10TH - TAMIL -UNIT 2 - STUDY MATERIAL

 TAMILVITHAI

குறிப்பு :

இந்த பதிவின் இறுதியில் காற்றே வா பாடத்திற்கு தனியாகவும், தொகைநிலைத்தொடர்கள் இலக்கணப் பகுதிக்கு தனியாகவும் இணையவழித் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரு பாடங்களுக்கும் இணைந்து ஒரு இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது.

 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள  தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில்  இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள 70 வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.  

மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை  அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின்  இணைய வழி தேர்வு எழுதவும்.

நன்றி,வணக்கம்

இயல் -2

உயிரின் ஓசை 

இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில் 

குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்

1. காற்றே வா

2. தொகை நிலைத் தொடர்கள்

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது  அனைத்து  பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மாணவர்கள்  இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து படிக்கவும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள்  குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து  உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறைக்கப்பட்டப் பாடத்தின் அடிப்படையில் இயல் 2 இல் இரு பாடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆயினும் இந்த இலக்கணப் பகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பகுதியினை நன்கு படித்து புரிந்து சிந்தித்து பின் பதில் அளிக்கவும். இங்கு கொடுக்கப்படும் வினாக்கள் ஒரு பயிற்சிக்கான வினாக்கள் மட்டுமே. தற்சமயம் திருப்புதல் தேர்வு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அந்த திருப்புதல் தேர்வுக்கு இந்த வினாக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியினை ஒரு முறைக்கு இரு முறை நன்கு படித்து பின் இந்த வினாக்களுக்கு விடையளிக்கவும். மீண்டும் மீண்டும் எழுதி உங்களின் உச்சப்பட்ச மதிப்பெண்ணை நீங்கள் அடையாளம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது  விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் நன்றாக பயிற்சி பெறவும். தங்களின் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளவும். இதனை ஏன் PDF ஆக கொடுக்கப்படவில்லையென்றால் இதனைப் பார்த்து எழுதும் போது இந்த வினாக்கள் உங்கள் மனதில் பதியும் என்பதால் கொடுக்கப்படவில்லை. நீங்கள் எழுதும் போதும் வினாவினையும், விடையினையும் சொல்லிக் கொண்டு எழுதுங்கள். இதனால் எழுத்துப் பிழை வருவது குறையும். தேர்வு நேரங்களில் மதிப்பெண் அதிகம் பெற உறுதுணையாக இருக்கும். எனவே மாணவர்கள் எந்த ஒரு பயிற்சித்தாளினையும் எழுதும் போது  இந்த முறையைப் பின்பற்றினால் உங்களுக்கு ஏற்படும் எழுத்துப் பிழை பெருமளவு குறையும். வாழ்த்துகள் மாணவர்களே..... வாருங்கள் வினா வங்கிக்கு சென்று வாசிப்போம்,எழுதுவோம். கற்றதை, பெற்றதை நினைவில் கொண்டு இணைய வழித் தேர்வினை எழுதி மதிப்பெண் பெற்றிடுவோம்.

இயல் - 3 க்கான இணையவழித் தேர்வு பெற - இங்கே சொடுக்கவும்

10.ஆம் வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண்

வினாவங்கி

(திருத்தி அமைக்கப்பட்ட பாடப்பகுதிக்கானது)

இயல் - 2
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக:-

1)’உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

  உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’-பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றவை


)உருவகம்,எதுகை     )மோனை,எதுகை     )முரண்,இயைபு ஈ)உவமை,எதுகை


2)பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?


)பண்புத்தொகைஆ)உவமைத்தொகை )அன்மொழித்தொகை  )உம்மைத்தொகை


3)’பிராண ரஸம் என்பதன் பொருள்……


)உயிர்வளி   )பழச்சாறு    )உயிர்வலி   )துன்பம்


4)’நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா,சிந்துக்குத் தந்தை,பாட்டுக்கொரு புலவன்’ என்றெல்லாம் புகழப்பட்டவர்


)பாரதிதாசன்   )கவிமணி   )பாரதியார்   )வாணிதாசன்


5)எட்டய்யபுர ஏந்தலாக அறியப்பட்ட கவிஞர்…….


)பாரதிதாசன்  )பாரதியார்   )கவிமணி  )சுரதா


6)கேலிச்சித்திரம்,கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்………


)பாரதிதாசன்  )கவிமணி   )சுரதா   )பாரதியார்


7)பாரதியார் எழுதிய காவியத்தைத் தேர்ந்தெடுக்க


)பாப்பா பாட்டு    )கண்ணன் பாட்டு    )பாஞ்சாலி சபதம்                             )புதிய ஆத்திச்சூடி


8)உரைநடையும்,கவிதையும் இணைத்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படுவது


)வசன கவிதை   )புதுக்கவிதை  )மரபுக்கவிதை   )ஹைக்கூ கவிதை


9)காற்று எதைச் சுமந்து வர வேண்டுமென பாரதி அழைக்கிறார்?


)கவிதையை  )மகரந்தத்தூளை   )விடுதலையை   )மழையை


10)வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்……..


)பாரதிதாசன்   )பாரதியார்    )கவிமணி   )வாணிதாசன்


11)பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்……..

1)இந்தியா   2)சுதேசமித்திரன்   3)எழுத்து   4)கணையாழி


)1,2 சரி   )முதல் மூன்றும் சரி  )நான்கும் சரி  )1,2 தவறு


12)வேற்றுமை,வினை,பண்பு முதலியவற்றின் உருபுகள் மறைந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட  சொற்கள் ஒரு சொல் போல் நிற்பது--------தொடராகும்.


