8TH - TAMIL - NOTES OF LESSON - APRIL -2ND WEEK

 

நாள்                 :         11- 04-2022     முதல்  13 - 04 - 2022         

மாதம்                           ஏப்ரல்         

வாரம்               :           ஏப்ரல்    இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :             எட்டாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :  1. புணர்ச்சி

                                    2. விடுதலைத் திருநாள்

கருபொருள்                            :

Ø  புணர்ச்சி விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதுதல்

Ø  தேசிய விழாக்களின் சிறப்பினை உணர்ந்து கொண்டாடுதல்

உட்பொருள்                           :

Ø  நிலைமொழி,வருமொழி அறிதல், உயிரீற்று புணர்ச்சி,உயிர் முதல் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி,மெய்முதல் புணர்ச்சி, புணர்ச்சியின் வகைகள்

Ø   ஆசிரியர் குறிப்பு, விடுதலைத் திருநாள் முக்கியத்துவம்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  வரைபத்தாள்,டகரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  புணர்ச்சி விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதுதல்

Ø  தேசிய விழாக்களின் சிறப்பினை உணர்ந்து கொண்டாடுதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  கோயில், கோவில் எது சரி? இதற்கான காரணம் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  நீங்கள் உங்களை சார்ந்து கொண்டாடடும் விழாக்கள் சிலவற்றைக் கூறுக. எனக் கேட்டு ஆர்வமூட்டல்.

படித்தல்                                  :

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

Ø  புணர்ச்சியின் தன்மைகள், வகைகளை விளக்குதல்.

நினைவு வரைபடம்                 :

                                                            புணர்ச்சி


    விடுதலைத் திருநாள்



  தொகுத்து வழங்குதல்             :

புணர்ச்சி

v  நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவதை புணர்ச்சி என்கிறோம்.

v  உயிரீற்றுப் புணர்ச்சி : நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக அமையும்.

v  மெய்யீற்றுப் புணர்ச்சி : நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக அமையும்.

v  உயிர் முதல் புணர்ச்சி : வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக அமையும்.

v  மெய்முதல் புணர்ச்சி : வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக அமையும்.

v  புணர்ச்சி – 2 வகை

o   1. இயல்பு புணர்ச்சி

o   2. விகாரப்புணர்ச்சி

v  இயல்பு புணர்ச்சி : நிலைமொழியும்,வருமொழியும் சேரும் போது எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாய் இணைவது.

v  விகாரப் புணர்ச்சி : நிலைமொழியும்,வருமொழியும் சேரும் போது மாற்றங்கள் கொண்டு இணைவது. இது மூன்று வகைப்படும்.

o   1. தோன்றல்

o   2. திரிதல்

o   3. கெடுதல்

விடுதலைத் திருநாள்

v  இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் நாள் இந்திய விடுதலைத் திருநாள்.

v  முந்நூறு ஆண்டுகளாய் அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிவுக்கு வந்தது என்பதனைக் கூறும் நாள்.

v  நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஒட விரட்டிய நாள் இன்று.

v  அடிமையாய்க் கிடந்த இந்தியத்தாயின் அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு,இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

v  பகத்சிங் தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக் கண்ணில்  கனவுக்கண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று

v  பூபாள இசை பாடும் நாள் இன்று

v  நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

வலுவூட்டல்                             :

Ø  காணொளி காட்சிகள் மூலம் பாடப்பொருளை வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  விகாரப் புணர்ச்சி _______ வகைப்படும்.

Ø  இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டுத் தருக.

Ø  தமிழ் + மொழி -இதில் நிலைமொழி எது? வரு மொழி எது ?

Ø  வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது

Ø  சபதம் என்பதன் பொருள் யாது?

Ø  பகத்சிங் கண்ட கனவு யாது?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

 பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ணச் சொற்களைப் படித்தல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

Ø   கவிதையினை உணர்வு பொங்க படித்தல்

Ø   கவிதையின் மையக் கருத்தினை அறிதல்

தொடர் பணி                          :

Ø  இயல்பு,தோன்றல்,திரிதல்,கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.

Ø  நீங்கள் விரும்பும் விழா ஒன்றினைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதுக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post