மாதிரி வினாத்தாள் 2021-2022
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
அறிவுரைகள்
: 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம்
உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும்.
1.வேர்க்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை
ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
அ)
குலை வகை ஆ) மணிவகை
இ) கொழுந்து வகை ஈ) இலை வகை
2.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ___,_________ வேண்டினார்.
அ)
கருணையன் ,எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத்,தமக்காக
இ)
கருணையன், பூக்களுக்காக ஈ)
எலிசபெத்,பூமிக்காக
3.தமிழினத்தை
ஒன்றுப்படுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது____
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
4.
மேன்மை தரும் அறம் என்பது_________
அ)
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது ஆ) மறுபிறப்பில்
பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது இ)
புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக
அறம் செய்வது
5.
ஊட்டமிகு உணவு உண்டார் – தொடரில் வினைமுற்றுக்கான வினையாலணையும் பெயரைக் காண்க
அ)
உண்டு ஆ) உண்ட இ) உண்டவர் ஈ) உண்பான்
6.
பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் என செந்நாப் போதார் கூறுகிறார்.
அ)
பெரிய கத்தி ஆ) இரும்பு ஈட்டி இ) உழைப்பின் ஊதியம் ஈ) வில், அம்பு
7.
காமராசர் நகர் எங்கே இருக்கிறது? – இவ்வினாவின் வகை யாது?
அ)
ஐய வினா ஆ) அறியா வினா இ) அறி வினா ஈ) கொடை வினா
8.
ஒருவர் பேசுவது போன்ற ஓசை பெறுவது__________
அ)
செப்பலோசை ஆ) அகவலோசை இ) துள்ளலோசை ஈ) தூங்கலோசை
9.
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – எண்ணுப்பெயருக்குரிய தமிழெண்ணைக் காண்க.
அ)
௧ ஆ) ௩ இ)௪ ஈ)௫
10.
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு
பொருள் கொள்ளுதல்____________
அ)
ஆற்று நீர் பொருள்கோள் ஆ)
நிரல் நிறை பொருள்கோள் இ) எதிர் நிரல்
நிறை பொருள்கோள் ஈ) கொண்டு
கூட்டுப் பொருள்கோள்
11. திறன்பேசியின் தொடுதிரை உடைந்து விட்டது-
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் தொகை யாது?
அ)
வேற்றுமைத் தொகை ஆ) வினைத்தொகை இ) பண்புத்தொகை ஈ) உம்மைத் தொகை
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15)
விடையளிக்க:-
தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ
12.இப்பாடலில் இடம்பெற்றுள்ள
எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) தூய்மணி – காய்மணி ஆ)
இளங்கூழ் - அந்தோ
இ) தூவும் – வாடி ஈ)
காய்மணி - இளங்கூழ்
13 ) பாடலின் சீர் மோனைச்
சொற்களைக் குறிப்பிடுக
அ) தூய்மணி – துளியிலது ஆ) காய்மணி – காய்ந்தென
இ) தூய்மணி – தூவும் ஈ)
முன்னர் -அந்தோ
14 ) இளங்கூழ் – பொருள் தருக
அ) குளிர்பானம் ஆ) தென்னையின் அடி இ) இளம் பயிர்
ஈ) முற்றிய பயிர்
15 ) இப்பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) நீதி வெண்பா ஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம் ஈ) தேம்பாவணி
பகுதி –
II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக
விடையளிக்க வேண்டும்.
16. தேம்பாவணி – குறிப்பு தருக.
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது பிரம்ம கமலம்.
ஆ. புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில்
பொறிக்கப்படுபவை மெய்க்கீர்த்திகள்.
18. கல்வி
பற்றி கா.ப.செய்கு தம்பி பாவலரின் கருத்தினை
முழக்கத் தொடர்களாக்குக
19. வசனக்
கவிதை – குறிப்பு வரைக
20. துரை.மாணிக்கம்
எழுதிய நூல்கள் யாவை?
21. “ செயற்கை
“ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
பிரிவு –
2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. தொழிற்பெயர்,வினையாலணையும் பெயர் வேறுபாடு
தருக.
23. அறியேன்– பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24. சொற்களின் கூட்டப் பெயர்களைக் காண்க:-
அ) பழம் ஆ) ஆடு.
25. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின்
சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?..இதோ இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம்
வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின்
வகைகளை எடுத்தெழுதுக.
26. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்கள் எண்ணங்களால்
நிரப்புக.
அ) அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின்
முகம் ________
ஆ) வெயில் அலையாதே; உடல் _________
27. கலைச்சொல் தருக:- அ. revivalism ஆ) land breeze
28. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
பகுதி –
III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு –
I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள்
விளக்குக.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு
விடை தருக;
தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர்
அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர்
செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,
புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல்
கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார்
குறிப்பிட்டிருக்கிறார்.
அ) ஆவூர் மூழங்கிழாரின் போர் அறம் யாது?
ஆ) போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?
இ) யாருக்கெல்லாம் தீங்கு வராத வண்ணம் போர் புரிய
வேண்டும்?
31. ‘
புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ - இது போல் இளம்பயிர் வகை மூன்றின் பெயர்களைத்
தொடர்களில் அமைத்து எழுதுக.
பிரிவு –
II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. ‘ மாளாத காதல் நோயாளன் போல் ‘ என்னும்
தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
33. எவையெல்லாம் அறியேன் என கருணையன் கூறுகிறார்?
34. “ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும்
நீதிவெண்பா பாடலை எழுதுக
(அல்லது )
“ வெய்யோன்“ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக
பிரிவு
-III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடையளிக்க:- 2×3=6
35. கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி
அமைவதை விளக்குக.
36 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து – அலகிட்டு வாய்பாடு
காண்க
37. தோட்டத்தில் மல்லிகைப்பூ
பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர்
நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில்
உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.
பகுதி -IV
( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க. 5×5=25
38. அ) சிலப்பதிகார மருவூர்ப் பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்
அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக
( அல்லது
)
ஆ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும்
பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு
மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
39. அ) புதிதாகத்
திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசிப் பயன்பாடு குறித்த அறிவுரைகளைக்
கூறி கடிதம் ஒன்று எழுதுக.
( அல்லது
)
ஆ)
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட
உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப்
பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41. நாமக்கல் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும் இளமாறன் மகள் யாழினி பத்தாம் வகுப்பு முடித்து அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் வேதியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்பிகிறார். அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எண் 13156071 அவரின் மதிப்பெண் பட்டியல் தமிழ் – 90, ஆங்கிலம் -80, கணிதம் – 90, அறிவியல் – 80, சமூக அறிவியல் - 90. தேர்வர் தம்மை யாழினியாக நினைத்துக் கொண்டு உரியப் படிவத்தை நிரப்புக.
42. நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றிற்கான மதிப்புரையினைக் குறிப்புகளைப்
பயன்படுத்தி எழுதுக.
குறிப்புகள்
: நூலின் தலைப்பு – நூலின் மையப் பொருள் – மொழி நடை – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்.
( அல்லது
)
ஆ) மொழி
பெயர்க்க:-
Malar: Devi,switch off the lights when you leave the room
Devi : Yeah! We have to save electricity
Malar : Our nation spends a lot of electricity for lighting
up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch
artificial moons to light our night time sky!
Malar: I have read some other countries are going to launch
these types of illumination satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons,they can
assist in disaster relief by beaming light on areas that lost power!
பகுதி – v
( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும்
விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய
சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை
விரிவாக எழுதுக.
( அல்லது
)
ஆ) சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறங்களைத் தொகுத்து,அவை இன்றும்
தேவையே என்பதனை நிறுவுக.
44. அ) அழகிரி சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும்
கதை மாந்தர் குறித்து எழுதுக
( அல்லது
)
ஆ) குறிப்புகளைக் கொண்டு நாடகம் ஒன்றை எழுதுக.
மாணவன்
– கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை
மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர
முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.
45. அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட
தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்
சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து,
பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து , அணியாகப் பூட்டி
அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த
தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
( அல்லது
)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று
தருக.
முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று
– மொழிப்பற்று – பொது வாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மக்கத்தான பணி – முடிவுரை
வினாத்தாள் – வடிவமைப்பு
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி,
சேலம் – மாவட்டம்.
CLICK HERE TO GET PDF