)தொகாநிலை   )வேற்றுமை   )தொகைநிலை   )எழுவாய்


13)தொகைநிலைத்தொடர்----------வகைப்படும்.


)ஐந்து   )ஏழு   )ஒன்பது   )ஆறு


14)பனிக்கடல் என்பதன் இலக்கணக் குறிப்பு


)உவமைத்தொகை  )தொகையுவமை   )உருவகம்   )வேற்றுமைத்தொகை


15)வேற்றுமை உருபும்,பயனும் உடந்தொக்க தொகையைக் கண்டுபிடி


)பள்ளி செல்   )மக்கள் தொண்டு  )செய்தொழில்   )தைத்திங்கள்


16)காலம் கரந்த பெயரெச்சமே---------ஆகும்.


)பண்புத்தொகை  )வினைத்தொகை   )வினையெச்சம்  )பெயரெச்சம்


17)எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் என்னும் நான்கு அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது------


)உம்மைத்தொகை   )எண்ணும்மை  )அளவைப்பெயர்   )உவமைத்தொகை


18)மார்கழித்திங்கள்,சாரைப்பாம்பு ஆகியசொற்களில் இடம்பெற்ற பொதுப்பெயர்கள்


)மார்கழி,சாரை  )திங்கள்,பாம்பு   )மார்கழி,பாம்பு   )திங்கள்,சாரை


19)செங்காந்தள் என்ற தொகைச்சொல்லில் மறைந்து வரும் உருபு


)ஆன   )ஆகிய   )போன்ற   )


20)முறுக்குமீசை வந்தார் என்பது------------தொகை


)பண்புத்தொகை   )வினைத்தொகை  )அன்மொழித்தொகை    )இருபெயரொட்டுப்பண்புத்தொகை


21)இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்-------பெயர் முன்னும்,-------பெயர் பின்னும் வரும்.


)பொது,சிறப்பு ஆ)இடுகுறி,காரணம்  )காரணம்,இடுகுறி  )சிறப்பு,பொது


22)வேற்றுமைத்தொகை--------வகைப்படும்.


)6   )7   )8   )9

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்புதமிழ்

இயல் - 2

உயிரின் ஓசை

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-        

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம்,எதுகை   ) மோனை,எதுகை  ) முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை

2. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ)அன்மொழித்தொகை) உம்மைத்தொகை

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-              

1. நமக்கு உயிர் காற்று

  காற்றுக்கு வரம் மரம்மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

v  மரம் வளர்ப்போம்;காற்றின் பயன் அறிவோம்

v  மரம் நடுவோம்;காற்றை பெறுவோம்

2. வசன கவிதைகுறிப்பு வரைக.

               உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

3. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

v  .தண்ணீரைக் குடிஅவன் தண்ணீரைக் குடித்தான்

v  தயிரை உடைய குடம்கமலா தயிர்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

) சிறுவினா                                                                                                                      1. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.

 

மல்லிகைப்பூ

இருபெயரொட்டு பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

 

நெடுவினாக்கள்

1. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

               வளரும் விழி வண்ணமேவந்து

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

               விளைந்த கலை அன்னமே

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

               நடந்த இளந்தென்றலேவளர்

  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

               பொலிந்த தமிழ் மன்றமே

  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

மோனை நயம்:

               செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.

               லர்ந்தும்  லராத

               ளரும்     ண்ணமே

எதுகை நயம்:

               செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.

               ர்ந்தும்  ராத

சந்த நயம்:

               இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

இயைபு நயம்:

               இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.

               வண்ணமே

               அன்னமே

முரண் நயம்:

               முரண்பாடாக அமைவது முரண்.

                              மலர்ந்தும் × மலராத

                              விடிந்தும்  × விடியாத

பொருள் நயம்:

               காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

மொழியை ஆள்வோம்

இயல் -2

) தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக:-

               The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

விடை:

               பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.           

                                            

) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-                      

சொற்கள்

தொகை

தொடர்

இன்சொல்

பண்புத்தொகை

முகில் அனைவரிடமும் இன்சொல் பேசினான்

எழுகதிர்

வினைத்தொகை

வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து இன்பம் எழுகதிராய் வரும்

கீரிபாம்பு

உம்மைத்தொகை

நானும் அவனும் கீரியும் பாம்பும் போல இருப்போம்

பூங்குழல் வந்தாள்

அன்மொழித் தொகை

பூங்குழல் நந்தவனத்திற்கு வந்தாள்

மலைவாழ்வார்

வேற்றுமைத் தொகை

மலைவாழ்வார் காடுகளை பாதுகாக்கின்றனர்.

முத்துப்பல்

உவமைத் தொகை

அவள் முத்துப்பற்களால் சிரித்தாள்

 

) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

நறுமணம்

பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

புதுமை

இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

காற்று

நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

விண்மீன்

ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

காடு

 

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.

மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.

பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

1. மலர் உண்டு; பெயரும் உண்டுஇரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக.

விடை: மலருக்கு பெயர் உண்டு

2. அரும்பாகி மொட்டாகி பூவாகி..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

விடை: அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.

3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயங்களையும் எழுதுக.

விடை: 1. மல்லிகைப் பூ. – வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.

                2. சூரிய காந்திப் பூஎண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

4. அரிய மலர்இலக்கணக் குறிப்புத் தருக.

விடை:  பெயரெச்சம்

5. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.

விடை: இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மத்தை ஏற்றும்.



காற்றே வா


தொகைநிலைத்தொடர்கள் - பகுதி 1


தொகைநிலைத் தொடர்கள் பகுதி - 2



காற்றே வா - இணைய வழித் தேர்வு



தொகைநிலைத் தொடர்கள்




Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post