்சி)

5. பொது வாழ்வில்__ நடித்தல்____கூடாது ____நடிப்பு ____இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. ( நடித்தல்,நடிப்பு )

. அகராதியில் காண்க.

மன்றல்

திருமணம்,மணம் ( வாசனை )

அடிச்சுவடு

காலடிச்சுவடு

அகராதி

அகரவரிசையில் பொருள் தரும் நூல்

தூவல்

தூவானம்,இறகு,எழுதுகோல்

மருள்

மயக்கம்,பேய்,வியப்பு

ஈ ) செயல் திட்டம்:

“பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ – குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெற வேண்டி விண்ணப்பம் வரைக.

அனுப்புநர்

அமுதன்.வெ

10, ஆம் வகுப்பு,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி,சேலம்.

பெறுநர்

தலைமை ஆசிரியர் அவர்கள்,  

அரசு உயர் நிலைப்லைப்பள்ளி,

கோரணம்பட்டி,சேலம.

ஐயா,

பொருள்: பள்ளித் தூய்மை - செயல்திட்ட வரைவு - ஒப்புதல் வேண்டுதல் - சார்பு.

நமது 'பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்' குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதனைச் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 செயல்திட்ட வரைவு :

1) வகுப்பறைத் தூய்மை – தினமும் காலை 8.00 மணி

2) வளாகத் தூய்மை - தினமும் மாலை 5.00 மணி

3) குடிநீர்த் தொட்டி பராமரிப்பு - திங்கள், வெள்ளி

4) வீணாகும் நீரை – செடிகளுக்கு செல்லுமாறு மாற்றிவிடுதல்

இடம்: கோரணம்பட்டி

நாள்:27 /06 /2021

                                                                                                                                                                                    இப்படிக்கு,

                                                                                                                                                                தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                                                                            அமுதன்.வெ

உறைமேல் முகவரி:

பெறுநர்:

தலைமை ஆசிரியர் அவர்கள்,  

அரசு உயர் நிலைப்பள்ளி,

கோரணம்பட்டி,சேலம்..

உ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி                                                     

மரம் என் அழிவைப் பற்றி எழுது என்றது

மனிதன் என் அறியாமையைப் பற்றி எழுது என்றான்                                                               நான் எழுதுகிறேன்

மரமே வரம் என்று                                                

ஊ) நிற்க அதற்குத் தக.

பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

 

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

 

) கலைச் சொல் அறிவோம்.

Emblem

சின்னம்

Thesis

ஆய்வேடு

Intellectual

அறிவாளர்

Symbolism

குறியீட்டியல்

 இயல் -5க்கான இளந்தமிழ் வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post