10TH - TAMIL - UNIT 4 -SLOW LEARNERS GUIDE

 

இளந்தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்புதமிழ்

www.tamilvithai.com

www.kalvivithaigal.com

இயல் – 4

நான்காம் தமிழ்

) பலவுள் தெரிக:-

1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்           

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்       

இ) மருத்துவரிடம் நோயாளி         

ஈ) நோயாளியிடம் மருத்துவர்

2. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.

தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : 1. கண்காணிப்பு கருவி,அசைவு நிகழும் பக்கம் தன்     பார்வையைத் திருப்புகிறது.

                  2. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

அ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

3. பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும் ‘என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்                    ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியும் ஈ) வானத்தையும் பேரொலியையும்

4. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி 

ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி     

இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி

ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

5. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா             ஆ) சீலா             இ) குலா             ஈ) இலா

) குறு வினா :-

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செய்ற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா : செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

 1. கண்காணிப்பு காமிராக்கள்                 2. நவீன திறன்பேசி

2. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன்இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

            உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் கால வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

          மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

4. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி விளக்குக,

நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று

5. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.                                     

) சிறு வினா

1. மாளாத காதல் நோயாளன் போல்என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

            மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

2. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன் வைத்து எழுதுக.

·         ஒரளவு மேம்படுத்துகின்றன.

·         மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

·         மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

·         மனிதன் இயந்திரதனமான வாழ்வை வாழ்கின்றான்

3. மனிதர்களின் மூளையைப் போன்றது செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு “ எதிர்கால தொழில் நுட்பம் “ என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில் நுட்பம்

திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.

·         நம்முடைய கட்டளைக்கு இணங்க மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கும்.

·         செயலிகளை திறக்கும்

·         நாம் கேட்பதை உலாவியில் தேடும்.

·         கவிதைகள்,கட்டுரைகள் தேடிக் கொடுக்கும்.

4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்என்றார். “இதோ சென்றுவிட்டேன்என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக

குட்டி

மரபு வழுவமைதி

இலச்சுமி கூப்பிடுகிறாள்

திணை வழுவமைதி

இதோ சென்றுவிட்டேன்

கால வழுவமைதி

என்னடா விளையாட வேண்டுமா?

திணை வழுவமைதி

நீயும் இவனும் விளையாடுங்கள்

திணை வழுவமைதி

நீரைக் குடித்தாள்

திணை வழுவமைதி

அவனை

திணை வழுவமைதி

நெடுவினா :

1.          ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஊர்திகளில் வெளிப்பாடு

கல்வித்துறையில்

பிற செயல்பாடுகள்

முடிவுரை

முன்னுரை :-

            ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? என்றால் அதன் வெளிபாடு அதிகமாக இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

ஊர்திகளில் வெளிபாடு :

            எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம்

·         போக்குவரத்து நெரிசல் குறையும்

·         பயண நேரம் குறையும்

·         எரிபொருள் மிச்சமாகும்.

கல்வித்துறையில் :

          கல்வித்துறையில் இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே கண்டு கற்கலாம்

பிற செயல்பாடுகள்:

·         மனிதர்களிடம் போட்டியிடலாம்

·         பல்வேறு இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை வழங்கலாம்.

·         சாக்கடைகளை சுத்தம் செய்யும் இயந்திர மனிதன் கண்டுப்பிடிக்கலாம்.

முடிவுரை :

          செயற்கை நுண்ணறிவு கருவிகளால் மனிதர்களின் வேலைபளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

2. நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்…….

·         உலகம் உருவான தோற்றத்தை காண முடிகிறது.

·         அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேரொலியுடன் தோன்றுகிறது.

·         பருப்பொருள்கள் சிதறும் படியாக பல ஊழிக்காலங்கள் கடந்தன.

·         நெருப்புப் பந்து போல புவி உருவாகி ஊழிக்காலம் தொடங்கியது.

·         பூமி குளிரும் படி மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது.

