மாதிரி வினாத்தாள் 2021-2022
ஒன்பதாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள்
: 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக்
கொள்ளவும்.அச்சுப்பதிவில்
குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத்
தெரிவிக்கவும்.
2) நீலம்
அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15
)
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும்
I) சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க: 15X1=15
1) தமிழ் வடமொழியின் மகளன்று என்று கூறியவர்
அ. முல்லரும் ஆ. வில்லியம் இ. கால்டுவெல் ஈ. ஜி.யு.போப்
2) ஏறு தழுவுதல் ______ நிலத்து மக்களின் அடையாளம்
அ.குறிஞ்சி ஆ.முல்லை இ.மருதம் ஈ.நெய்தல்
3) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?
அ.முத்துலெட்சுமி ஆ.மலாலா இ.சாவித்திரிபாய் பூலே ஈ.நீலாம்பிகை
அம்மையார்
4) இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்தவர்
யார்?
அ.கேப்டன் தாசன் ஆ.இராஜாமணி இ.ஜான்சி ஈ.தில்லான்
5) இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால்
தொடுக்கப்படும் செய்யுள் வகை
அ.கண்ணி ஆ.சிற்றிலக்கியம் இ.குறள் ஈ.சங்க இலக்கியங்கள்
6) வாவி என்பதன் பொருள்?
அ.வண்டு ஆ.தேன் இ.பொய்கை ஈ.குற்றம்
7) சீவகசிந்தாமணி ______ எனவும் அழைக்கப்படுகிறது
அ.மண நூல் ஆ.எட்டுத்தொகை இ.பத்துப்பாட்டு ஈ.முத்தொள்ளாயிரம்
8)நேர்+நிரை+நேர் என்றமையும்
மூவசைச்சீருக்கான வாய்பாடு
அ)தேமாங்காய் ஆ)புளிமாங்காய் இ)கருவிளங்காய் ஈ)கூவிளங்காய்
9) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
அ.6 ஆ.8 இ.10 ஈ.12
10) உறுபொருள் இலக்கணக் குறிப்பு எழுதுக
அ.வினைத்தொகை ஆ.வேற்றுமைதொகை
இ.உம்மைதொகை ஈ.உரிச்சொல் தொடர்
11) "இடைச் சொற்கள் தாமாகத் தனித்து
இயங்கும் இயல்பை உடையன அல்ல" என்று கூறியவர்?
அ.கம்பர் ஆ.வள்ளலார் இ.தொல்காப்பியர் ஈ.காரியாசான்
பாடலைப்படித்து
வினாக்களுக்கு விடையளிக்க:
கல்லிடைப் பிறந்த ஆறும் கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு
காக்கும் நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்
12.இப்பாடல் இடம்பெற்ற நூல்
அ.பெரியபுராணம் ஆ.புறநானூறு இ.தமிழ்விடு தூது ஈ.இராவண காவியம்
13.இப்பாடலை இயற்றியவர்
அ.புலவர் குழந்தை ஆ.ஔவையார் இ.மருதனார் ஈ.குடபுலவியனார்
14.முருகு என்பதன் பொருள்
அ.உடல் ஆ.தேன் இ.காற்று ஈ.வானம்
15.மல்லல் என்பதன் இலக்கணக்குறிப்பு
அ.வினையெச்சம் ஆ.உரிச்சொல் தொடர் இ.பெயரெச்சம் ஈ.முற்றெச்சம்
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
(21 கட்டாயவினா) 4X2=8
16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ) பூவின் தோற்ற நிலை அரும்பு எனப்படும்.
ஆ)“கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பாரதி
பெருமைப்படுகிறார்.
17)தமிழோவியம் பாடலாசிரியர்
குறித்து ஓரிரு வரிகள் எழுதுக.
18)வட திராவிட மொழிகள் நான்கனை எழுதுக.
19)நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப்
பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
20) சங்ககாலப் பெண்பா ற் புலவர்க ளின் பெயர்களை
எழுதுக
21)தூண் என முடியும்
திருக்குறளை எழுதுக.
பிரிவு -2
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க: 5X2=10
22)வல்லினம் மிகா இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக.
23)வீணையோடு வந்தாள்,கிளியே
பேசு-தொடரின் வகையைச் சுட்டுக.
24)மொழிபெயர்க்க: அ. Polyglot, ஆ. Philologist
25). பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
அ)
மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ______________ மொழியாகும்.
ஆ)
திராவிட மொழிகள் சில, பொதுப்
பண்புகளைப் (பெறு) _____________ .
26) ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக. பிரிந்து-பிரித்த
27) உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.
கயல் விழி உணவு சமைத்தாள் ;
உண்டவர் அமுது போன்ற சுவையில் நீந்தினர்
28) அகராதியில் காண்க. அ.இயவை, ஆ.சந்தப்பேழை.
பகுதி-3(மதிப்பெண்:18) பிரிவு-1 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான
விடையளிக்க:
29) ஏறுதழுவுதல் , திணை நிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
30) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக்
குறிப்பிடுக
31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-
தமிழர், போரிலும்
அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின்
கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப்
பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல்
கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்
மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
அ. போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?
ஆ. ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக்
குறிப்பிடுவது யாது?
இ. போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர்புரிய
வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?
பிரிவு-2
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான
விடையளிக்க (34 கட்டாய
வினா) 2X3=6
32) சமைப்பது தாழ்வா ? இன்பம் சமைக்கின்றார் சமை யல் செய்வார்.
அ)
இன்பம் சமைப்பவர் யார்? ஆ)
பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா ?
33'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
34) அ .ஒன்றறிவதுவே- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல்
எழுதுக (அல்லது)
ஆ.சொல்லரும்- எனத் தொடங்கும் பாடலை
அடிமாறாமல் எழுதுக
பிரிவு-3
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான
விடையளிக்க: 2X3=6
35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:
இன்மையின் இன்னாத
தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா .தது.
36)கைபிடி,கைப்பிடி –சொற்களின்
பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும்
எழுதுக.
37)உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38)அ)இராவணகாவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில்
காட்சிகளை விவரிக்க
(அல்லது)
ஆ)தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத்
தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
39)அ.சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின்
வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக்கல்வி அலுவலருக்கு வரவேற்பு
மடல் ஒன்றை எழுதுக.
(அல்லது)
ஆ.உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின், "கால்முளைத்த
கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
40)அ)நயம் பாராட்டுக:-
கல்லும் மலையும்
குதித்துவந்தேன் – பெருங்காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
-கவிமணி
(அல்லது)
ஆ) அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.
1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval
2. Sunset is still my favourite colour, and rainbow is second -
Mattie Stepanek
3. An early morning walk is a blessing for the whole day – Henry
David Thoreau
4. Just living is not enough… One must have sunshine, freedom, and
a little flower – Hans Christian Anderson
41) “இன்பத்தமிழ்” எனும் தலைப்பில் கவிதை படைக்க
42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43)அ) ஏறுதழுவுதல் தமிழரின்
அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க .
(அல்லது)
ஆ)நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள்
குறித்த செய்திகளை விவரிக்க.
44)அ)இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க
(அல்லது)
ஆ) ’தாய்மைக்கு வறட்சி இல்லை
’ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக
45)அ.நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு
மதிப்புரை எழுதுக
(அல்லது)
ஆ. "எனது பயணம்" என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.
CLICK HERE TO GET PDF
Pls upload pdf
ReplyDelete