9TH - TAMIL - UNIT TEST - UNIT 7,8,9

 KALVIVITHAIGAL

வகுப்பு :           9        இயல் : 7,8,9  பாடம் : தமிழ்        மொத்த மதிப்பெண் : 50

I. பலவுள் தெரிக:-                                                                     5× 1= 5

1. இந்திய தேசிய இராணுவம்______ இன் தலைமையில் _________ உருவாக்கினர்.

) சுபாஷ் சந்திர போஸ், இந்தியர்          ஆ) சுபாஷ் சந்திர போஸ் – ஜப்பானியர்    

) மோகன் சிங், ஜப்பானியர்                ஈ) மோகன்சிங் – இந்தியர்

2) இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக.

அ ) உருவகத் தொடர், வினைத்தொகை   ஆ) பண்புத் தொகை – வினைத் தொகை 

இ) வினைத் தொகை , பண்புத்தொகை    ஈ ) பண்புத் தொகை – உருவகத் தொடர்

3. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

   ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?

) நாள்           ) மலர்           )  காசு                    ) பிறப்பு

4 ) பொருத்தமான தமிழ் எண்ணைக் காண்க: தமிழிலுள்ள மொத்த எழுத்துகள் _______

அ ) ௨ ௪ ௭       ஆ ) ௨ ௧ ௬     இ ) ௨ ௬ ௭    ஈ ) ௩ ௦

5) கலைச்சொல் தருக : Humane

அ ) ஆளுமை   ஆ ) மனிதம்        இ ) உதவி          ஈ )  மறுமலர்ச்சி

II). அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                         5×2= 10

6. பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக:-

    மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான்.

7. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

8. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

9. கருகொண்ட பச்சைப் பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

10. ‘ டெல்லி நோக்கிச் செல்லுங்கள் ‘ என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

III) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                           2× 3= 6

11. ‘ சொல்அரும் சூல்பசும் ‘ எனத்தொடங்கும் சீவக சிந்தாமணிப் பாடலை எழுதுக

12.. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக் கணக்கில் இருப்பதாக திருத்தக்க தேவர் பாடியுள்ளார்?

IV) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        2× 3= 6

13. குறிப்பு வரைக : டோக்கியோ கேடட்ஸ்

14. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக..

V) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                         2× 3= 6

15. ஒரு நல்ல தோழியாக/தோழராக நண்பர்களுக்குச் செய்ய வேண்டியவைக் குறித்து உங்கள் கருத்துகளை எழுதுக

16. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

     அறம் நாணத் தக்க துடைத்து – அலகிட்டு வாய்பாடு எழுதுக

VI) . காட்சியைக் கண்டு கவினுற எழுதுக                                                    1× 5= 5

17.      

VI1) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                      2× 6= 12

18. அ) வார இதழ் ஒன்றில் படித்த கவிதையை/ கதையைப் பாராட்டி அந்த இதழாசிரியருக்கு

    கடிதம் எழுதுக

(அல்லது )

ஆ) ‘ எனது பயணம் ‘ என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.

19. அ) இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக.

( அல்லது )

ஆ) ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

click here to get pdf




Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post