7TH -TAMIL -3RD TERM - UNIT 2 - STUDY MATERIAL

 

இயல்-2 புதுமை விளக்கு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “இடர் ஆழி நீங்குகவே ” – இத்தொடரில் அடிக்கோ டிட்ட சொ ல்லின் பொருள்_____.

அ) துன்பம்       ஆ) மகிழ்ச்சி           இ) ஆர்வம்   ஈ) இன்பம்

 2. ‘ஞானச்சுடர் ’ என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்ப து __________.

அ) ஞான + சுடர்     ஆ) ஞானச் + சுடர் இ) ஞானம் + சுடர்         ஈ) ஞானி + சுடர்

3. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

அ) இன்பு உருகு    ஆ) இன்பும் உருகு            இ) இன்புருகு     ஈ) இன்பருக

பொருத்துக.

1. அன்பு    – விளக்கு

2. ஆர்வம் – நெய்  

3. சிந்தை -  இடுதிரி

4. ஞானம் -  தகளி

குறுவினா

1.பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல் விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?

      பூமி,அன்பு

2. பொய்கை ஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?

     துன்பக்கடல் நீங்க வேண்டி

சிறுவினா

பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே  நெய்யாகவும்,இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு,ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.

சிந்தனை வினா

பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்?

பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நான் ஒழுக்கம், அன்பு,கல்வி,பண்பு ஆகியவற்றை விளக்காக உருவகப்படுத்துவேன்.

மொழியை ஆள்வோம்!

சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.

1. நெல்லையப்பர் கோவில் ___எங்கு__ உள்ளது ?

 2. முதல் ஆழ்வார்கள் ___எத்தனை__ பேர் ?

3. ____எப்படி___ சொற்களைப் பேச வேண்டும் ?

 4. அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர் ___யார்___?

5. அறநெறிச்சாரம் என்பதன் பொருள் ____என்ன___?

 

பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.

பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள். (எ.கா.) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?

 1. பூங்கொடி எப்போது பள்ளிக்குச் சென்றாள்?

 2. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?

 3. பூங்கொடி எங்குச் சென்றாள்?

 

தலைப்புச் செய்திகளை முழு சொற்றொடர்களாக எழுதுக.

(எ.கா.) தலைப்புச் செய்தி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – வானிலை மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

1.      சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்

2.    தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் - மக்கள் ஆர்வத்துடன் வருகை

தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்கத்திற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகைப் புரிந்தனர்.

3.    தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி – தமிழக அணி வெற்றி

தேசிய அளவிலானகைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.

4.    மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி – ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றார்.

5.    மாநில அளவிலான பேச்சுப்போட்டி- சென்னையில் இன்று தொடக்கம்

மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

கட்டுரை எழுதுக.

ஒற்றுமையே உயர்வு

 

