அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான இளந்தமிழ் வழிகாட்டி நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டியானது சராசரி மாணவர்களுக்கும், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் மிக எளிதாகவும், சுருக்கமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தி சென்ற ஆண்டு மெல்லக் கற்கும் மாணவர்களும், சராசரி மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்றனர் என்பதனை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் கூறினர். மேலும் அந்த வழிகாட்டியானது குறைக்கப்பட்டப் பாடத்திற்கான வழிகாட்டி. இம்முறையும் பல ஆசிரியர்கள் என்னிடம் முழுப்பாடத்திற்கும் இந்த ஆண்டும் பயன்படும் படியாக வழிகாட்டியை அனுப்பவும் எனக் கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாகவும், மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதனை நோக்கமாய் கொண்டு முழுப்பாடத்திற்குமான வழிகாட்டியினை பதிவேற்றம் செய்யலாம் என முதல் மூன்று இயல்களுக்கான வழிகாட்டியினை உங்களுக்கு வழங்கியுள்ளோம். இதனை மாணவர்களுக்கு நீங்கள் கொடுத்து கொடுக்கவும். மேலும் இந்த வழிகாட்டியினை மிகுந்த வேலைபளுக்கிடையில் தயார் செய்துக் கொண்டு இருப்பதால் இதன் PDF ஐ பகிராமல் இந்த இணைய இணைப்பினை பகிர்ந்து உதவிடுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதனை நீங்கள் செய்தால் உங்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டவனாக நான் இருப்பேன்.
மேலும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு தயாரிக்கும் கற்றல் வளங்களை தமிழகத்தின் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக நமது வலைதளத்தில் பதிவிட நினைத்தால் நீங்கள் thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 8695617154 என்ற புலன எண்ணிற்கும் அனுப்பவும். உங்களின் படைப்பு உங்களின் படைப்பாகவே வெளியிடப்படும். இதில் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்களின் பெயர்கள் எங்கும் இருக்காது. உங்களின் படைப்பு உங்களின் படைப்பாகவே கல்விவிதைகள் வலைதளம் மூலம் தமிழகத்தின் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் விதமாக இந்த வலைதளம் இருக்கும்.
நன்றி வணக்கம்.