அன்பார்ந்த பத்தாம் வகுப்பு போதிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு வணக்கம். எதிர் வரும் 2022 -2023 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறவும், மெல்லக் கற்கும் மாணவர்களும் தேர்ச்சி அடையும் விதமாக பயிற்சிப் புத்தகம் உருவாக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சிப் புத்தகம் எவ்வாறு அமைய வேண்டும்? அவற்றில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் ? என உங்களிடம் கருத்துகள் கேட்க வந்துள்ளோம். ஆசிரியர்கள் தங்களின் மேலான கருத்துகளை இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைய படிவத்தில் நிரப்பவும். உங்களின் கருத்துகள் மிகுந்த மதிப்பு மிகுந்தவை. பயிற்சிப்புத்தகத்திற்கு தேவையான வினாக்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளன. அவை எவ்விதம் எந்த அமைப்பில் இடம் பெற வேண்டும்? பயிற்சிப்புத்தகம் எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற தங்களின் மேலான கருத்துகளை விரைவாக பதியும் படி அன்போடு வேண்டுகிறோம். அதன் அடிப்படையில் பயிற்சிப் புத்தகம் விரைவில் அச்சாகி வெளிவரும்.
எதிர் வரும் கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வைக்க நீங்கள் கூறும் கருத்துகள் மிகவும் மதிப்பு மிகுந்தவை. அவற்றை எவ்வகையிலாவது செயல்படுத்த வேண்டும் என எண்ணுகிறோம். எனவே ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு தமிழுக்கு மட்டுமல்லாது இதர வகுப்புகளுக்கும் என்ன தேவை? அவை எப்படி இருக்க வேண்டும் ? என்ற தங்களின் கருத்துகள் மிகவும் உயர்வானவை. தற்சமயம் பத்தாம் வகுப்பு பயிற்சித்தாள் வடிவமைப்பானது புத்தக வினாக்கள் ( மதிப்பெண் ) , பள்ளிக் கல்வித் துறை மூலம் வெளியிடப்பட்ட 6 மாதிரி வினாத்தாள்களிலிருந்து மதிப்பெண் வாரியாக தொகுக்கப்பட்ட வினாத்தாள், அலகுத் தேர்வு, மாதிரி வினாத்தாள், படிவங்கள் என வைக்கலாம் என சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். அதனை எப்படி வடிவமைக்கலாம்? என்ற தங்களின் மேலான ஆலோசனைகளை கேட்கவே வந்துள்ளோம். இன்றைய சூழலில் அவற்றை PDF வடிவமாக பகிர்ந்தால் அவற்றை நகல் எடுக்க பணம் அதிகம் செலவாகும். ஒரு பக்கத்திற்கு ₹3 கேட்கிறார்கள். அதிக பக்கம் எடுத்தாலும் பக்கத்திற்கு ₹ 1 கேட்கிறார்கள் எனவே பொருளாதாரப் பிரச்சனை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்க் கொண்டு தான் அச்சகம் மூலம் கொடுக்கும் போது சற்று விலை குறைய வாய்ப்புள்ளது. இந்த பயிற்சிப் புத்தகமானது நிச்சயம் 100 பக்கங்களுக்கு மேல் இருக்கும். அனைத்து விதமான மாணவர்களுக்கும் பயன்படும் படியாக இருக்கும். எனவே எதிர் வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் எவரும் தேர்ச்சி பெறவில்லை ,அனைவரும் தேர்ச்சி என்ற பதிலை கேட்க விரும்புகிறோம். எனவே தயவுக் கூர்ந்து தமிழாசிரியர்கள் இவற்றை எல்லாப் பதிவுகள் போலவும் கடந்து போய் விட வேண்டாம். உங்களுக்கு இங்கே பயிற்சி புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தினைக் கேட்பதற்கு GOOGLE FORMS வழங்கியுள்ளோம். உங்களின் பொன்னான கருத்தினை சிறிது நேரம் உங்கள் மாணவர்களின் நலனுக்கு ஒதுக்கி படிவத்தினை நிரப்பிவிடும் படி அன்போடு வேண்டுகிறேன். விரைவாக கருத்துகள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் பயிற்சி புத்தகம் அமையும்.
நன்றியுடன் தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள்