10TH - TAMIL - UNIT 3 - SOLW LEARNERS MATERIAL - MOZHI THIRAN

இளந்தமிழ்  வழிகாட்டி

தமிழ் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் – 3

கூட்டாஞ்சோறு

மொழியை ஆள்வோம்

) மொழி பெயர்க்க:-                                                                 

1.Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

          மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

) பழமொழியை நிறைவு செய்க:-                                     

1

உப்பில்லாப்

பண்டம் குப்பையிலே

2.

ஒரு பானை

சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3

உப்பிட்டவரை

உள்ளளவும் நினை

4

விருந்தும்

மருந்தும் மூன்று வேளை

5

அளவுக்கு

மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

 

இ) பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.

பழைய சோறு

பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து  மென்றவள் சொல்கிறேன்.பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்த காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம் ! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்.

பழைய சோறு

·         இரவு முழுவதும் நீரில் ஊரிய புழுங்கலரிசி சோறு, காலையில் பழைய சோறாக இருக்கும். அதனை வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை,

·         சோற்றைப் பிழிந்து வடுமாங்காய்,உப்பு நார்த்தங்காய் அதனுடன் சேர்த்துக் கொள்வது இன்னொரு வகை

·         சுண்ட வைத்த முதல் குழம்பு இன்னும் உச்சம். மாம்பழ வாசம் வீசும்.

·         பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்

 

ஈ) கதையாக்குக:-                                                       

            மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது  மனிதர்களைப் பார்க்கிறோம்;புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி,கற்பனை நயம் கூட்டிக்கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம்.புதினமாக இருக்கலாம்.அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக்

கதையாக்குக.

            ஒரு வயதான முதியவரைப் போக்குவரத்து மிகுந்த சாலையில் பாதுகாப்பாய் கரம் பிடித்து சாலையின் மறுபுறம் உள்ள ஒரு வங்கியில் கொண்டு போய் விட்டு,அந்த வங்கியில் பணம் எடுத்தலுக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விட்டு பணம் பெற்றுக் கொடுத்த அந்தத் தருணம் அந்த முதியவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி எனக் கூறிய வார்த்தை என் மனதை மட்டுமல்ல என் கண்களையும் கலங்க வைத்தது.

உ) கடிதம் எழுதுக.

உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.

அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                              தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                                    அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை.

) நயம் பாராட்டுக:-

          கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

            அத்தமிக்கும் போது அரிசிவரும்குத்தி

            உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

            இலையிலிட வெள்ளி எழும்

                                                            காளமேகப் புலவர்

திரண்ட கருத்து:

கருத்து – 1

            கடல் சூழ்ந்த நாகப்பட்டிணத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலையில் அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் போட ஊரே அடங்கும். சமைத்துப் பரிமாறும் போது விடிந்து விடும். இது சத்திரமா? என குறிப்பு தருகிறது.

கருத்து-2

          நாகப்பட்டிணத்தில் காத்தான் சத்திரத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுவதால் இருட்டு வரை அரிசி இருக்கும். அரிசி குத்தி உலையிடுவதும்,அன்னமிடுவதும் தொடர்ந்து கொண்டிருப்பது ஊராரின் பசியை அடக்கும்.அன்னம் இலையிலிட வெள்ளி முளைக்கும்.

பொருள் நயம்:

          அத்தமிக்கும் போது அரிசிவரும்குத்தி

            உலையிலிட ஊரடங்கும்

            இலையிலிட வெள்ளி எழும். ஆகியன ஆழமான பொருள் உடையன.

 சந்த நயம் :

          பாடுவதற்கேற்ற சந்த நயம் பயின்று வந்துள்ளது.

மோனை நயம் :

          முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

த்துக்கடல்        -          காத்தான்

த்தமிக்கும்        -          ரிசி

எதுகை நயம் :

           முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.

த்துகடல்          -          த்திரத்தில்

லையிலிட      -          லையிலிட      

முரண் நயம் :

          முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.

            அத்தமிக்கும் × வெள்ளி எழும்.

இயைபு நயம் :

          பாடலில் கடைசி எழுத்தோ,சீரோ,அசையோ,ஓசையோ இயைந்து வருவது.

            அரிசி வரும்வெள்ளி எழும்.

அணி நயம்:

          சொற்கள் பிரிவுபடாமல் நின்று இரு பொருளை தருவதால் இதில் செம்மொழிச் சிலேடை அணி பயின்று வந்துள்ளது.

                                 இயல் – 3                                                                  

மொழியோடு விளையாடு

) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-

வினா

குறிப்பு

விடுபட்ட எழுத்து

நூலின் பெயர்

____கு

பறவையிடம் இருப்பது

கு

திருக்குறள்

கு____தி

சிவப்பு நிறத்தில் இருக்கும்

குருதி

வா____

மன்னரிடம் இருப்பது

வாள்

____கா

தங்கைக்கு மூத்தவள்

க்கா

_____

அறிவின் மறுபெயர்

தி

பட_____

நீரில் செல்வது

படகு

 

) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-                                       

1

சிலை - சீலை

சிலையைச் சீலையால் மறைத்தான்

2.

தொடு - தோடு

தோடினைத் தொட்டுப் பார்த்தாள் கமலா

3

மடு - மாடு

மடுவில் மாடு நீர் குடித்தது.

4

மலை - மாலை

மலை மீது மாலையில் ஏறினான்

5

வளி - வாளி

வளியை வாளியால் அள்ள முடியாது

6

விடு - வீடு

விடு அவன் வீடு செல்லட்டும்

 

இ) அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

ஊண்

உணவு

ஊன்

தசை,உடம்பு

திணை

ஒழுக்கம்

தினை

சிறுதானிய வகை

அண்ணம்

மேல்வாய்

அன்னம்

சோறு,பறவை

வெல்லம்

கரும்பின் கட்டி

வெள்ளம்

நீர்ப்பெருக்கு

ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி     

நாய் என் பசியைப் பற்றி எழுது என்றது

சிறுமி என் வறுமையைப் பற்றி எழுது என்றாள்

நான் எழுதுகிறேன் வறுமையிலும் 

 பிறர் பசிப்போக்குவதே சிறந்தப் பண்பு  என்று

உ) செயல் திட்டம் :-

உணவு,விருந்து சார்ந்த பழமொழிகளையும், விழிப்புணர்வு தொடர்களையும் எழுதுக.


பழமொழி

விழிப்புணர்வுத் தொடர்

·                     நொறுங்க தின்றால் நூறு வயது

·                     அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

·                     விருந்தும் மருந்தும் மூன்று நாள்

·                     சத்து நிறைந்த உணவு நம் வாழ்வுக்கு முத்து

·         சரிவிகித உணவு நலமான வாழ்வுக்கு உயர்வு

·         துரித உணவு விரைவில் சாவு

ஊ ) நிற்க அதற்குத் தக

தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு ? “              -          “ கேரட் “

“ பிடிச்ச பழம்?”                                                   -          “ ஆப்பிள்”

பிடிச்ச காலை உணவு?                                        -          “ நூடுல்ஸ் “

“ மத்தியானத்துக்கு “                                           -          “ ஃப்ரைடு ரைஸ் “

“ ராத்திரி….?”                                                     -          “ பீட்ஸா அல்லது பாஸ்தா”

  இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல. “ சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர் “ என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும்.கத்திரிக்காய் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில்.’ ஆம்’ காணாமல் போய்விடும்! உங்கள் குழந்தைகள்” ஆடு,மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்.

மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

 

1.        நாகரிகம் கருதி நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது.

2.      நம் நாட்டிற்கு புழுங்கல் அரிசியே ஏற்றது.

3.      பாரம்பரிய உணவுகளைத் தினமும் உட்கொள்ள வேண்டும்.

4.      பாரம்பரிய உணவு மிகுந்த சக்தியைக் கொடுக்கும்.

5.      பாரம்பரிய உணவுப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 PDF - SOON

வலைதளத்தில் காண :

www.tamilvithai.com     


மனப்பாடப்பாடலை இனியஇராகத்தில் கேட்க


( LIKE, SHARE, SUBSCRIBE )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post