இளந்தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
மெல்ல கற்போர்
சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் – 3
திருக்குறள்
அ) குறுவினா:-
1. “ நச்சப்
படாதவன்” செல்வம் – இத்தொடரில் தடித்த
சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப் படாதவன் - பிறருக்கு உதவி செய்யாதவன்
2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை
எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை
3.பொருளுக்கேற்ற
அடியைப் பொருத்துக.
அ)உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் |
1)ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை |
ஆ)ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது |
2)உயிரினும் ஓம்பப்படும் |
இ)ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் |
3)நடு ஊருள் நச்சு
மரம் பழுத்தற்று |
விடை:
அ)உயிரைவிடச் சிறப்பாகப்
பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப்படும்
ஆ)ஊரின் நடுவில்
நச்சு மரம் பழுத்தது போன்றது - நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று
இ)ஒழுக்கத்தின் வழி
உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர்
மேன்மை
இ) எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா
நாள்
இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா தேமா பிறப்பு
ஈ) சிறு வினா
வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு
இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
அணி : உவமை அணி. உவமை அணியில் உவமானம்,உவமேயம்,உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும்.
உவமானம் : வேலோடு நின்றான் இடுவென்றது
உவமேயம் : கோலோடு நின்றான் இரவு
உவமஉருபு : போலும்
விளக்கம் : அரசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரி விதிப்பது,வேல் முதலான ஆயுதங்களைக்கொண்டு வழிப்பறி செய்வதற்கு சமம்.
2. கவிதையை நிறைவு செய்க.
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி நீட்டிய கை என் உயிர் தவிப்பை பற்றி எழுது
என்றது சுற்றியுள்ளவர்கள்
என் விரும்புவோர் எண்ணிக்கை பற்றி எழுது என்றனர் நான் எழுதுகிறேன்
மனிதம் காக்க வேண்டும் என்று… |
|
தங்களின் மேலான பணிகளுக்கு பாராட்டுகள். நன்றி, இயல் 6 முடிய மெல்லகற்கும் மாணவர் வழி காட்டி பிடிஎப் ஆக கிடைத்தால் பயனுடையதாக இருக்கும் நன்றி
ReplyDelete