நாள் : 27-06-2022 முதல் 01-07-2022
மாதம் :
ஜூன்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு :
1. இரட்டுற மொழிதல்
2. உரைநடையின் அணி நலன்கள்
3. எழுத்து,சொல்
Ø வேறுபட்ட
கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்
Ø உரைநடையின்
அணிகலன்களை அறிந்து பயன்படுத்துதல்
Ø எழுத்து,சொல்
இலக்கணத்தை அறிதல்
உட்பொருள்:
Ø இரட்டுற மொழி அறியும் பாங்கினை அறிதல்.
Ø தற்காலத்தில் சிலேடை நயம் அறிதல்
Ø தமிழ் உரைநடையில் காணப்படும் நயங்களை
இன்றைய சூழலோடு ஒப்பிடல்
கற்றல் விளைவுகள் :
Ø வேறுபட்ட
கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்
Ø உரைநடையின்
அணிகலன்களை அறிந்து பயன்படுத்துதல்
Ø எழுத்து,சொல்
இலக்கணத்தை அறிதல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø அறிஞர் அண்ணாவின் சிலேடை பேச்சுகளைக் கூறி ஆர்வமூட்டல்
Ø உரைநடையின் சில நயங்களைக் கூறி ஆர்வமூட்டல்
Ø எழுத்துகளின் வகை தொகைகளை கூற வைத்து அதன் வழியே பாடப்பொருளை
அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள், தமிழ் அகராதி,வரைபடம் முதலியன.
முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:
·
தமிழ் மொழி கடலோடு ஒப்பிடப்படும்
பாங்கினை கூறல்
·
தமிழழகனார் பற்றிய குறிப்பினை அறிதல்
·
செய்யுளின் பொருள் புரிந்து அதன் சிலேடை
நயம் உணர்தல்
·
தமிழ் – முத்தமிழ், முச்சங்கம் எனக் கண்டது,
ஐம்பெரும் காப்பியங்கள் கொண்டது,சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
·
கடல் – முத்து,அமிழ்து தருகிறது, மூன்று
வித சங்குகளை தருகிறது. சங்குகளை அலைகள் தடுத்து காக்கிறது.
·
உரையாடலின் சிறப்பினை அறிதல்
·
தமிழில் காணப்படும் சில நயங்களை இன்றைய
வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்
·
இலக்கணம் பற்றி அறிதல்
·
அளபெடை வகைகள் பற்றி அறிதல்
·
சொல், மொழியின் வகைகள் அறிதல்
·
தொழிற்பெயர் தன்மைகள் மற்றும் அதன் வகைகள்
அறிதல்
·
வினையாலணையும் பெயரை அறிதல்..
ஆசிரியர் செயல்பாடு:
Ø சிலேடை அணி பற்றி கூறல்
Ø ஆசிரியர் பற்றிய குறிப்புகளைக் கூறல்
Ø செய்யுளினை சீர்பிரித்து வாசித்தல்
Ø செய்யுளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை கொண்டு தமிழை
கடலோடு ஒப்பிடல்
Ø தற்கால உரைநடையில் பயன்படுத்தும் நயங்களை உணர்ந்து
கூறல்
Ø நயங்களின் பொருளை கூறல்
Ø இலக்கணத்தின் பயன்பாடு பற்றிக் கூறல்
Ø அளபெடை வகைகளை கூறி,அவை அன்றாட வாழ்வில் பயன்படும்
விதம் பற்றிக் கூறல்
Ø மொழியின் மூவகைகளை விளக்குதல்
Ø தொழிற்பெயரின் தன்மைகளையும், அதன் வகையினையும் விளக்குதல்
Ø வினையாலணையும் பெயரைக் கூறல்
மாணவர் செயல்பாடு:
Ø செய்யுளினை சீர்ப் பிரித்து படித்தல்
Ø செய்யுளில் காணப்படும் நயங்களை இனம் காணுதல்
Ø பாடலின் பொருளை அறிதல்
Ø சிலேடையின் தன்மையினை உணர்தல்
Ø உரைநடையில் இலக்கணை, இணை ஒப்பு,எதிரிணை இசைவு, சொல்முரண், முரண்படு மெய்ம்மை அறிதல்
Ø அளபெடை , மூவகைமொழிகள், தொழிற்பெயர்,
வினையாலணையும் பெயர் இவற்றையும், இவற்றின் வகைகளையும் அறிதல்
Ø இலக்கணத்தின் பயன்பாடுகளை இன்றைய
வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம்
இரட்டுற
மொழிதல்
உரைநடையின்
அணிநலன்கள்
எழுத்து,
சொல்
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு:
Ø பாடலைச் சீர் பிரித்துப் படித்தல்
Ø பாடலில் உள்ள எதுகை,மோனை,இயைபு நயங்களை அறிதல்
Ø பாடப்பகுதிக்குரிய ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு
விடைகாணுதல்
Ø மனப் பாடலை மனனம் செய்தல்
மதிப்பீடு:
எளிய வகை வினாக்கள்:
Ø சந்த கவிமணி என அழைக்கப்படுவர் ________
Ø எதுகை நயம் பற்றி கூறுக.
Ø சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
நடுநிலை வினாக்கள்:
Ø முச்சங்கம் என்பதில் தமிழுக்கும், கடலுக்கும் எவ்வாறு
ஒத்துப்போகிறது?
Ø இலக்கணை என்றால் என்ன?
Ø அளபெடை என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
உயர் சிந்தனை வினாக்கள்:
Ø தற்கால உரைநடையில் சிலேடை நயம் இடம் விதம் குறித்து
கூறுக.
Ø தமிழ்மொழியின் சிறப்புகளை வெளிநாட்டில் வாழும் உமது
உறவினருக்கும் எடுத்துரைக்கும் பாங்கு யாது?
Ø நும் பாடப்பகுதியில் உள்ள சில வினைமுற்றுகளை கண்டு
அதனை தொழிற்பெயராகவும், எதிர்மறை தொழிற்பெயராகவும் மாற்றுக.
தொடர்பணி:
· பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை