10TH - TAMIL - UNIT 3 - SLOW LEARNERS MATERIAL - Q & A

 

இளந்தமிழ்  வழிகாட்டி

தமிழ் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்புதமிழ்

இயல் – 3

கூட்டாஞ்சோறு

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                  

1. பின் வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு          

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு        

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

2. “ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி “ என்னும் அடியில் பாக்கம் என்பது—

அ) புத்தூர்                      ஆ.) மூதூர்                     இ) பேரூர்          ஈ) சிற்றூர்

3. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

) வேற்றுமை உருபு    ) எழுவாய்       ) உவம உருபு  ) உரிச்சொல்

4. காசிக்காண்டம் என்பது _____

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

5. ‘ விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு ‘ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

அ) நிலத்திற்கேற்ற விருந்து                       ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து                              ஈ) உற்றாரின் விருந்து

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

·         வருக, வணக்கம்

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

·         நீர் அருந்துங்கள்

2. ‘ தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி ‘ என்பது இலக்கியச் செய்தி.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

·         விருந்தோம்பலுக்கு செல்வம் இன்றையாமையாதது இல்லை.

·         விருந்து கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இருந்தால் போதும்

3 எழுது என்றாள்என்பது விரைவு காரணமாக எழுது எழுது என்றாள்என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

சிரித்துசிரித்துப் பேசினார்

4. ‘ இறடி பொம்மல் பெறுகுவீர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

          மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

5. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

·         கவிஞர்  பெயர் பயனிலை

·         சென்றார்            வினை பயனிலை

·         யார்                  - வினா பயனிலை

) சிறுவினா                                                                      

1. ‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

 கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

 

2. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை?

முல்லை – வரகு, சாமை

மருதம் – செந்நெல், வெண்ணெல்

3. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்

திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களை அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.

இப்படியாக காலமுற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

·         காலமாற்றத்தால் வீட்டின் முன்புறம் திண்ணை வைத்து யாரும் வீடு கட்டுவதில்லை. காரணம் சமூக விரோதிகள், சமூகத்திற்கு தீங்கு விளைவிப்போர் இரவில் தங்கும் இடமாக மாறி வருவதால் இவை காணப்படுவதில்லை.

·         திருவிழாக்காலங்களில் தங்களுடைய உறவினர்களை அழைத்து விருந்து படைப்பதே இன்றைய விருந்தோம்பலாக மாறியுள்ளது.

·         முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை இன்றைய சூழலில் யாரும் வீட்டில் அனுமதிப்பதில்லை.

4.கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது?.

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·         உணவினைப் பெறுவதற்கான வழியினை கூறல்.

நெடுவினா:-

1. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஆற்றுப்படுத்துதல்

இன்றைய நிலை

முடிவுரை

முன்னுரை:

          ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் காணலாம்.

ஆற்றுப்படுத்துதல் :

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         மற்றொரு கூத்தனை நெறிப்படுத்துவதாக அமைந்தது.

இன்றைய நிலை:

·         ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியுள்ளது.

·         நோய் குணமாக இந்த மருத்துவரைக் காணுங்கள் என வழிகாட்டுகின்றனர்.

·         மாணவர்களுக்கு கல்வி வழங்கக் கூடிய கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்களை வழிகாட்டுகின்றனர்.

·         ஏழை, எளியோருக்கு அரசின் உதவிகளைப் பெற வழிகாட்டுகின்றனர்,

·         இன்றைய வழிகாட்டுதல் சூழலில் தன்னார்வ நிறுவனங்கள் பங்கு அளப்பரியது.

·         இன்றைய இணைய வழி வழிகாட்டுதல்கள் எல்லாம் பணம் பெறும் நோக்கமாக மாறி வருகிறது.

முடிவுரை :

          ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் கண்டோம்.

2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதிக் கொண்டு விவரிக்க.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளை கூறினேன்.

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்கு தேவையானவற்றை செய்தேன்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்துப் படைத்தேன்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினர்.

·         எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்.


இயல் -3 

மொழியை ஆள்வோம்,

மொழியோடு விளையாடு

நயம் பாராட்டுக.

நிற்க அதற்குத் தக

செயல்திட்டம்

கலைச்சொல் அறிவோம்

கடிதம் எழுதுக

இப்பகுதிகளுக்கான விடையைக் காண CLICK HERE  என்பதனை சொடுக்கவும்.

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post