10TH - TAMIL - NOTES OF LESSON - JULY 1ST WEEK

 

நாள்                 :           04 -07 -2022 முதல்  08 -07-2022        

மாதம்                        ஜூலை            

வாரம்               :           முதல் வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :         1. கேட்கிறதா என் குரல்

                            2. காற்றே வா

                            3. முல்லைப் பாட்டு                                                   


கரு பொருள்:

Ø  காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்பு பெறுதல்

Ø  இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்

Ø  குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயனாட்டுத் திறத்தினையும் படித்துச் சுவைத்தல்

உட்பொருள்:

Ø  காற்றின் ஆற்றல், இலக்கியங்களில் காற்று,ஹிப்பாலஸ் பருவக் காற்று – இவற்றை அறிதல்

Ø  வசனக் கவிதையின் நடை, தன்மை உணர்தல்

Ø  முல்லை நில மழைக்கால காட்சியை செய்யுள் வடிவில் காணல்

கற்றல் விளைவுகள் :

Ø  காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்பு பெறுதல்

Ø  இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்

Ø  குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயனாட்டுத் திறத்தினையும் படித்துச் சுவைத்தல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  ஐந்து பூதங்கள் யாவை? அவற்றிற்கும் உயிரினங்களுக்கும் உள்ள ஒப்புமை யாது? என வினாக்கள் கேட்டு அவற்றில் காற்றின் முக்கியத்துவத்தை கூறி ஆர்வ மூட்டல்

Ø  பாரதியார் பற்றி மாணவர்கள் அறிந்த செய்தி, பாரதியார் பாடல்கள் இவற்றை கேட்டு பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்

Ø  மனிதர்களில் இன்றும் சகுனம் பார்க்கும் நிகழ்வு எவ்வாறு இருக்கிறது? எனக் கேட்டுப் பாடப்பொருளை ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

 வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள், தமிழ் அகராதி,வரைபடம் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

கேட்கிறதா என் குரல்

·         உயிரினங்களின் உயிர் மூச்சு காற்று.

·         காற்று பல பெயர்களில் அழைக்கப்படும் விதம்

·         நான்கு திசைகளிலும் வீசும் காற்றுக்கு வழங்கப்படும் பெயர்கள்.

·         இலக்கியங்களில் காற்று :

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் – சிலப்பதிகாரம்

·          முந்தீர் நாவாய் ஓட்டியாக காற்று செயல்படும் விதம்.

·         ஹிப்பாலஸ் என்பவர் அறிமுகப்படுத்திய பருவக்காற்று ஹிப்பாலஸ் பருவக் காற்று

·         மழைத் தரும் மேகமாக, பருவக் காற்றாக செயல்படும் காற்று

·         காற்று மாசுபாடுகளில் இந்தியாவின் நிலை, காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் நிலை

·         காற்று மாசுபாட்டினை தவிர்க்கும் வழிமுறைகள்

காற்றே வா

·         பாரதியார் பற்றிய குறிப்பு

·         வசனக் கவிதை எவ்வாறு அமையும்?

·         காற்றைப் பற்றி பாரதியார் வருணிக்கும் வசனக் கவிதை

·         பாடலில் இடம் பெறும் கட்டளைச் சொற்கள், வேண்டுகோள் சொற்கள்

                      முல்லைப்பாட்டு

·         முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள முதல் கரு உரிப் பொருள்கள் ஆகியவற்றை அறிதல்

·         பாடலில் காணப்படும் உவமை நயம் அறிதல்

·         முல்லைப்பாட்டின் மூலம் மழைக்கால காட்சியினைக் காணல்

·         விரிச்சி என்பதன் பொருள் அறிதல்

·         முல்லைப்பாட்டின் பொருள் அறிதல்

ஆசிரியர் செயல்பாடு:

Ø    காற்றின் செயல்பாடுகளைக் கூறல்

Ø    காற்றின் பல பெயர்களை அறிந்துக் கூறல்

Ø    காற்று வீசும் திசைகள் அதற்கு வழங்கப்படும் பெயர்களை கூறல்

Ø    இலக்கியங்களில் காற்று சிறப்பித்து கூறியுள்ளமையை இலக்கிய அடிகள் கொண்டு விளக்கம் கூறல்

Ø    காற்று மாசுபாட்டினை குறைப்பதற்கான வழிகளை கூறல்

Ø    பாரதியாரின் பன்முக ஆற்றலைக் கூறல்

Ø    வசனக் கவிதையின் பொருள் கூறல்

Ø    வசனக் கவிதை எழுதப்படும் பாங்கினை அறிதல்

Ø    செய்யுளின் நயங்களை அறிதல்

Ø    முல்லை நிலத்தின் தன்மைகளை கூறல்

Ø    மழைக்கால நிகழ்வினை கூறல்

Ø    மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø    பாடலின் பொருள் விளக்கம் கூறல்

மாணவர் செயல்பாடு:

Ø    உரைநடைப் பகுதியினை பிழையின்றி வாசித்தல்

Ø    உரைப்பத்திகளை நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø    உரைநடைப் பகுதியில் இடம் பெறும் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள், சில முக்கிய வினாக்களை அறிதல்

Ø    காற்று மாசுபடாமல் இருக்கு நாம் செய்ய செயல்பாடுகளை பட்டியலிடுதல்

Ø    செய்யுளினை சீர்ப் பிரித்து படித்தல

Ø    செய்யுளில் காணப்படும் நயங்களை இனம் காணுதல்

Ø    வசனக் கவிதையின் நடை அறிதல்

Ø    பாடலின் பொருளை அறிதல்

Ø    முல்லை நில கார்கால நிகழ்வினை காணுதல்

Ø    விரிச்சி என்பதன் பொருள் அறிதல்

Ø    முல்லை நில கரு, உரு, முதற் பொருள்களை அறிதல்

Ø    மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

Ø    பாடல் பொருளை பொருள் உணர்ந்துப் படித்தல்

கருத்துரு வரைபடம்

கேட்கிறதா என் குரல்

 


காற்றே வா


 

முல்லைப்பாட்டு

 

வலுவூட்டல்:

                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை      மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  உரை நடைப் பகுதியில் உள்ள வண்ணச் சொற்களை வாசித்தல்

Ø  ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

Ø  பாடலைச் சீர் பிரித்துப் படித்தல்

Ø  பாடலில் உள்ள எதுகை,மோனை,இயைபு நயங்களை அறிதல்

Ø  பாடப்பகுதிக்குரிய ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடைகாணுதல்

Ø  மனப் பாடலை மனனம் செய்தல்

மதிப்பீடு:

எளிய வகை வினாக்கள்:

Ø  உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது எனக் கூறியவர் _______

Ø  சிந்துக்கு தந்தை என அழைக்கப்படுபவர் ________

Ø  முல்லை நிலம் _________

நடுநிலை வினாக்கள்:

Ø  காற்று மாசுபடாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் யாவை?

Ø  வசனகவிதை என்பது யாது?

Ø  விரிச்சி என்றால் என்ன?

உயர் சிந்தனை வினாக்கள்:

Ø  காற்று பேசியது போல நிலம் பேசினால் நீங்கள் என்னென்ன தலைப்புகள் கொடுப்பீர்கள்?

Ø  உனக்குப் பிடித்தமான ஏதேனும் ஒன்று குறித்து வசன கவிதையில் எழுதுக

Ø  உங்கள் பகுதியில்

Ø  மழை நின்றவுடன் காணும் காட்சியினை வருணித்துக் கூறுக

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post