10TH - TAMIL - UNIT -2 - SLOW LEARNERS MATERIAL - PDF

  

இளந்தமிழ்  வழிகாட்டி
மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் - 2
உயிரின் ஓசை

            மனப்பாடப் பாடல்


சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்                        

நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர்,தாயார்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்


         சரியான விடையைத் தேர்ந்தெடு:-      

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
உருவகம்,எதுகை       மோனை,எதுகை
முரண்,இயைபு          உவமை,எதுகை 
 
2. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்.
  செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே
 செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள்  தமிழர்கள்!
அ) செய்தி 1 மட்டும் சரி                  ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி                ஈ) செய்தி 1,3 ஆகியன சரி 
 
அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்     ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல் நீர் ஒலித்தல்                              ஈ) கடல் நீர் கொந்தளித்தல் 
 
4. பெரிய மீசை சிரித்தார்தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
பண்புத்தொகை                      உவமைத்தொகை
)அன்மொழித்தொகை               உம்மைத்தொகை 
 
அ) கொண்டல்                 -          1. மேற்கு
ஆ) கோடை                    -          2. தெற்கு
இ) வாடை                      -          3. கிழக்கு
ஈ) தென்றல்                    -          4. வடக்கு
அ) 1,2,3,4                       ஆ) 3,1,4,2                     இ) 4,3,2,1           ஈ) 3,4,1,2  
 
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-      
1. நமக்கு உயிர் காற்று
  காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
  •   மரம் வளர்ப்போம்;காற்றின் பயன் அறிவோம்
  • மரம் நடுவோம்;காற்றை பெறுவோம்
2. வசன கவிதை – குறிப்பு வரைக.
            உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை. 
 
3. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுகதொடரில் அமைக்க.
  •   .தண்ணீரைக் குடி – அவன் தண்ணீரைக் குடித்தான்
  •   தயிரை உடைய குடம் – கமலா தயிர்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள் 
.
4.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
·         தம்பி அழாதே! உனக்கு அப்பா பொம்மைகள் வாங்கி வருவார்
·         உனக்கு நிறைய திண்பண்டங்கள் வாங்கி வருவார் 
 
சிறுவினா   
1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது. இவ்வாறு “ நீர் “ தன்னைப் பற்றிப் பேசினால்…. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
·         மழையாக நான்
·         ஆறு,கடல்,குளமாக நான்
·         உயிரினங்களின் ஜீவ ஊற்றாக நான்
·         இலக்கியத்தில் நான்
·         இயற்கை வளத்தில் என் பங்கு 
 
2. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
சோலைக் காற்று : மின் விசிறிக் காற்றே ! நலமா?
மின் விசிறிக் காற்று : நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?
சோலைக்காற்று : அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?
மின் காற்று : அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்
சோலைக்காற்று : என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.
மின்  காற்று : விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்
                           பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்
                          கொள்வேன்
சோலைக் காற்று : இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்
                          விரும்பும் விதமாக இருப்பேன்.
மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில்
                  நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக்
                  கொள்ளலாம். 
 
3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.
 

மல்லிகைப்பூ

இருபெயரொட்டு பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

 
4. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.
          குறிப்பு :  இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்
            மழை நின்றதும் மரம் செடிகளில் உள்ள இலைகளிலிருந்து சொட்டும் நீர் ‘ சொட்,சொட் ‘ என சொட்டியது.  உடலில் உண்டான மெல்லிய குளிர் இனிய அனுபவத்தை தந்தது. தேங்கிய குட்டையில் குழந்தைகள் ‘ சளப், தளப் ‘ என குதித்து மகிழ்ச்சியாக விளையாடினர். ஆறுப் போல தெருக்களில் ஓடும் தண்ணீரில் குழந்தைகள் காகிதக் கப்பல் செய்து விட்டு மகிழ்ச்சியாக இருந்தனர் 
.
நெடுவினாக்கள்
1.  முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

