10TH - TAMIL - UNIT 3 - SLOW LEARNERS GUIDE -PDF

 

இளந்தமிழ்  வழிகாட்டி

தமிழ் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் – 3

கூட்டாஞ்சோறு

சரியான விடையைத் தேர்ந்தெடு:-                  

1. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –

தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு          

தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு        

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

2. “ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி “ என்னும் அடியில் பாக்கம் என்பது—

அ) புத்தூர்                      ஆ.) மூதூர்                     இ) பேரூர்          ஈ) சிற்றூர்

3. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

வேற்றுமை உருபு    எழுவாய்       உவம உருபு  உரிச்சொல்

4. காசிக்காண்டம் என்பது _____

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

5. ‘ விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு ‘ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

அ) நிலத்திற்கேற்ற விருந்து                       ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து                              ஈ) உற்றாரின் விருந்து

அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

·         வருக, வணக்கம்

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

·         நீர் அருந்துங்கள்

2. ‘ தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி ‘ என்பது இலக்கியச் செய்தி.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

·         விருந்தோம்பலுக்கு செல்வம் இன்றையாமையாதது இல்லை.

·         விருந்து கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இருந்தால் போதும்

3 எழுது என்றாள் “ என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

சிரித்துசிரித்துப் பேசினார்

4. ‘ இறடி பொம்மல் பெறுகுவீர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

          மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

5. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

·         கவிஞர்  – பெயர் பயனிலை

·         சென்றார்            – வினை பயனிலை

·         யார்                  வினா பயனிலை

சிறுவினா                                                                      

1. ‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

 கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

 

2. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை?

முல்லை – வரகு, சாமை

மருதம் – செந்நெல், வெண்ணெல்

3. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்

திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களை அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.

இப்படியாக காலமுற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

·         காலமாற்றத்தால் வீட்டின் முன்புறம் திண்ணை வைத்து யாரும் வீடு கட்டுவதில்லை. காரணம் சமூக விரோதிகள், சமூகத்திற்கு தீங்கு விளைவிப்போர் இரவில் தங்கும் இடமாக மாறி வருவதால் இவை காணப்படுவதில்லை.

·         திருவிழாக்காலங்களில் தங்களுடைய உறவினர்களை அழைத்து விருந்து படைப்பதே இன்றைய விருந்தோம்பலாக மாறியுள்ளது.

·         முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை இன்றைய சூழலில் யாரும் வீட்டில் அனுமதிப்பதில்லை.

4.கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது?.

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·         உணவினைப் பெறுவதற்கான வழியினை கூறல்.

நெடுவினா:-

1. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஆற்றுப்படுத்துதல்

இன்றைய நிலை

முடிவுரை

முன்னுரை:

          ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் காணலாம்.

ஆற்றுப்படுத்துதல் :

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         மற்றொரு கூத்தனை நெறிப்படுத்துவதாக அமைந்தது.

இன்றைய நிலை:

·         ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியுள்ளது.

·         நோய் குணமாக இந்த மருத்துவரைக் காணுங்கள் என வழிகாட்டுகின்றனர்.

·         மாணவர்களுக்கு கல்வி வழங்கக் கூடிய கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்களை வழிகாட்டுகின்றனர்.

·         ஏழை, எளியோருக்கு அரசின் உதவிகளைப் பெற வழிகாட்டுகின்றனர்,

·         இன்றைய வழிகாட்டுதல் சூழலில் தன்னார்வ நிறுவனங்கள் பங்கு அளப்பரியது.

·         இன்றைய இணைய வழி வழிகாட்டுதல்கள் எல்லாம் பணம் பெறும் நோக்கமாக மாறி வருகிறது.

முடிவுரை :

          ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் கண்டோம்.

2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதிக் கொண்டு விவரிக்க.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும்துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளை கூறினேன்.

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்கு தேவையானவற்றை செய்தேன்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்துப் படைத்தேன்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினர்.

·         எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்.

மொழியை ஆள்வோம்

மொழி பெயர்க்க:-                                                                 

1.Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

          மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூற விளைகிறேன்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறதுமொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளதுநம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளதுநாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்எல்லோருக்கும் நன்றி.

