7TH - TAMIL - NOTES OF LESSON - APRIL -2ND WEEK


நாள்                 :           11-04-2022 முதல்  13-04-2022         

மாதம்               :             ஏப்ரல்           

வாரம்               :           ஏப்ரல்  - இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :            ஏழாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :          திருப்புதல் – இயல் -2

1.       புதுமை விளக்கு

2.      திருக்குறள்

 


பொது நோக்கம்:-

o   கற்றல் விளைவுகள்

o   பாடலின் பொருளை அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்

o   அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும், அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்

o   மன வரைபடங்கள் மூலமும், விரைவுத் துலங்கள் குறியீடு காணொலி மூலமும் பாடங்களை வலுவூட்டல்

o   மாணவர்களிடம் ஒப்படைப்புகள் பெறுதல்

o   மாணவர்களின் கற்றல் அடைவுகளை சோதித்தல்

o   பாடங்கள் வெளிப்படுத்தும் கருத்துகளை மாணவர்கள் இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பு நோக்கல்

o   மனப் பாட பாடலை மனனம் செய்தல்

o   மனப்பாட குறளை மனனம் செய்தல்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

சில முக்கிய வினாக்கள்:

Ø  ஞானச்சுடர் என்பதனை பிரித்து எழுதுக

Ø  பொய்கையாவாரும்,பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?

Ø  பொய்கையாழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?

Ø  புதுமை விளக்கு மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக

Ø  ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

Ø  ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

Ø  சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

Ø  “ பிறப்பொக்கும் “ எனத் தொடங்கும் குறளை எழுதுக.

Ø  “ நாடு “ என முடியும் குறளை எழுதுக.

Ø  “ வினையால் “ எனத் தொடங்கும் குறளை எழுதுக.

__________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post