முன்னுரை:                                                                                                                                                              .       ஒற்றுமையோடு கூடிய உயிரினங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி அடையும். ஒற்றுமையில்லாத உயிரினங்கள் எவ்வளவு வலிமை உடையனவாய் இருந்தாலும், அவை வாழ்க்கைப் போரில் தோல்வி அடையும். இவ்வுண்மையை உயிரினங்கள் பற்றிய உண்மையை ஆய்வோர் உணர்வர். வாழ்க்கைப் போரில் வெற்றிகாண விரும்புவோர் ஒற்றுமையைப் பேணுவாராயின், செயற்கரியவற்றைச் செய்து பெரும்புகழ் அடைவார்.                                   ஒற்றுமை உண்டாக வழி:                                                                                                                         .       ஒற்றுமை என்னும் எழில் மாளிகையை அன்பு என்னும் அடிப்படை அமைத்தும், ஒருவருக்கொருவர் உதவுதல் என்னும் செஞ்சாந்திட் டும், செவ்விய சிந்தனையென்னும் செங்கற்களை அடுக்கியும் எழுப்ப வேண்டும் அப்பொழுதுதான் ஒற்றுமை உருவாகும். மற்றும் பிறர் குற்றங்களை மன்னித்தல், கோபங்கொள்ளாமல் பொறுமையுடன் வாழ்தல் ஆகியவை அம்மாளிகையில் ஒளிவீசவல்ல ஒற்றுமை என்னும் சுடர்விளக்கின் உறுப்புக்களாகும். ஒற்றுமையின் பயன்கள்:                                                                                                          .        .      இல்வாழ்வின் ஒற்று மையே ஊரின் ஒற்றுமையாய் நாட்டின் ஒற்றுமையாய் உலகின் ஒற்றுமையாய் வளர்ச்சி அடையும். அவ்வளர்ச்சியிலே கல்வியின் மாண்பைக் காணலாம்; கலையின் நலத்தைக் காணலாம்; செல்வத்தின் செழிப்பைக் காணலாம்; இன்பத்தின் எழிலைக் காணலாம்; வீரத்தின் பொலிவைக் காணலாம்; வெற்றியின் விளைவைக் காணலாம். ஒற்றுமையின்மையால் விளையும் கேடுகள் :                                                                                .    ஒற்றுமை யின்மையால் விளைந்த கேடுகள் மிகப்பலவாகும். பண்டைத் தமிழ் மன்னர்கள் அழிந்ததற்குக் காரணம் யாது? ஒற்றுமை இன்மையால் அல்லவா? மாபெரும் இந்தியா சிறிய பிரிட்டனிடம் சிக்கியதற்கு இதுவன்றோ காரணம். தொழில் வளமும் பொருள் வளமும் ஏன் நசுங்கின? ஒற்றுமையோடு உழைக்கும் மனப்பாண்மை இல்லை. ஒற்றுமையோடு பாடுபடும் செயல்திறன் இல்லை. எனவே, துன்பம் மிகுந்தது. இன்பம் குறைந்தது.                                            முடிவுரை:                                                                                                                                      .   "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு'' என்னும் பாரதி பாடல் நமக்கு ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் காவியமாகத் திகழ்கின்றது. ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்ற உயரிய குறிக்கோள் உலக ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் திருமந்திரமாய் நிலவுகின்றது, வான்புகழ் வள்ளுவர் வழங்கிய திருக்குறள் ஒற்றுமையை வளர்க்கும் தாயுள்ளமாய்த் தொண்டு புரிகின்றது.

கீழ்க்காணும் படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக. (எ.கா.)

கரும்பலகை, வகுப்பறை,

மாணவர்கள்,புத்தகம், ஆசிரியர்கள், மாணவர் இருக்கை, வருகைப் பதிவு, கட்டுரை ஏடு, வீட்டுப்பாடம், தேர்வு

 (எ.கா.) மரம், நடைபாதை,

 பூங்கா,சருக்கு விளையாட்டு,பாதை

 கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தித் தொடர்கள் உருவாக்குக.

 (விதை, கட்டு, படி, நிலவு, நாடு, ஆடு)

 (எ.கா.) விதை - விதைநெல் வாங்கினான். சோளம் விதைத்தான்

கட்டு – மாட்டை இழுத்துக் கட்டு, கற்றவருக்கு கட்டுச்சோறு தேவையில்லை

படி – தேர்வுக்கு நன்றாக படி, படி அரிசி இலவசம் என அண்ணா அறிவித்தார்

நிலவு – இரவில் வானத்தில் நிலவு தெரியும், தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது

நாடு – பண்பாட்டில் சிறந்தது தமிழ்நாடு, அறிவை விரிவு செய்ய நூலகத்தை நாடு.

ஆடு – வயலில் ஆடு மேய்ந்தது, அவள் பரதம் நன்றாக ஆடினாள்.

 

கலைச்சொல் அறிவோம்.

 குறிக்கோள் - Objective

பொதுவுடைமை - Communism

வறுமை - Poverty

செல்வம் - Wealth

கடமை - Responsiblity

ஒப்புரவுநெறி - Reciprocity

லட்சியம் - Ambition

அயலவர் – Neighbour

 நற்பண்பு – Courtesy

 

திருக்குறள்

சரியான விடையித் தேர்ந்தெடுத்து எழுதுக:-

1.      ---------------------- நாட்டின் அரணன்று.

அ) காடு         ஆ) வயல்       இ) மலை       ஈ) தெளிந்த நீர்

2.    மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்.

 அ) பிறப்பால்  ஆ) நிறத்தால் இ) குணத்தால் ஈ) பணத்தால்

3.    நாடென்ப’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________.

அ) நான் + என்ப ஆ) நா + டென்ப இ) நாடு + என்ப ஈ) நாடு + டென்ப

4.     கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

 அ) கணிஇல்லது ஆ) கணில்லது இ) கண்ணில்லாது ஈ) கண்ணில்லது

பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1.      பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

2.    வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

3.    கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

 

          விடை :

வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

 

குறுவினா

1.      ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை , உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்

2.    ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும்

3.    சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்

 படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

1.      மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்

2.    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post