பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019- 2020
அறிவியல்
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்
மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும்.
பத்தாம் வகுப்பு
அறிவியல்
பள்ளிக்கல்வித்துறை வழங்கிய ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து தொகுக்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திற்கான வினாக்கள் தொகுப்பு
இரு மதிப்பெண் வினாக்கள்
1. இயற்கை மற்றும் செயற்கைக் கதிரியக்கத்தின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
2. மீள் மற்றும் மீளா வேதிவினைகளை வேறுபடுத்துக.
3. கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரின் அடிப்படையில் வகைப்படுத்தி அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
அ. புரப்பேன் ஆ. பென்சீன்
4. மனிதர்களில் சுற்றோட்டமானது “ இரட்டைச் சுற்றோட்டம் “ என அழைக்கப்படுகிறது. ஏன்?
5. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி நிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?
6. உயிரி வாயுவைப் பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?
7. ‘ கொலஸ்ட்ரம்’ ( சீம்பால் ) என்றால் என்ன? பால் உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குப்படுத்தப்படுகிறது?
8. வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
9. மனோவியல் மருந்துகள் என்றால் என்ன?
10. சேர்மம் A என்பது நிறமற்ற,படிக வடிவமுடைய, நீரேறிய மெக்னீசியத்தின் உப்பு ஆகும். இதை வெப்பப்படுத்தும் போது சேர்மம் A இழந்த நீர் மூலக் கூறுகளின் எண்ணிக்கை, பச்சைவிட்ரியாலில் உள்ள நீர் மூலக் கூறுகளின் எண்ணிக்கைக்குச் சமமானது.
அ. சேர்மம் A யை அடையாளம் காண்க.
ஆ. இந்த வெப்பப்படுத்தும் வினைக்கான வேதிச் சமன்பாட்டைத் தருக.
11. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
12. பறக்கும் திறன் இழந்த கிவி பறவையின் இறக்கைகளை பெறப்பட்ட பண்பாகக் கருதலாம். காரணம் கூறுக.
13. பீனோடைப் மற்றும் ஜீனோடைப்பை வேறுபடுத்துக.
14. கூற்று :rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது
காரணம் : இலக்கு உயிரினத்தில் விரும்பத்தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத்தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன.
அ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ. கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
15. மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை எழுதுக.
16. மின்னாற்றல் நுகர்வின் அலகினை வரையறு
17. “ குளிர் பிரதேசங்களில் நீர் வாழ் உயிரினங்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ஜின்றன” காரணம் எழுதுக.
18. ஒரு கரைசலில் உள்ள ஹைட்ராக்சைடு அயனின் செறிவு 1 × 10 -11 எனில் அக்கரைசலின் pH மதிப்பைக் காண்க.
19. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
இந்நிகழ்ச்சி செல்லின் எப்பகுதியில் நடைபெறுகிறது?
20. உடற்பருமனுக்குக் காரணமான காரணிகள் எவை?
21. 1 × 10 -5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் PH மதிப்பைக் கணக்கிடுக.
22. மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன?
23. கீழ்க்காணும் கதிர் வரைபடத்தை நிறைவு செய்க.