பழமொழியை நிறைவு செய்க:-                                     

1

உப்பில்லாப்

பண்டம் குப்பையிலே

2.

ஒரு பானை

சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3

உப்பிட்டவரை

உள்ளளவும் நினை

4

விருந்தும்

மருந்தும் மூன்று வேளை

5

அளவுக்கு

மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

 

இ) பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.

பழைய சோறு

பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து  மென்றவள் சொல்கிறேன்.பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்த காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம் ! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்.

பழைய சோறு

·         இரவு முழுவதும் நீரில் ஊரிய புழுங்கலரிசி சோறு, காலையில் பழைய சோறாக இருக்கும். அதனை வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை,

·         சோற்றைப் பிழிந்து வடுமாங்காய்,உப்பு நார்த்தங்காய் அதனுடன் சேர்த்துக் கொள்வது இன்னொரு வகை

·         சுண்ட வைத்த முதல் குழம்பு இன்னும் உச்சம். மாம்பழ வாசம் வீசும்.

·         பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்

 

ஈ) கதையாக்குக:-                                                       

            மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது  மனிதர்களைப் பார்க்கிறோம்;புதுப்புதுச் செய்திகள் கிட்டும்கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி,கற்பனை நயம் கூட்டிக்கதையாக்குவது ஒரு கலைஅது சிறுகதையாக இருக்கலாம்.புதினமாக இருக்கலாம்.அன்பை எதிர்பார்த்திருப்பவராகயாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக்

கதையாக்குக.

            ஒரு வயதான முதியவரைப் போக்குவரத்து மிகுந்த சாலையில் பாதுகாப்பாய் கரம் பிடித்து சாலையின் மறுபுறம் உள்ள ஒரு வங்கியில் கொண்டு போய் விட்டு,அந்த வங்கியில் பணம் எடுத்தலுக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விட்டு பணம் பெற்றுக் கொடுத்த அந்தத் தருணம் அந்த முதியவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி எனக் கூறிய வார்த்தை என் மனதை மட்டுமல்ல என் கண்களையும் கலங்க வைத்தது.

உ) கடிதம் எழுதுக.

உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.

அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு

            வணக்கம்நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன்அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன்தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீது – நகல்                                                                              தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                                    அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை.

நயம் பாராட்டுக:-

          “ கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

            அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

            உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

            இலையிலிட வெள்ளி எழும் “

                                                            காளமேகப் புலவர்

திரண்ட கருத்து:

கருத்து – 1

            கடல் சூழ்ந்த நாகப்பட்டிணத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலையில் அரிசி வரும்அதனைக் குத்தி உலையில் போட ஊரே அடங்கும்சமைத்துப் பரிமாறும் போது விடிந்து விடும்இது சத்திரமாஎன குறிப்பு தருகிறது.

கருத்து-2

          நாகப்பட்டிணத்தில் காத்தான் சத்திரத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுவதால் இருட்டு வரை அரிசி இருக்கும்அரிசி குத்தி உலையிடுவதும்,அன்னமிடுவதும் தொடர்ந்து கொண்டிருப்பது ஊராரின் பசியை அடக்கும்.அன்னம் இலையிலிட வெள்ளி முளைக்கும்.

பொருள் நயம்:

          அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

            உலையிலிட ஊரடங்கும்

            இலையிலிட வெள்ளி எழும்ஆகியன ஆழமான பொருள் உடையன.

 சந்த நயம் :

          பாடுவதற்கேற்ற சந்த நயம் பயின்று வந்துள்ளது.

மோனை நயம் :

          முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

த்துக்கடல்        -          காத்தான்

த்தமிக்கும்        -          ரிசி

எதுகை நயம் :

           முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.

த்துகடல்          -          த்திரத்தில்

லையிலிட      -          லையிலிட      

முரண் நயம் :

          முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.

            அத்தமிக்கும் × வெள்ளி எழும்.

இயைபு நயம் :

          பாடலில் கடைசி எழுத்தோ,சீரோ,அசையோ,ஓசையோ இயைந்து வருவது.

            அரிசி வரும் – வெள்ளி எழும்.

அணி நயம்:

          சொற்கள் பிரிவுபடாமல் நின்று இரு பொருளை தருவதால் இதில் செம்மொழிச் சிலேடை அணி பயின்று வந்துள்ளது.

                                 இயல் – 3                                                                  

மொழியோடு விளையாடு

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-

வினா

குறிப்பு

விடுபட்ட எழுத்து

நூலின் பெயர்

____கு

பறவையிடம் இருப்பது

கு

திருக்குறள்

கு____தி

சிவப்பு நிறத்தில் இருக்கும்

குருதி

வா____

மன்னரிடம் இருப்பது

வாள்

____கா

தங்கைக்கு மூத்தவள்

க்கா

_____

அறிவின் மறுபெயர்

தி

பட_____

நீரில் செல்வது

படகு

 

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-                                       

1

சிலை - சீலை

சிலையைச் சீலையால் மறைத்தான்

2.

தொடு - தோடு

தோடினைத் தொட்டுப் பார்த்தாள் கமலா

3

மடு - மாடு

மடுவில் மாடு நீர் குடித்தது.

4

மலை - மாலை

மலை மீது மாலையில் ஏறினான்

5

வளி - வாளி

வளியை வாளியால் அள்ள முடியாது

6

விடு - வீடு

விடு அவன் வீடு செல்லட்டும்

 

இ) அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

ஊண்

உணவு

ஊன்

தசை,உடம்பு

திணை

ஒழுக்கம்

தினை

சிறுதானிய வகை

அண்ணம்

மேல்வாய்

அன்னம்

சோறு,பறவை

வெல்லம்

கரும்பின் கட்டி

வெள்ளம்

நீர்ப்பெருக்கு

ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி     

நாய் என் பசியைப் பற்றி எழுது என்றது

சிறுமி என் வறுமையைப் பற்றி எழுது என்றாள்

நான் எழுதுகிறேன் வறுமையிலும் 

 பிறர் பசிப்போக்குவதே சிறந்தப் பண்பு  என்று

உ) செயல் திட்டம் :-

உணவு,விருந்து சார்ந்த பழமொழிகளையும், விழிப்புணர்வு தொடர்களையும் எழுதுக.


பழமொழி

விழிப்புணர்வுத் தொடர்

·                     நொறுங்க தின்றால் நூறு வயது

·                     அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

·                     விருந்தும் மருந்தும் மூன்று நாள்

·                     சத்து நிறைந்த உணவு நம் வாழ்வுக்கு முத்து

·         சரிவிகித உணவு நலமான வாழ்வுக்கு உயர்வு

·         துரித உணவு விரைவில் சாவு

ஊ ) நிற்க அதற்குத் தக

“ தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு ? “              -          “ கேரட் “

“ பிடிச்ச பழம்?”                                                   -          “ ஆப்பிள்”

பிடிச்ச காலை உணவு?                                        -          “ நூடுல்ஸ் “

“ மத்தியானத்துக்கு “                                           -          “ ஃப்ரைடு ரைஸ் “

“ ராத்திரி….?”                                                     -          “ பீட்ஸா அல்லது பாஸ்தா”

  இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல. “ சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர் “ என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும்.கத்திரிக்காய் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில்.’ ஆம்’ காணாமல் போய்விடும்! உங்கள் குழந்தைகள்” ஆடு,மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்.

மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

 

1.        நாகரிகம் கருதி நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது.

2.      நம் நாட்டிற்கு புழுங்கல் அரிசியே ஏற்றது.

3.      பாரம்பரிய உணவுகளைத் தினமும் உட்கொள்ள வேண்டும்.

4.      பாரம்பரிய உணவு மிகுந்த சக்தியைக் கொடுக்கும்.

5.      பாரம்பரிய உணவுப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 PDF - பெற 30 நொடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

வலைதளத்தில் காண :

www.tamilvithai.com     


மனப்பாடப்பாடலை இனியஇராகத்தில் கேட்க


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post