அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். 2022 மே மாதத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி அனைவரும் தேர்வு முடிவுககாக காத்திருக்கின்றோம். இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 17 ந் தேதி பத்தாம் வகுப்பிற்கும், ஜூன் 20ந் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாகத் தேர்வுத் துறையால் முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில் சிறிது மாற்றம். இதுவரையில் இல்லாத தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே முதன் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவும் ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. ஜூன் 20ந் தேதி காலை 9.30 மணியளவில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும், நண்பகல் 12 மணியளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படுகிறது. இந்த பொதுத் தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வந்துவிடும் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் உங்கள் மதிப்பெண்ணுடன் கூடிய முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வு துறையின் இணையதளத்தில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். பள்ளிக்கு சென்றும் உங்களின் தேர்வு முடிவுகளை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.
மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சிப் பெற வாழ்த்துகள்
தேர்வு முடிவுகளை காண :
இணைப்பு : 1 CLICK HERE
இணைப்பு : 2 : CLICK HERE
இணைப்பு : 3 : CLICK HERE
இணைப்பு : 4 :CLICK HERE