 
முன்னுரை :
            முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.
மழை மேகம் :
·         திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.
மழைப் பொழிவு :
·         கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.
மாலைப் பொழுது :
·         வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.
·         முதுப் பெண்கள் மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.
நற்சொல் கேட்டல் :
·          முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.
·         இது விரிச்சி என அழைக்கப்படும்
ஆற்றுப்படுத்துதல் :
·         இடைமகள் பாசியால் வாடிய இளங்கன்றை காணல்
·         உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல்
·         முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம்.
·         உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர்
முடிவுரை :
          இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம். 
 
2. “ புயலிலே ஒரு தோணி “ கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
குறிப்புச் சட்டம்

முன்னுரை

1புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :
          புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
புயல் வருணனை :
·         கொளுத்தும் வெயில்
·         மேகங்கள் கும்மிருட்டு
·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.
·         மலைத் தொடர் போன்ற அலைகள்
·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது
அடுக்குத் தொடர் :
·         நடுநடுங்கி
·         தாவி தாவி
·         குதி குதித்தது
·         இருட்டிருட்டு
·         விழுவிழுந்து
ஒலிக் குறிப்பு :
·         கடலில் சிலுசிலு, மரமரப்பு
·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்
முடிவுரை :
·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது
·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.
·         இவ்வாறாக வருணனைகளோடும், அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார். 
 
3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
          வளரும் விழி வண்ணமே – வந்து
  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
          விளைந்த கலை அன்னமே
  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
          நடந்த இளந்தென்றலே – வளர்
  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
          பொலிந்த தமிழ் மன்றமே
  கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
மோனை நயம்:
          செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.
            லர்ந்தும்        லராத
            ளரும் ண்ணமே
எதுகை நயம்:
            செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.
            ர்ந்தும்        ராத
சந்த நயம்:
          இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.
இயைபு நயம்:
          இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.
          வண்ணமே
          அன்னமே
முரண் நயம்:
          முரண்பாடாக அமைவது முரண்.
                        மலர்ந்தும் × மலராத
                        விடிந்தும்  × விடியாத
பொருள் நயம்:
            காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

மொழியை ஆள்வோம்

தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக:-

          The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

விடை:

          பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குதுவண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவரபூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின்காலை சில்லென உணர்வும்மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.  

                                   

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-         

சொற்கள்

தொகை

தொடர்

இன்சொல்

பண்புத்தொகை

முகில் அனைவரிடமும் இன்சொல் பேசினான்

எழுகதிர்

வினைத்தொகை

வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து இன்பம் எழுகதிராய் வரும்

கீரிபாம்பு

உம்மைத்தொகை

நானும் அவனும் கீரியும் பாம்பும் போல இருப்போம்

பூங்குழல் வந்தாள்

அன்மொழித் தொகை

பூங்குழல் நந்தவனத்திற்கு வந்தாள்

மலைவாழ்வார்

வேற்றுமைத் தொகை

மலைவாழ்வார் காடுகளை பாதுகாக்கின்றனர்.

முத்துப்பல்

உவமைத் தொகை

அவள் முத்துப்பற்களால் சிரித்தாள்

 

இ )செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்ஆல மலர்;பலா மலர்.

மலர் உண்டு;பெயரும் உண்டுஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்சுள்ளி மலர்பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.

பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றனஅவையாவனநெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளைவேளைஊமத்தம்கள்ளிமுருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவைகரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும்பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும்இது மூங்கில் அரிசி எனப்படும்.

1. மலர் உண்டுபெயரும் உண்டு – இரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக.

விடைமலருக்கு பெயர் உண்டு

2. அரும்பாகி மொட்டாகி பூவாகி..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

விடைஅகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.

3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயங்களையும் எழுதுக.

விடை1. மல்லிகைப் பூ. – வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.

             2. சூரிய காந்திப் பூ – எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

4. அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.

விடை பெயரெச்சம்

5. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவைகரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும்பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.

விடைஇலுப்பைப் பூக்கள் இனிப்பானவைகரடிகள் மத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும்பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மத்தை ஏற்றும்.

ஈ ) வாழ்த்து மடல் எழுதுக.

          மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

                                                                                                                                                                                        சேலம்

                                                                                                                                                                                03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம்நீ அங்கு நலமாஎன அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளதுமனமார வாழ்த்துகிறேன்நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

                                                                                                                                                                                    இப்படிக்கு,

                                                                                                                                                                    உன் அன்பு நண்பன்,

                                                                                                                                                                        அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

உ) பாரதியின் வசன நடை – சிட்டுக் குருவி

சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள் ; சின்னத்தலை ; வெள்ளைக் கழுத்து ; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு ; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு ; சிறிய தோகை ; துளித்துளிக் கால்கள் ; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டில் இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.

 இது போன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசன நடையில் எழுதுக.

உலகம் இனியது

வான் இனிமை உடையது; காற்று இனிது; தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது;

நாட்களும், கிழமையும் இனிது;  மரங்கள் இனிது; காடுகள் இனிது; வாழும் உயிர்களுக்கு வானத்துச் சுடர்களெல்லாம் இனியன.

மொழியோடு விளையாடு

அ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

நறுமணம்

பழமைக்கு எதிரானதுஎழுதுகோலில் பயன்படும்

புதுமை

இருக்கும் போது உருவமில்லைஇல்லாமல் உயிரினம் இல்லை.

காற்று

நாலெழுத்தில் கண் சிமிட்டும்கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

விண்மீன்

ஓரெழுத்தில் சோலைஇரண்டெழுத்தில் வனம்

காடு

ஆ ) நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

1.      கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது.வாடைக் காற்று வீசியது. - காற்றின் பாடல்

2.     புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது ; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன. - மொட்டின் வருகை,

3.     சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல் ; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன. - மிதக்கும் வாசம்

4.     இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும் ; கசகசத்த உயிரினங்கள். - உயிர்ப்பின் ஏக்கம்

5.     நின்று விட்ட மழை தரும் குளிர் ; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம். - நீரின் சிலிர்ப்பு

6.     குயில்களின் கூவலிசை.புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்,இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம். - வனத்தின் நடனம்

( வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு )

இ) அகராதியில் காண்க:-

அகன்சுடர்

அகன்ற தீபம்

ஆர்கலி

கடல்,மழை

கட்புள்

விழித்திருக்கும் பறவை

கொடுவாய்

பழிச்சொல்,வாளின் வளைந்த வாய்

திருவில்

வானவில்

ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி     

காற்று என் தேவையை பற்றி எழுது என்றது

மனிதன் என் தவிப்பைப்

பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று



 

செயல் திட்டம்

தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எழுதுக

  • ·         மரங்களை வளர்க்க வேண்டும்.
  • ·         காடுகளை அழிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ·         காடுகளை பாதுகாக்க வேண்டும்.
  • ·         தொழிற்சாலையிலிருந்து வரும் புகைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  • ·         குப்பைகள், நெகிழிகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

 நிற்க அதற்குத் தக

வானொலி அறிவிப்பு....

ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீதொலைவில் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.

1.        தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டுஅதன்படி நடப்பேன்.

கலைச் சொல் அறிவோம்

Storm

புயல்

Tornado

சூறாவளி

Tempest

பெருங்காற்று

LandBreeze

நிலக்காற்று

Sea Breeze

கடற்காற்று

Whirlwind

சுழல்காற்று

இயல் - 2

மெல்லக் கற்போர் வழிகாட்டி - PDF

30 நொடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 

 வலையொளியில் இனிய இராகத்தில் மனப்பாடப் பாடல் கேட்க

SCAN THIS QR CODE


LIKE,SHARE,SUBSCRIBE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post