7.ஆம் வகுப்பு-தமிழ்-மூன்றாம் பருவம்
வினா விடைகள்
இயல்-1 விருந்தோம்பல்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.மரம் வளர்த்தால்-----பெறலாம்
அ.மாறி ஆ.மாரி இ.காரி ஈ.பாரி
2.நீருலையில்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ.நீரு+உலையில் ஆ.நீர்+உலையில் இ.நீர்+இலையில் ஈ.நீரு+இலையில்
3.மாரி+ஒன்று
என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ.மாரியொன்று ஆ.மாரியின்றி இ.மாரியன்று ஈ.மாரியென்று
குறுவினா
1.பாரி மகளிரின்
பெயர்களை எழுதுக
அங்கவை,சங்கவை
2. பொருள்
ஏதும் இல்லாத வீடுகளே இல்லை-எவ்வாறு?
பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத்
தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
சிந்தனை
வினா:
தமிழரின் பிற
பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
v ஈகை
v வீரம்
v இரக்கம்
v அன்பு
இயல்-1
திருநெல்வேலிச்சீமையும் கவிகளும்
டி.கேசி குறிப்பிடும திருநெல்வேலி கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுது்க
முன்னுரை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
எட்டையபுரம்:
கவிமணி பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்.
பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள், அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்தே சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர், அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
சீவைகுண்டம் – கொற்கை:
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர்.
கருவை நல்லூர்:
சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர், இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.
குற்றாலம்:
கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்த்து அமைந்திருப்பதைப்பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் இங்கு வந்தார். நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார்.
பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி, அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.
முடிவுரை:
தமிழ்மணம் கமழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்று போற்றுதலுக்குரிய நகர் திருநெல்வேலி என்பதை அறியமுடிகின்றது.
இயல்-1
அணி இலக்கணம்
குறுவினா
1. உவமை,
உவமேயம்,
உவம
உருபு விளக்குக.
மயில்
போல ஆடினாள். மீன் போன்ற கண்.
இத்தொடர்களைப்படியுங்கள்
. இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும் ,கண்ணுடன்
மீனையு ம் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில்,
கண்)
உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில்
வந்துள்ள ‘போல’,
‘போன்ற’
என்பவை உவம உருபுகளாகும்.
2.உவமை
அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
v
ஒரு பாடலில் உவமையும்,
உவமேயமும்
வந்து உவம உருபு வெளிப்படை யாக வந்தா ல் அது உவமை அணி எனப்படும்
v
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு
தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி
எனப்படும்.
பாடலைப் படித்து
வினாக்களுக்கு விடையளிக்க.
பனை மரமே பனை மரமே
ஏன்
வளந்தே இத் தூரம்?
குடிக்கப் பதனியானேன்!
கொண்டு விற்க நுங்கானேன்!
தூரத்து மக்களுக்குத் தூதோலை
நானானேன்!
அழுகிற பிள்ளைகட்குக் கிலுகிலுப்பை
நானானேன்!
கைதிரிக்கும் கயிறுமானேன்!
கன்றுகட்டத் தும்புமானேன்!
நாட்டுப்புறப்பாடல்
வினாக்கள்
1. பனை
மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை?
நுங்கு,பதனீர்
2. பனை
மரம் யாருக்குக் கிலுகிலுப்பையைத்தரும்?
பிள்ளைகளுக்கு
3. 'தூதோலை
'
என்னும்
சொல்லைப் பிரித்து எழுதுக.
தூது+ஓலை
4. பனைமரம்
மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.
நுங்கு,பதனீர்,கிலுகிலுப்பை,தூதோலை,கயிறு,தும்பு
5. பாடலுக்கு
ஏற்ற தலைப்பை எழுதுக.
பனைமரம்
தொடருக்குப் பொருத்தமான
உவமையை எடுத்து எழுதுக.
1. என்
தாயார் என்னை ______
காத்து
வளர்த்தார்.
(கண்ணை இமை காப்பது போல /
தாயைக் கண்ட சேயைப் போல )
2. நானும்
என் தோ ழியும் ______இணைந்து
இருப்போம்.
