6TH -TAMIL -3RD TERM - UNIT 3 - STUDY MATERIAL

 

இயல் – 3

ஆசிய ஜோதி

          சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ______________

அ) ஜீவ ஜோதி ஆ) ஆசிய ஜோதி இ) நவ ஜோதி ஈ) ஜீவன் ஜோதி

 2. நேர்மையான வாழ்வை வாழ்பவர் ______________

\அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர் ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர் இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர் ஈ) தம் குடும்பத்தையே எண்ணிவாழ்பவர்

3. ஒருவர் செய்யக் கூடாதது ______________

அ) நல்வினை ஆ) தீவினை இ) பிறவினை ஈ) தன்வினை

4. 'எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

 அ) எளிது + தாகும் ஆ) எளி + தாகும் இ) எளிது + ஆகும் ஈ) எளிதா + ஆகும்

5. ’பாலையெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

 அ) பாலை+யெல்லாம் ஆ) பாலை+எல்லாம் இ) பாலை+எலாம் ஈ) பா+எல்லாம்

 6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

அ) இன்உயிர் ஆ) இனியஉயிர் இ) இன்னுயிர் ஈ) இனிமைஉயிர்

7. மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________

அ) மலைஎலாம் ஆ) மலையெலாம் இ) மலையெல்லாம் ஈ) மலைஎல்லாம்

குறுவினா

1.      அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?

இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.

2.    எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?

எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது.

3.    ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?

ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது

4.    உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?

நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும்.

 சிறுவினா

1.      எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?

தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.

சிந்தனை வினா

2.    பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

·        அவற்றை துன்புறுத்தக் கூடாது.

·        காடுகளை அழிக்கக் கூடாது

·        பறவைகளை கூட்டில் அடைத்து அழகு பார்க்க கூடாது.

மனித நேயம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ----------

அ) மனித வாழ்க்கை ஆ) மனித உரிமை இ) மனித நேயம் ஈ) மனித உடைமை 2. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ---------- காட்டியவர் வள்ளலார்.

அ) கோபம் ஆ) வெறுப்பு இ) கவலை ஈ) அன்பு

 3. அன்னை தெரசாவிற்கு ---------- க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது

அ) பொருளாதாரம் ஆ) இயற்பியல் இ) மருத்துவம் ஈ) அமைதி

4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ----------

அ) குழந்தைகளைப் பாதுகாப்போம் ஆ) குழந்தைகளை நேசிப்போம்

இ) குழந்தைகளை வளர்ப்போம் ஈ) குழந்தைகள் உதவி மையம்

பொருத்துக

1. வள்ளலார் - நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

 2. கைலாஷ் சத்யார்த்தி - பசிப்பிணி போக்கியவர்

3. அன்னை தெரசா - குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

விடை :

1.      வள்ளலார்                               பசிப்பிணி போக்கியவர்

2.      கைலாஷ் சத்யார்த்தி                 குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

3.      அன்னை தெரசா             -        நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

 சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1.      மனிதநேயம்

மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

2.    உரிமை

மக்கள் தங்கள் வாழ்க்கையை உரிமையுடன் வாழ வேண்டும்.

3.    அமைதி

அமைதிக்கான நோபல் பரிசு அன்னைத் தெரசா அவர்களுக்கு கிடைத்தது

4.    அன்புசெய்தல்

அனைத்து உயிர்களிடத்தும் நாம் அன்பு செய்தல் வேண்டும்.

குறுவினா

1.      யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

2.    வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?

தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்

3.    அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது?

தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி,“என்னைத் தொடாதீர்கள். என் நோய் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். என் உறவினர்களே என்னை வெறுத்து விலக்கி விட்டனர். என்னுடன் பேசுவதில்லை. என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்தப் பூனை மட்டுமே என்னுடன் இருக்கிறது” என அழுதார் மூதாட்டி. இதைக் கேட்ட அன்னை தெரசா கண்ணீர் விட்டார்.

சிறுவினா

1.      கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது?

சிறுவன் ஒருவன்,"பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை. வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்" என்ற பதில் கிடைத்தது. அந்தப் பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது. அவருடைய மனித நேயம் பிற்காலத்தில் அவரைப் பள்ளி செல்லாத குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. அதற்காக அவர் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார்.

சிந்தனை வினா

 அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.

         ஒரு நாள் அன்னை தெரசா வீட்டின் வாசற்படியில் நோயால் ஒரு பெண் மயங்கிக் கிடந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும்,கால தாமதத்தால் அந்தப் பெண் இறக்க நேரிட்டாள். இந்தக் கோர சம்பவத்தால் அன்னை தெரசா “ சிறிய அளவில் மருத்துவமனை “ ஆரம்பிப்பது என முடிவு செய்தார்.

மொழியை ஆள்வோம்

அகரவரிசைப்படுத்துக.

ஒழுக்கம் உயிர் ஆடு எளிமை அன்பு இரக்கம் ஓசை ஐந்து ஈதல் ஊக்கம் ஏது ஔவை

விடை : அன்பு  ஆடு     இரக்கம்          ஈதல்              உயிர்             ஊக்கம்          எளிமை

ஏது      ஐந்து              ஒழுக்கம்                   ஓசை             ஒளவை

கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக.

அ) அன்பு

அனைவரிடமும் காட்டுவது அன்பு

ஆக்கம் தருவது அன்பு

இன்பம் கொடுப்பது அன்பு

ஈகையை வளர்ப்பது அன்பு

அன்பே மனித பண்பு

ஆ) நட்பு

துன்பத்தில் கை கொடுப்பது நட்பு

இன்பத்தை பகிர்வது நட்பு

எதிர்பாராமல் சேருவது நட்பு

சாதி சமயம் காணா நட்பு

அதுவே என்றும் இனிப்பு

 

இ) உதவி

இல்லாதவருக்கு செய்வது உதவி

ஆபத்தில் செய்வது உதவி

கைம்மாறு கருதாதது உதவி

அனைவரிடமும் இருக்க

வேண்டிய பண்பு உதவி

பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க

( பக்க எண் : 202)

1.      அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?

பிரச்சனை இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்க விடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி

2.    இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?

உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி

3.    நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?

இயற்கை

4.    இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.

அமைதி

கடிதம் எழுதுக.

நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

         க. இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

        அரசினர் உயர்நிலைப்பள்ளி,

        கோரணம்பட்டி,

பெறுநர்

        மேலாளர்,

        தமிழ்விதைப் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

நாள் : 01-09 -2021     

இடம் : கோரணம்பட்டி                                                                                                          

தங்கள் உண்மையுள்ள,

                                                                                                          க.இளவேந்தன்.

                                                                                                          (மாணவர் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

தமிழ்விதைப் பதிப்பகம்,

சென்னை-600 001

கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.

 

நேற்று

இன்று

நாளை

எங்கள் ஊரில் மழை

பெய்கிறது

பெய்யும்

பெய்தது

 

 

இவை போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க.

 

நேற்று

இன்று

நாளை

எங்கள் பள்ளியில் பாடங்கள்

படித்தோம்

படிக்கின்றோம்

படிப்போம்

 

கலைச்சொல் அறிவோம்

 மனிதநேயம்                                         - Humanity

கருணை                                                - Mercy

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை      Transplantation

நோபல் பரிசு                                          - Nobel Prize

 சரக்குந்து                                               - Lorry

CLICK HERE TO DOWNLOAD BUTTON TO GET PDF THIS FILE


நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post