பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019- 2020
அறிவியல்
நான்கு மதிப்பெண் வினாக்கள்
முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்
மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும்.
பத்தாம் வகுப்பு
அறிவியல்
பள்ளிக்கல்வித்துறை வழங்கிய ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து தொகுக்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திற்கான வினாக்கள் தொகுப்பு
நான்கு மதிப்பெண் வினாக்கள்
1. பொருத்துக.
அ. நியூட்டனின் முதல் விதி - I. ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது.
ஆ. நியூட்டனின் இரண்டாம் விதி - II. பொருட்களின் சமநிலை
இ. நியூட்டனின் மூன்றாம் விதி - III. விசையின் விதி
ஈ. நேர்கோட்டு உந்த அழிவின்மை விதி - IV. பறவை பறத்தலில் பயன்படுகிறது.
2. I) எதிரொலி கேட்பதற்கு தேவையான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.
II) எதிரொலியின் மருத்துவப் பயன்கள் இரண்டினைக் கூறுக.
3. I) கீழ்க்கண்டுள்ள கரைசல் வகைகள் ஒவ்வொன்றுக்கும் ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
அ. திரவத்தில் வாயு ஆ. திரவத்தில் திண்மம்
II) 1.0 × 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் PH மதிப்பைக் கணக்கிடுக
4. I) உடற்செல் ஜீன் சிகிச்சை மற்றும் இனச்செல் ஜீன் சிகிச்சையை வேறுபடுத்துக.
II) HIV பரவக்கூடிய பல்வேறு வழிகளைக் கூறுக.
5. I) கீழ்க்கண்ட கூற்றின் தன்மையை சரியா? அல்லது தவறா? என அறிந்து தவறை சரி செய்து எழுதுக.
சார்லஸ் விதியின் படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவின் வெப்ப நிலை அதன் பரும அளவிற்கு எதிர் தகவில் அமையும்.
II) கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ. வெப்பம் மற்றும் வெப்ப நிலை என்பது ____________ அளவுகள்
ஆ. பொருளொன்றின் மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் _________ ஆகும்
6. பொருத்துக.
7. I) பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்தத் திசுக்களின் மேல் செயல்படுகின்றன?
II) அல்லோசோம்கள் என்றால் என்ன?
8. தகுந்த காரணங்களோடு தொடர்புப் படுத்தி கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ. வெளவால்கள் : மீயொலி புவி அதிர்வு : ______________
ஆ. பொதுவாகப் பேசும் கூடம் : எதிரொலியின் பயன்பாடு செயற்கைக்கோள் இருப்பிடம் அறிதல் : ___
9. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களைக் குறிப்பிடுக.
10. DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.
11. I) அ) வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே எண்ணிக்கையிலான ________ஐப் பெற்றிருப்பது ஐசோடோங்கள் எனப்படும்.
ஆ) ஒரு மூலக் கூறிலுள்ள அணுக்களின் எண்ணிக்கை அதனுடைய ______ என அழைக்கப்படுகிறது.
II) துரு என்பது என்ன? துருப்பிடித்தலுக்கான வேதிச்சமன்பாட்டை எழுதுக,
12. MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் பொழுது என்ன நிகழ்கிறது? சரியான வேதிச்சமன்பாட்டை எழுதுக.
13. செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எடுத்துக்காட்டுகள் தருக.
14. மாதவிடாய் நாட்களில் மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும்?
15. I) புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
II) புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?
16. பொருத்துக.
அ. மின்னோட்டம் - I) வோல்ட்
ஆ. மின்னழுத்த வேறுபாடு - II) ஓம் மீட்டர்
இ. மின் தடை எண் - III) வாட்
ஈ. மின் திறன் - IV) ஆம்பியர்
17. I) மோல் எண்ணிக்கையைக் காண்க.
அ. 27g அலுமினியம் ஆ. 1.51×1023NH4CI மூலக் கூறுகள்
18. பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை படம் வரைந்து பாகங்களுடன் விளக்குக.
19. I) ஒரு தூய நெட்டைத் தாவரமானது ( TT ) தூய குட்டைத் தாவரத்துடன் (tt) கலப்பு செய்யப்படுகிறது. இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறை தாவரங்கள் எவ்வகைத் தன்மையுடையன என்பதனை விளக்குக.
II) தவறான கூற்றைத் திருத்தி எழுதவும்.
அ. உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் சார்லஸ் டார்வின்
ஆ. பறவைகள் பாலூட்டிகளிலிருந்து தோன்றியவை.
20. இருவித்திலைத் தாவர வேரின் உள்ளமைப்பின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க.
21. Rh காரணியைக் கண்டறிந்தவர் யார்? அது ஏன் Rh காரணி என அழைக்கப்படுகிறது.
22. பரிணாமத்திற்கான உந்து விசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு?
23. பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு என்ன?
CLICK HERE TO GET DOWNLOAD PDF