(இஞ்சி
தின்ற குரங்கு போல / நகமும் சதையும் போல )
3. திருவள்ளுவரின்
புகழை _____உலகமே
அறிந்துள்ளது.
(எலியும்
பூனையும் போல / உள்ளங்கை நெல்லிக்கனி
போல)
4. அப்துல்கலாமின்
புகழ் _____உலகெங்கும்
பரவியது.
(குன்றின்மேலிட்ட
விளக்கு போல/குடத்துள்
இட்ட விளக்கு போல)
(கிணற்றுத்தவளை
போல / பசுமரத்தாணி போல)
கொடுக்கப்பட்டுள்ள
ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை
உருவாக்குக.
1. நாகப்பட்டினம்
- நா, நாகம், நாடி,கடி, பட்டி,நாம்
2. கன்னியாகுமரி
- கன்னி,குமரி
, மரி ,கனி , கரி, மகன்
3. செங்கல்பட்டு
- செங்கல்,கல் ,கட்டு, பல்,செல்
4. உதகமண்டலம்
- கதம்,மண் , கலம்,
தலம், கண்
5. பட்டுக்கோட்டை
– படை,கோட்டை,பட்டை,பட்டு
கட்டுரை
எழுதுக:
என்னைக் கவர்ந்த
நூல்
முன்னுரை :
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்பார் தம் தமிழ்க்கவி பாரதியார். வள்ளுவனைத் தந்தது தமிழகம். அந்த வள்ளுவன் தந்ததோ திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை. நாடு, மொழி,இனம்,சாதி, சமயம், காலம் முதலிய வேறுபாடுகளின்றி உலக மக்களனைவராலும் ஏற்றுப் போற்றத்தக்க அறநெறிகளைக் கூறும் நூல் திருக்குறளாகும்.
திருக்குறளின் அமைப்பும் பெருமையும் :
திருக்குறள் அறத்துப்பால்,
பொருட்பால்,
இன்பத்துப்பால் என முப்பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்குப்
பத்துப்பாடல்கள் வீதம் 1330
குறள் வெண்பாக்களையும் உடையது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
ஏற்பட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். 'எல்லாப் பொருளும் இதன்பாலுள' என
நாகனாரும், 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்'என ஔவையாரும்
புகழும்நூல் திருக்குறள்.
உலகப் பொதுமறை :
திருக்குறள் உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அதற்குச் சான்று, உலகமொழிகள் பலவற்றுள்ளும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுதான். திருவள்ளுவர் தம் திருக்குறளில் உலகோர் அனைவரும் பின்பற்றத்தக்க நெறிகளையே கூறியுள்ளார்.கல்வி, கேள்வி, ஒழுக்கம், அடக்கம், வாய்மை, பொறுமை, ஈகை முதலிய பண்புகள் உலகோர் அனைவருக்கும் பொதுவானவை.
கருத்துக் களஞ்சியம் : . 'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்' என அறத்திற்கு விளக்கம் தந்து, “அறத்தான் வருவதே இன்பம்” அதனால் “அன்றறிவாம் என்னாது அறம் செய்க” என்றார்.“ஒழுக்கம் விழுப்பம் தரலான்”, “பரிந்தோம்பிக் காக்க” என்றார்.“நன்றி மறப்பது நன்றன்று”,“வறியார்க்கொன்று ஈவதே ஈகை”, “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பவை மனித வாழ்வை உயர்த்தும் அருள்மொழிகளாகும்.
முடிவுரை
: . இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்குச்
சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்,திருக்குறள் உலக மக்களுக்காகப் படைக்கப்பட்டது. ஆயிரத்து
முந்நூற்று முப்பது அருங்குறளையும் கற்போம்! கற்றபடி நிற்போம்!
கலைச்சொல் அறிவோம்.
நாகரிகம் - Civilization
வேளாண்மை - Agriculture
நாட்டுப்புறவியல் - Folklore
கவிஞர் - Poet
அறுவடை - Harvest
நெற்பயிர் - Paddy
நீர்ப்பாசனம் - Irrigation
பயிரிடுதல் - Cultivation
அயல்நாட்டினர் - Foreigner
உழவியல் - Agronomy