10TH - TAMIL - UNIT 8 - 40 MARKS QUESTIONS


 

வகுப்பு : 10                                                          இயல் : 08

பாடம் : தமிழ்                                                      மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                        4 × 1= 4

1. மேன்மை தரும் அறம் என்பது______________________

) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது     ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது ) புகழ் கருதி அறம் செய்வது          ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.

) உதியன்;சேரலாதன்            ) அதியன்;பெருஞ்சாத்தன்     

) பேகன்;கிள்ளிவளவன்         ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி

3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________

) இகந்தால் என்மனம் இறந்துவிடாது       ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்     ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

4. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________

) அகவற்பா                          ) வெண்பா                           ) வஞ்சிப்பா           ) கலிப்பா

II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        4× 2= 8

1. 1. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!

  உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

) அடியெதுகையை எடுத்தெழுதுக..

) இலக்கணக் குறிப்பு எழுதுக- கொள்க,குரைக்க

 2. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

3 குறிப்பு வரைக:- அவையம்.

4. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

III அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        3× 4= 12

    1.        சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

    2.      ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

        3‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம்என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்புசுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )

IV. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                  1× 4= 4

1. மாற்றம் எனது – எனத் தொடங்கும் காலக்கணிதப் பாடலை எழுதுக.

V. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                 2× 6= 12

1.பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

               கவிஞன் யானோர் காலக் கணிதம்

               கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

               புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

               பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

               இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

               இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

               ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

               அவனும் யானுமே அறிந்தவை;அறிக! 

CLICKHERE TO DOWNLOAD BUTTON AND GET TO PDF 


 

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post