10TH-12TH - TN BOARD EXAM RESULT

 தேர்வு முடிவுகள்

80,90களின் தேர்வு முடிவுகள் ஒரு பார்வை:

            பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே அன்றைய காலங்களில் பொதுத் தேர்வாக இருந்தது. தேர்வு எழுதுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். அன்றைய தினங்களில் வினாத்தாளினை படிப்பதற்கு நேரம் ஒதுக்கியது இல்லை. தேர்வு பனிரெண்டாம் வகுப்புக்கு 3 மணி நேரமும், பத்தாம் வகுப்பு 2.30 மனி நேரமும் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நேரத்திற்குள்ளாகவே தேர்வினை முடிக்க வேண்டும். ஒவ்வொருத் தாளுக்கும் பக்க எண் இட்டு எழுத வேண்டும். தேர்வு அறை நுழைவுச் சீட்டு மாணவர்கள் தான் பாதுகாப்பாக கொண்டு வருவதும் ,செல்வதுமாக இருக்கும். தேர்வு பதற்றத்தில் நுழைவு சீட்டினை மறந்துவிடுவதும் உடனடியாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவரச அவரசமாக கொண்டு வந்து தருவதும் என இருந்தது. இந்த பதற்றத்தில் மாணவர்கள் தாங்கள் படித்தவற்றை சில மறக்க நேரிடும் நிகழ்வுகளும் உண்டு. இதன் பாதிப்பு தேர்வு முடிவுகளில் கண்கூடாக தெரியும். சரி. இந்த காலங்களில் தேர்வு முடிவுகள் எப்படி வெளியிடப்படும் என்பதனைப் பார்க்கலாம்.

தேர்வு முடிவுகள் நாளன்று காலை வெகு நேரமாக பள்ளிக்குச் சென்றுவிடுவோம். காலை 9 மணிக்கு முடிவுகள் என்றால் 7.30 அல்லது 8 மணிக்கு எல்லாம் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வந்துவிடுவர். தமது நண்பர்களுடன் ஒரு மணி நேரம் ஒரு பதற்றமாகவே பேசிக் கொண்டு இருப்போம். அடுத்து எந்த பள்ளியில் எந்த குருப் எடுப்பது என பத்தாம் வகுப்பு மாணவர்களும், அடுத்து எந்த கல்லூரி? பாலிடெகினிக்? இளங்கலை, பொறியியல் என பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் பேசிக் கொண்டு இருப்போம். தேர்வின் முடிவுகளை காண பெற்றோர்களும் விரைந்து பள்ளிக்கு வருவர். அன்றைய நாட்களில் தேர்வு முடிவுகள் நாளிதழ்களில் வெளியிடப்படும். தேர்வர்களின் எண் இருப்பின் அவர் தேர்ச்சி பெற்றிருப்பர். தேர்வு எண் இல்லை எனில் தோல்வி அடைந்திருப்பர். இதற்காக நாளிதழ்கள் சிறப்பு செய்தித்தாள்களையும் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கிடுவர். அதனை ஆர்வமாக வாங்கி தங்கள் எண் உள்ளதா? என ஆர்வத்துடன் பார்த்து அதனை வட்டமிட்டுக் கொள்வோம். அதோடு மட்டுமல்லாது நமது நண்பர்களின் எண்களையும் குறித்துக் கொண்டு அவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டனரா என்பதனை ஆர்வத்தோடு கண்கள் தேடும். செய்தித்தாளில் மாநில அளவில் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களின் பெயரும் புகைப்படமும் வெளியிடப்படும்.பின் மாவட்டந்தோறும் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களும் அவர்களின் பள்ளிப்பெயரும் இடம் பெறும். பிறகு காலை 9.30 மணிக்கு பள்ளியில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் பள்ளி வளாகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். அதனை அனைத்து மாணவர்களும் முட்டி மோதிக் கொண்டு பார்ப்போம். அதிலும் ஆர்வமும்,ஆனந்தமும் தென்ப்படும். தோல்வி அடையும் மாணவர்களுக்கு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் ஆறுதல் கூறும் நிகழ்வுகளும் காணக்கூடும். அன்றைய தினங்களில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு உடனடியாக சிறப்புத் துணைத் தேர்வு ஏதும் இல்லை. மீண்டும் அடுத்த கல்வியாண்டில் தான் எழுத வேண்டும். அதுவும் தனியராக தான் எழுத முடியும். ஆனால் இன்றைய தேர்வு முடிவுகளும், பண்பாடுகளும் பற்றி காண்போமா?

2k களின் தேர்வு முடிவுகள்:

            இன்றைய நவீன காலக் கட்டத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என மூன்று வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இதில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் பதினொன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற தவறினாலும் மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் தொடரலாம். அவர்கள் பதினொன்றாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற தவறிய தாளினை அடுத்தப் பொதுத் தேர்வில் எழுதலாம். அதனால் மாணவர்களுக்கு இழப்பு என்பது இல்லை. இன்றைய காலத்திலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தவறிய மாணவர்கள் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் சிறப்புத் துணைத் தேர்வுகள் வைக்கப்படும். அந்த துணைத் தேர்வுகளில் தாங்கள் தவறிய பாடத்தினை மட்டும் மீண்டும் எழுதி தேர்ச்சி அடையலாம். இதனால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை. இதனால் தமது நண்பர்கள் சக மாணவர்களுடன் சேர்ந்து அடுத்து மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லலாம். சரி தேர்வு முடிவுகள் எவ்வாறு வெளியிடப்படும்? என்பதனை காணலாம். 

தேர்வு முடிவுகள் செய்தித்தாளிகளில் வந்த நடைமுறை இல்லை. 2010க்கு மேல் இல்லை என எண்ணுகிறேன். சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் செய்தி பெட்டியில் பதிவிடுங்கள். சரி நாம் செய்திக்கு வருவோம்.  நாளைய தினங்களில் வெளியிடப்படும் தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வெளியிடுவதில்லை. சிறப்புச் செய்தித்தாளும் வருவதில்லை. எல்லாம் இணையம் இருப்பதினால் அவற்றின் அவசியம் ஏற்படவில்லை.  மாணவர்கள் தாங்கள் வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை மூலம் அனுப்பப்படுகிறது. இதனால் அனைத்து மாணவர்களும் தங்கள் இருப்பிடங்களிலேயே காணும் வசதி உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் தெரிந்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். நான் சில மாணவர்களிடம் தொடர்புக் கொண்டு பேசியதில் மாணவர்கள் கூறிய கருத்துகள் சற்று ஆச்சிரியமாக உள்ளது. அவை ,

1. எதுக்கு சார் பள்ளிக்கு வரணும்? அதுதான் தேர்வு முடிவுகள் கைப்பேசியில் பார்த்துக் கொள்கிறோமே?

 2. மதிப்பெண் தெரிய வேண்டுமெனில் இணையம் மூலமாக் தெரிந்துக் கொள்கிறேன்.

3. தேர்வு முடிவு அன்று பள்ளிக்கு வந்தால் முடிவுகளைப் பார்த்து ஆசிரியர்கள் திட்டுவார்களோ?

4. தேர்வு முடிந்த உடனே நான் வேலைக்கு வந்துவிட்டேன் .வேலைப் பார்க்கும் இடத்தில்  விடுமுறை அனுமதிக்கமாட்டார்கள். மேலும் தேர்ச்சி பெற்றிருந்தால் அடுத்த வகுப்பிற்கு செல்வதா? குடும்பச் சூழ்நிலையை சரி செய்ய வேலையைத் தொடரவா? என்பதனை என் தந்தை கைகளில் உள்ளது? ( கல்வி தான் சிறந்தது. மேல் வகுப்புக்கு செல்ல வேன்டும் என அறிவுறுத்தப்பட்டது)

5. பள்ளிக்கு வந்து அனைத்து ஆசிரியர்களையும் பார்த்து தேர்வு முடிவுகளை கூறி நன்றி சொல்லிவிட்டு போகணும்.

6. அனைவரும் தேர்ச்சிப் பெற்றுவிட்டனரா? என்பதனை பள்ளியில் ஒட்டப்படும் தேர்வு முடிவுகளை கொண்டு பார்த்துக் கொள்வேன்.

7. அனைவரும் தேர்ச்சி பெற்று அனைவரும் மேல் வகுப்பிற்கு செல்ல வேண்டும் சார்.

இவ்வாறாக் மாணவர்களின் மனநிலை இரண்டு விதமாக உள்ளது. இன்றைய சூழலில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களின் கைகளிலேயேப் பார்த்துக் கொள்வதில் பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழையும், மாற்றுச் சான்றிதழையும் பெற வந்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனால் தேர்வு முடிவுகள் அன்றைய தினம் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு சென்று தேர்வு முடிவுகள் காணும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. தங்கள் இருப்பிடங்களிலேயே தங்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். எது எப்படியோ நாளை ஜூன் 20 பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒரே நாளில் தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. அந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே காண நமது கல்வி விதைகள் வலைதளத்தில் அதற்கான இணைய இணைப்பினை வழங்கியுள்ளோம். மாணவர்கள் அனைவரும் இந்த இணைப்பில் தங்களின் தேர்வு முடிவுகளைக் காணலாம்

10th - 12th தேர்வு முடிவுகளை காண

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post