·         பின், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கான ஏற்ற சூழல் தோன்றியது.

·         உயிர்களுடன் நிலைபெறும்படியான ஊழிக்காலம் தொடர்கிறது.

3. “ அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் “ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பேரண்டம்

கருந்துளைகள்

தலைவிதி

திரும்புதல்

முடிவுரை

 

முன்னுரை :

            அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்க் என்பவருடன் விண்வெளி பயணம் மூலம் கிடைத்த கருத்தையும், அனுபவத்தையும் இக்கட்டுரை வாயிலாக காணலாம்.

பேரண்டம் :

          இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதற்கான சான்றுகளை கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார்.

கருந்துளைகள்:

          ஞாயிறு ஒரு விண்மீன். ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்துக் கொண்டே செல்கிறது என விளக்கினார்.

கருந்துளைகள்:

          விண்மீனின் ஈர்ப்பெல்லைக்களுள் செல்கிற எதுவும், ஒளிக் கூட தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை என்பதனை ஹாக்கின் விளக்கினார்.

தலைவிதி :

          தலைவிதி ஒன்று இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருப்புறமும் பார்த்துக் கடக்கிறீர்கள்? எனக் கேட்டு எங்களை சிந்திக்க வைத்தார்.

திரும்புதல் :

          ஹாக்கின் அவர்களுடன் விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும் அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம்.

முடிவுரை :

          ஹாக்கின் விண்வெளிப் பயணம் விண்வெளியைப் பற்றி அறிந்துக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.

 

                    மொழியை ஆள்வோம் - 1

) மொழிபெயர்க்க:-

Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.

தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தைச் செலவிடுகிறது.

தேவி: யாருக்குத் தெரியும்? நம்நாடு எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவுகளையும் செலுத்தலாம்.

மலர்: நான் படித்திருக்கிறேன். வருங்காலத்தில் சில நாடுகள் இதைப் போன்ற செயற்கைக் கோள்களை ஏவ இருக்கின்றனர் எனப் படித்து இருக்கிறே

தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவுகளை ஏவினால்,இயற்கைப் பேரழிவின் போது மிந்தடை ஏற்படக்கூடிய இடங்களில் ஒளியைப் ஏற்படுத்தித் தர இயலும்

.

ஆ. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக:-

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?

காகத்திற்குக் காது உண்டா? அதற்கு காதுக் கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு.செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளுக்கு உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது கேட்கும்.

பறவைகளுக்குப் பார்த்தல்,கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும், நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.

இ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-

) இயற்கைசெயற்கை

இயற்கைக் காடுகளில் செல்ல செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.

) கொடு - கோடு

கொடுப்பதற்குக் கோடு இடக் கூடாது

) கொள் - கோள்

கோள்களை அறிந்து கொள் என ஆசிரியர் கூறினார்.

) சிறு - சீறு

சிறு பூனையும் சீறும்

) தான் - தாம்

தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும்

) விதி - வீதி

விதி அவனை வீதியில் கொண்டு வந்து சேர்த்தது.

ஈ) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

          பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

 

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

            மீண்டும் மீண்டும்

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

            தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

            பெய்மழை

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

            நீருக்கும் ஆற்றல் உண்டு.

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

            நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு

உ). நயம் பாராட்டுக:-

                   நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

                             நேர்ப்பட வைத்தாங்கே

                   குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

                             கோல வெறிபடைத்தோம்;

                   உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

                             ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

                   பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

                             பாடுவதும் வியப்போ?              - பாரதியார்

திரண்ட கருத்து:

Ø  நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம்.

Ø  அமுத குழம்பினைக் குடிப்போம்.

Ø  பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்.

Ø  பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையைக் கேட்போம்.

மையக் கருத்து:

Ø     நிலவிலும்,நட்சத்திர ஒளியிலும்,காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த பலாவினை சுவைத்து இன்பம் பெறுவோம்.

