பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019- 2020
அறிவியல்
ஏழு மதிப்பெண் வினாக்கள்
முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்
மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும்.
1. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.
2. இசையரங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?
3. மின்னழுத்த வேறுபாட்டினை அளவிடும் கருவி யாது? மின் சுற்றில் இக்கருவியினை எவ்விதம் இணைப்பாய்?
4. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
5. மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை. அவர்களின் தெரிந்து கொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது?
6. தொழில் துறையில் கதிரியக்க ஐசோடோப்புகளின் பயன்களை தருக.
7. I)கீழ்க்கண்ட பொருட்கள் எவ்வளவு கிராம் அளவில் உள்ளன?
அ. 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு ஆ. 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு
இ. 5 மோல்கள் சல்ஃபர் மூலக்கூறு ஈ. 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு
II) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் சரியா.தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில் திருத்தி எழுதுக.
அ. ஒரு கரைசலில் குறைந்த அளவில் உள்ள கூறு கரைப்பான் எனப்படும்.
ஆ. நீரில் சோடியம் குளோரைடு கரைக்கப்பட்ட கரைசல் நீரற்ற கரைசல் எனப்படும்.
இ. சிலிகா ஜெல் சேர்மத்தினை திறந்து வைக்கும் பொழுது அது காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சுகிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் பொருள் ஆகும்.
8. ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?
9. நிலைமத்தின் வகைகள் யாவை? அவற்றுள் ஏதேனும் ஒன்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக,
10. ஒலி மற்றும் ஒளி அலைகளுக்கு இடையேயான ஏதேனும் மூன்று வேறுபாடுகளைத் தருக.
11. நீராவிப்போக்கு ஒரு தேவையானத் தீமை. விளக்குக.
12. I) AB என்ற பொருள் குவிலென்சின் வளைவு மையம் C இல் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளது. கதிர் வரைபடத்தை முழுவதுமாக வரைக.
13. I)மின்னோட்டம் என்றால் என்ன?
II)மின்னோட்டத்தின் அலகை வரையறு
III)மினோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிட முடியும்? அதனை ஒரு மின் சுற்றில் எவ்வாறு இணைக்க வேண்டும்?
IV) LED விளக்கின் நன்மைகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
14. A என்ற உலோகத்தின் எலக்ட்ரான் அமைப்பு 2,8,18,1 ஆகும். உலோகம் A ஆனது காற்று மற்றும் ஈரப்பதத்திற்கு உட்படுத்தும் போது B என்ற பச்சை நிற சேர்மத்தை உருவாக்குகிறது. உலோகம் A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து சேர்மங்கள் C மற்றும் D ஐ உருவாக்குகிறது. D ஆனது வாயுநிலைச் சேர்மம் ஆகும். A,B,C மற்றும் D ஆகியவற்றைக் கண்டறிக.
ஓர் ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H10O. அதில் -OH தொகுதியின் இட எண் 2. இந்த மதிப்பிலிருந்து.
அ. அதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை வரைக
ஆ. அச்சேர்மத்தின் IUPAC பெயரினை எழுதுக
இ. அச்சேர்மம் நிறைவுற்ற சேர்மமா அல்லது நிறைவுறாத சேர்மமா என எழுதுக.
15. சுவாச ஈவு – வரையறுக்க
16. I) 3R முறை என்றால் என்ன?
II) அ. டி.என்.ஏ. இரட்டிப்பாதல் நிகழ்வில் டி.என்.ஏ.வின் இரண்டு இழைகளையும் பிரிக்கும் நொதி ___
ஆ. இரட்டிப்பாதல் கவையின் மேலே உள்ள இரட்டைச் சுருளைப் பிரித்து, முறுக்கல்களை நீக்கும் நொதி _____
இ. நியூக்ளியோடைடுகளை சேர்க்கும் நொதி _______
ஈ. இரட்டிப்பாதல் கவையின் இரு பக்கங்களும் ___________ என்ற இடத்தில் சந்திக்கும் போது இரட்டிப்பாதல் முடிவடைகிறது.
CLICK HERE TO GET DOWNLOAD PDF