10TH - TAMIL - UNIT 2 - SLOW LEARNERS GUIDE - MOZHI THIRAN

 

இளந்தமிழ் - சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு - தமிழ்

மெல்லக் கற்போர் வழிகாட்டி

இயல் - 2 

மொழியை ஆள்வோம்

) தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக:-

          The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

விடை:

          பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.  

                                   

) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-         

சொற்கள்

தொகை

தொடர்

இன்சொல்

பண்புத்தொகை

முகில் அனைவரிடமும் இன்சொல் பேசினான்

எழுகதிர்

வினைத்தொகை

வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து இன்பம் எழுகதிராய் வரும்

கீரிபாம்பு

உம்மைத்தொகை

நானும் அவனும் கீரியும் பாம்பும் போல இருப்போம்

பூங்குழல் வந்தாள்

அன்மொழித் தொகை

பூங்குழல் நந்தவனத்திற்கு வந்தாள்

மலைவாழ்வார்

வேற்றுமைத் தொகை

மலைவாழ்வார் காடுகளை பாதுகாக்கின்றனர்.

முத்துப்பல்

உவமைத் தொகை

அவள் முத்துப்பற்களால் சிரித்தாள்

 

இ )செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.

மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.

பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

1. மலர் உண்டு; பெயரும் உண்டுஇரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக.

விடை: மலருக்கு பெயர் உண்டு

2. அரும்பாகி மொட்டாகி பூவாகி..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

விடை: அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.

3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயங்களையும் எழுதுக.

விடை: 1. மல்லிகைப் பூ. – வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.

             2. சூரிய காந்திப் பூஎண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

4. அரிய மலர்இலக்கணக் குறிப்புத் தருக.

விடை:  பெயரெச்சம்

5. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.

விடை: இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மத்தை ஏற்றும்.

ஈ ) வாழ்த்து மடல் எழுதுக.

          மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

                                                                                                                                                                                        சேலம்

                                                                                                                                                                                03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

                                                                                                                                                                                    இப்படிக்கு,

                                                                                                                                                                    உன் அன்பு நண்பன்,

                                                                                                                                                                        அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

உ) பாரதியின் வசன நடை – சிட்டுக் குருவி

சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள் ; சின்னத்தலை ; வெள்ளைக் கழுத்து ; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு ; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு ; சிறிய தோகை ; துளித்துளிக் கால்கள் ; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டில் இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.

 இது போன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசன நடையில் எழுதுக.

உலகம் இனியது

வான் இனிமை உடையது; காற்று இனிது; தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது;

நாட்களும், கிழமையும் இனிது;  மரங்கள் இனிது; காடுகள் இனிது; வாழும் உயிர்களுக்கு வானத்துச் சுடர்களெல்லாம் இனியன.

மொழியோடு விளையாடு

அ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

நறுமணம்

பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

புதுமை

இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

காற்று

நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

விண்மீன்

ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

காடு

ஆ ) நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

1.      கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது.வாடைக் காற்று வீசியது. - காற்றின் பாடல்

2.     புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது ; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன. - மொட்டின் வருகை,

3.     சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல் ; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன. - மிதக்கும் வாசம்

4.     இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும் ; கசகசத்த உயிரினங்கள். - உயிர்ப்பின் ஏக்கம்

5.     நின்று விட்ட மழை தரும் குளிர் ; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம். - நீரின் சிலிர்ப்பு

6.     குயில்களின் கூவலிசை.புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்,இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம். - வனத்தின் நடனம்

( வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு )

இ) அகராதியில் காண்க:-

அகன்சுடர்

அகன்ற தீபம்

ஆர்கலி

கடல்,மழை

கட்புள்

விழித்திருக்கும் பறவை

கொடுவாய்

பழிச்சொல்,வாளின் வளைந்த வாய்

திருவில்

வானவில்

ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி     

காற்று என் தேவையை பற்றி எழுது என்றது

மனிதன் என் தவிப்பைப்

பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று



 

செயல் திட்டம்

தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எழுதுக

  • ·         மரங்களை வளர்க்க வேண்டும்.
  • ·         காடுகளை அழிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ·         காடுகளை பாதுகாக்க வேண்டும்.
  • ·         தொழிற்சாலையிலிருந்து வரும் புகைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  • ·         குப்பைகள், நெகிழிகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

 நிற்க அதற்குத் தக

வானொலி அறிவிப்பு....

ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.

1.        தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

கலைச் சொல் அறிவோம்

Storm

புயல்

Tornado

சூறாவளி

Tempest

பெருங்காற்று

LandBreeze

நிலக்காற்று

Sea Breeze

கடற்காற்று

Whirlwind

சுழல்காற்று

இயல் - 2

மெல்லக் கற்போர் வழிகாட்டி - PDF

30 நொடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 

 வலையொளியில் இனிய இராகத்தில் மனப்பாடப் பாடல் கேட்க

SCAN THIS QR CODE


LIKE,SHARE,SUBSCRIBE


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post