மோனை:

            முதலெழுத்து ஒன்றி வருவது மோனை

                        நிலாவையும்நேர்ப்பட

எதுகை :

            முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகை.

                        நிலாவையும்       -          குலாவும்

இயைபு :

            செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருவது.   

            வெறிபடைத்தோம்            -          மகிழ்ந்திடுவோம்

அணி நயம்:

            இப்பாடலில் மனதை சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இதில் உருவக அணி வந்துள்ளது.

தலைப்பு:

            இயற்கை இன்பம்

ஊ) கட்டுரை எழுதுக:-

          தலைப்பு – ‘ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்’

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

          விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

            பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி : கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

          மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

மொழியோடு விளையாடு

) தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-

1. நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின் பயன்____கற்றல்___

2.விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை_____கரு__

3.கல் சிலை ஆகுமெனில்,நெல் _______சோறு____ ஆகும்.

4.குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து _____எழுத்து____

5.மீன் இருப்பது நீரில்;தேன் இருப்பது________பூவில்________

ஆ). குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:-

குறிப்புஎதிர்மறையான சொற்கள்

மீளாத் துயர்

மீண்ட இன்பம்

கொடுத்துச் சிவந்த

கொடுக்காது கருத்த

மறைத்துக் காட்டு

விரித்து மூடு

அருகில் அமர்க

தொலைவில் நிற்க

பெரியவரின் அமைதி

சிறியவரின் கூச்சல்

புயலுக்குப் பின்

மழைக்கு முன்

           

                                   

 

 

 

 

 

 

 

இ) அகராதியில் காண்க:-

அவிர்தல்

ஒளிர்தல்,பீறுதல்

அழல்

நெருப்பு,வெப்பம்

உவா

முழுமதி நாள்,கடல்

கங்குல்

இரவு,இருள்

கனலி

சூரியன்,நெருப்பு

 

ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

 என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி திறன்பேசி என் ஆளுமையைப் பற்றிஎழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

 அடிமையாகாதே என்று



 

உ) செயல் திட்டம்:

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் சில இயங்கி வருகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள் சில உலகினில் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய குறிப்பு எழுதி வருக.

வணிக நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்

·         வாடிக்கையாளர்கள் பொருட்களை அறிந்துக் கொள்ளும் வண்ணம் திரைகள்

·         எந்தப் பொருள் எப்பகுதியில் இருக்கிறது எனக் காட்டுகிறது.

·         திருடர்களிடமிருந்து காக்க ஆளறி கருவிகள் இயங்குகிறது.

·         பொருட்களின் விலையினை பட்டியலிடுகிறது.

ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள்

·         மனிதன் செய்யும் வேலைகளை ரோபோக்கள் செய்கிறது.

·         மனிதனால் செய்ய முடியாத வேலையை செய்ய ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

·         சாக்கடைகளைச் சுத்தம் செய்ய ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஊ) கலைச் சொல் அறிவோம்:

Nanotechnology

மீநுண் தொழில்நுட்பம்

Biotechnology

உயிரித் தொழில் நுட்பம்

Ultraviolet rays

புற ஊதாக் கதிர்கள்

Space Technology

விண்வெளித் தொழில் நுட்பம்

Cosmic rays

விண்வெளிக் கதிர்கள்

Infrared rays

அகச் சிவப்புக் கதிர்கள்

 

 

ஏ) நிற்க அதற்குத் தக:

தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.

 

1.குழு விளையாட்டுகள் விளையாடுதல்.

2.உலக நிகழ்வுகளைப் பற்றி  கலந்துரையாடுதல்.

3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல்.

4நூல்களைப் படித்தல்.

5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல்

இயல் 4க்கான இளந்தமிழ் சிறப்பு வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள் காத்திருக்கவும் 

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

வலைதளத்தில் காண :



                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                                                                                 www.tamilvithai.com   

                                                     

மனப்பாடப்பாடலை இனிய


இராகத்தில் கேட்க

                                         

( LIKE, SHARE, SUBSCRIBE )


 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post