10TH - TAMIL - QUESTION BANK LIST OUT

 

அன்பார்ந்த ஆசிரியப்ப் பெருமக்களுக்கு வணக்கம். எதிர் வரும் 2022- 2023 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கு எவ்வாறு பயிற்சிப்புத்தகம் தயார் செய்வது என்று சில நாட்களுக்கு முன்  நமது வலை தளம் மூலம் கருத்துக் கேட்டு இருந்தோம். அந்த கருத்துக்கு மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்ட ஆசிரியர்கள் கருத்துகளை வழங்கினீர்கள். அந்த கருத்துகள் எல்லாம் மதிப்பு மிகுந்தவை. உங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில்  கீழ்க்கண்ட பட்டியலின் வரிசையில் வினாக்கள் தொகுக்கப்பட்டு, வினா வங்கியாக அச்சாக உள்ளது. உங்களிடமிருந்துப் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தொகுப்பப்பட்ட வினாக்களின் பட்டியல் உங்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை உங்களின் பொன்னான கருத்துகளை பதிவிட்டு மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்வி விதைகளின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும். புதியதாக சேர்க்க வேண்டும் என எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் அதனை உங்களின் கருத்தாக இந்த வலைதளத்தின் செய்திப் பெட்டியில் பதிவிடவும் ( COMMENT BOX ) அல்லது 8695617154 என்ற புலன எண்ணிற்கு தனிப்பட்ட முறையில் அனுப்பலாம். கல்வி ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு வழங்கினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. என்றென்றும் கல்விப்பணியில் உங்களில் ஒருவனாக கல்விவிதை மற்றும் தமிழ்விதை வலைதளங்கள்.

குறிப்பு :

ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகள் வினா -வங்கியின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வினாக்களை இணைய வழித் தேர்வாக எழுத நமது வலைதளமான தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளம் மூலம் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வினை மாணவர்கள் முழு மதிப்பெண் பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். இந்த தேர்வு எழுதுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. எத்தனை முறை எழுதினாலும் அத்தனை முறையும் நீங்கள் இலவசமாக எழுதலாம்.

வினா - வங்கி பட்டியல்

1.      இயல் 1 – 9 ஒரு மதிப்பெண் வினாக்கள்

2.     சொல்லும் பொருளும், இலக்கணக் குறிப்பும்

3.     குறுவினாக்கள் தொகுப்பு ( 1 – 9 )

4.     திருக்குறள் – மனப்பாடப்பகுதி

5.     கலைச்சொல் அறிக - தொகுப்பு

6.     அகராதியில் காண்க - தொகுப்பு

7.     மொழித்திறன் பயிற்சிகள் - தொகுப்பு

8.     பகுபத உறுப்பிலக்கணம் - தொகுப்பு

9.     சிறுவினாக்கள் தொகுப்பு ( 1 – 9 )

10.   மனப்பாடப்பகுதி

11.     நெடுவினாக்கள் – தொகுப்பு ( 1 – 9 )

12.   கடித வகை வினாக்கள் - தொகுப்பு

13.   நயம் பாராட்டுக – தொகுப்பு

14.   மொழி பெயர்ப்பு – தொகுப்பு ( 1 – 9 )

15.   நிற்க அதிற்குத் தக – தொகுப்பு (1 – 9)

16.   காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

17. பொதுக்கட்டுரை வினாக்கள் - தொகுப்பு

18. செயல் திட்ட வினாக்கள் - தொகுப்பு

19. கற்பவை கற்றப்பின் – வினாக்கள்

20. அரசுத் தேர்வுத் துறை வெளியிட்ட வினாத்தாள்களின் வினாக்கள் தொகுப்பு

21. அலகுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வு வினாத்தாள்கள்

22. மாதிரி காலாணடுத் தேர்வு – வினாத்தாள்

23.மாதிரி அரையாண்டுத் தேர்வு – வினாத்தாள்

24. முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் – 2020

25. இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் – 2020

26. மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் – 2020

27. அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் – 2020 ( செப்டம்பர் தனித்தேர்வர் வினாத்தாள் )

28. அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் – 2021 ( செப்டம்பர் தனித்தேர்வர் வினாத்தாள் )

29. அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் – மே - 2022

30. மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் – 2022 -2023

31. அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களின் விடைகள்

32. படிவங்கள்

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post