10TH - TAMIL - UNIT 2 - SLOW LEARNER - GUIDE Q & A

 
இளந்தமிழ்  வழிகாட்டி
மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்புதமிழ்
இயல் - 2
உயிரின் ஓசை
) சரியான விடையைத் தேர்ந்தெடு:-      
1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
) உருவகம்,எதுகை       ) மோனை,எதுகை
) முரண்,இயைபு          ) உவமை,எதுகை 
 
2. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்.
  செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே
 செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள்  தமிழர்கள்!
அ) செய்தி 1 மட்டும் சரி                  ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி                ஈ) செய்தி 1,3 ஆகியன சரி 
 
அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்     ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல் நீர் ஒலித்தல்                              ஈ) கடல் நீர் கொந்தளித்தல் 
 
4. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
) பண்புத்தொகை                      ) உவமைத்தொகை
)அன்மொழித்தொகை               ) உம்மைத்தொகை 
 
அ) கொண்டல்                 -          1. மேற்கு
ஆ) கோடை                    -          2. தெற்கு
இ) வாடை                      -          3. கிழக்கு
ஈ) தென்றல்                    -          4. வடக்கு
அ) 1,2,3,4                       ஆ) 3,1,4,2                     இ) 4,3,2,1           ஈ) 3,4,1,2  
 
) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-      
1. நமக்கு உயிர் காற்று
  காற்றுக்கு வரம் மரம்மரங்களை
  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
  •   மரம் வளர்ப்போம்;காற்றின் பயன் அறிவோம்
  • மரம் நடுவோம்;காற்றை பெறுவோம்
2. வசன கவிதைகுறிப்பு வரைக.
            உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை. 
 
3. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.
  •   .தண்ணீரைக் குடிஅவன் தண்ணீரைக் குடித்தான்
  •   தயிரை உடைய குடம்கமலா தயிர்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள் 
.
4.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
·         தம்பி அழாதே! உனக்கு அப்பா பொம்மைகள் வாங்கி வருவார்
·         உனக்கு நிறைய திண்பண்டங்கள் வாங்கி வருவார் 
 
) சிறுவினா   
1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது. இவ்வாறு “ நீர் “ தன்னைப் பற்றிப் பேசினால்…. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
·         மழையாக நான்
·         ஆறு,கடல்,குளமாக நான்
·         உயிரினங்களின் ஜீவ ஊற்றாக நான்
·         இலக்கியத்தில் நான்
·         இயற்கை வளத்தில் என் பங்கு 
 
2. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
சோலைக் காற்று : மின் விசிறிக் காற்றே ! நலமா?
மின் விசிறிக் காற்று : நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?
சோலைக்காற்று : அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?
மின் காற்று : அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்
சோலைக்காற்று : என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.
மின்  காற்று : விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்
                           பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்
                          கொள்வேன்
சோலைக் காற்று : இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்
                          விரும்பும் விதமாக இருப்பேன்.
மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில்
                  நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக்
                  கொள்ளலாம். 
 
3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.
 

மல்லிகைப்பூ

இருபெயரொட்டு பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

 
4. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.
          குறிப்பு :  இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்
            மழை நின்றதும் மரம் செடிகளில் உள்ள இலைகளிலிருந்து சொட்டும் நீர் ‘ சொட்,சொட் ‘ என சொட்டியது.  உடலில் உண்டான மெல்லிய குளிர் இனிய அனுபவத்தை தந்தது. தேங்கிய குட்டையில் குழந்தைகள் ‘ சளப், தளப் ‘ என குதித்து மகிழ்ச்சியாக விளையாடினர். ஆறுப் போல தெருக்களில் ஓடும் தண்ணீரில் குழந்தைகள் காகிதக் கப்பல் செய்து விட்டு மகிழ்ச்சியாக இருந்தனர் 
.
நெடுவினாக்கள்
1.  முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

 
முன்னுரை :
            முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.
மழை மேகம் :
·         திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.
மழைப் பொழிவு :
·         கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.
மாலைப் பொழுது :
·         வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.
·         முதுப் பெண்கள் மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.
நற்சொல் கேட்டல் :
·          முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.
·         இது விரிச்சி என அழைக்கப்படும்
ஆற்றுப்படுத்துதல் :
·         இடைமகள் பாசியால் வாடிய இளங்கன்றை காணல்
·         உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல்
·         முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம்.
·         உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர்
முடிவுரை :
          இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம். 
 
2. “ புயலிலே ஒரு தோணி “ கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
குறிப்புச் சட்டம்

முன்னுரை

1புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :
          புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
புயல் வருணனை :
·         கொளுத்தும் வெயில்
·         மேகங்கள் கும்மிருட்டு
·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.
·         மலைத் தொடர் போன்ற அலைகள்
·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது
அடுக்குத் தொடர் :
·         நடுநடுங்கி
·         தாவி தாவி
·         குதி குதித்தது
·         இருட்டிருட்டு
·         விழுவிழுந்து
ஒலிக் குறிப்பு :
·         கடலில் சிலுசிலு, மரமரப்பு
·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்
முடிவுரை :
·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது
·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.
·         இவ்வாறாக வருணனைகளோடும், அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார். 
 
3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
          வளரும் விழி வண்ணமேவந்து
  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
          விளைந்த கலை அன்னமே
  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
          நடந்த இளந்தென்றலேவளர்
  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
          பொலிந்த தமிழ் மன்றமே
  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
மோனை நயம்:
          செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.
            லர்ந்தும்        லராத
            ளரும் ண்ணமே
எதுகை நயம்:
            செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.
            ர்ந்தும்        ராத
சந்த நயம்:
          இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.
இயைபு நயம்:
          இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.
          வண்ணமே
          அன்னமே
முரண் நயம்:
          முரண்பாடாக அமைவது முரண்.
                        மலர்ந்தும் × மலராத
                        விடிந்தும்  × விடியாத
பொருள் நயம்:
            காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

இயல் - 2
மொழியை ஆள்வோம்
மொழியோடு விளையாடு
கடிதம்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
செயல் திட்டம்
நிற்க அதற்கு தக
கலைச்சொல் அறிவோம்

இப்பகுதிகளுக்கான விடைகளைக் காண 
இங்கே சொடுக்கவும் 👉👉👉👉👉                     CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post