10TH - TAMIL - PUPLIC MODEL QUESTION 2 - ANSWER KEY

 

 

மாதிரி வினாத்தாள் 2021-2022

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                           மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)             அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

15×1=15

1.எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான சொல்_____

அ) எள்கசடு     ஆ) பிண்ணாக்கு                   இ) ஆமணக்கு            ஈ) எள்கட்டி

2. கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.

மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்

அ) மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

ஆ) கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

இ) திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

ஈ) மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

3.’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

அ) திருத்தணியும்,திருப்பதியும்   ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்

இ) திருப்பதியும் திருத்தணியும்  ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்

4. கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்        ஆ) யோசேப்பு            இ) அருளப்பன்            ஈ) சாந்தா சாகிப்

5. ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்                    ஆ) கூவிளம் புளிமா நாள்                  இ) தேமா புளிமா காசு    

ஈ) புளிமா தேமா பிறப்பு

6. எழுகதிர்,முத்துப்பல் – இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே___________

அ) வினைத்தொகை,பண்புத்தொகை    ஆ) உவமைத்தொகை,வினைத்தொகை

இ) உவமைத்தொகை,பண்புத்தொகை  ஈ) வினைத்தொகை,உவமைத்தொகை

7. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா    ஆ) வெண்பா   இ) வஞ்சிப்பா   ஈ) கலிப்பா

8. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

9.திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.இத்தொடருக்குப் பொருத்தமான நிறுத்தற்குறியிட்டத் தொடரைத் தேர்க.

அ) திருவள்ளுவர்,’ அறிவுடையார் எல்லாம் உடையார்’என்று’அறுதியிட்டுக்’ கூறுகிறார்.

ஆ) திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இ) திருவள்ளுவர்,” அறிவுடையார்,எல்லாம் உடையார்” என்று,அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஈ) ‘திருவள்ளுவர்’,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

10. பாரதியார் காற்றை’ மயலுறுத்து ‘ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்____________

அ) மணம் வீசும் காற்றாய் நீ வா          ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு நீ வா

இ) மயிலாடும் காற்றாய் நீ வா             ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா

11.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் __________

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்          ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                 ஈ) அங்கு வறுமை இல்லாததால்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

          அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

          மருளை அகற்றி மதிக்கும் தெருளை

          அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

          பொருத்துவதும் கல்வியென்றே போற்று

12. இப்பாடல் இடம் பெற்ற நூல் ____________

அ) நீதிவெண்பா                    ஆ) புறநானூறு           இ) வெற்றி வேற்கை    ஈ) கொன்றை வேந்தன்

13. பாடலின் சீர் மோனைச் சொற்கள் ______________

அ) அருளை,அருத்துவதும்        ஆ) அருளை,அறிவை              இ) அகற்றி, அருந்துணையாய்       

ஈ) அறிவை,அகற்றி

14.அருந்துணையாய் – இச்சொல்லைப் பிரித்தால் ___________

அ) அருந்துணை+ யாய்           ஆ) அருந்து  + துணையாய்      இ) அருமை + துணையாய்         

ஈ) அரு + துணையாய்

15. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது ____________

அ) அன்பு         ஆ) கல்வி        இ) மயக்கம்               ஈ) செல்வம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                        4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. தமிழ்ச்சொல்வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.

          தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும் போது, ஒரு பொருட் பல சொல்வரிசைகள் அவற்றில் தமிழில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியவனவாக கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி தெலுங்கு,கன்னடம் முதலிய பிற திராவிட மொழிக்குரியனவாக கருதப்படும் சொற்களும் தமிழில் உள. என்கிறார் கால்டுவெல்.

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

          அ. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் தமிழ்த்திரு.இளங்குமரனார்.

                 சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?

          ஆ. சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி.

                    சாலை விதிகளில் முதன்மையான விதி எது?

18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

          மருத்துவர் கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

19. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றினைக் குறிப்பிடுக.

          கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்.

         சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

20. முல்லை நிலத்திருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

          முல்லை – வரகு,சாமை

         மருதம் -  செந்நெல், வெண்ணெல்

21. குற்றம் – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

          குற்றம் இலனாய் குடிசெய்து வாழ்வானைச்

         சுற்றமாய் சுற்றும் உலகு

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                         5×2=10

22. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

          முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்.

தொகைச்சொற்கள்

தமிழ் எண்ணுரு

முப்பால்

ஐந்திணை

 

23. அறியேன் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

          அறியேன் – அறி + ய் + ஆ + ஏன்

         அறி – பகுதி

         ய்    - சந்தி

         ஆ – எதிர் மறை இடைநிலை புணர்ந்து கெட்டது

         ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

24. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

Ø  வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா.

Ø  .கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

         மெய்ப்பொருள் காண்ப தறிவு

25. “ எட்டு “ என்பதனைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

          எட்டு – தனிமொழி

         எள் + து – எள்ளை உண்  தொடர் மொழி

         இவ்வாறு சொல்லை பிரிக்காது ஒரு பொருளும், பிரித்து பார்த்தால் வேறொரு பொருளும் தந்து தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் உள்ளது.

26. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி தொடர் அமைக்க.

          அ. இயற்கை – செயற்கை

          இயற்கை காட்டில் செல்ல செயற்கை கருவிகள் பயன்படுகிறது.

          ஆ. தான் – தாம்

          தான் என்று இல்லாமல் தாம் என்று எல்லோரும் இருக்க வேண்டும்.

27. கலைச்சொல் தருக:-

          அ. Belief -       நம்பிக்கை

          ஆ) Renaissance - மறுமலர்ச்சி

28. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதனை நிலைநாட்ட, போரிடும் திணைக் குறித்து எழுதுக.

          பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவை ச்சூடிப் போர்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை.

 

         

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                             2×3=6

29. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தந்து விளக்குக.

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

தமிழர்,போரிலும் அறநெறிகளை பின்பற்றினர்.போர் அறம் என்பது வீரமற்றோர்,புற முதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

அ) போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?

போர் அறம் என்பது வீரமற்றோர்,புற முதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது

          ஆ) ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?

தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

          இ) போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள்

       குறிப்பிடுகின்றன?

போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.

31.” தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

          இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                      2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. “ மாளாத காதல் நோயாளன் போல் “ – என்னும் தொடரில் உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

          மருத்துவர் கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுப்போல நீங்காத துன்பத்தை எனக்கு தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

33. “ கவிஞன் யானோர் காலக் கணிதம்” – எனத் தொடங்கும் கவிஞர்  கண்ணதாசனின் கவிதையில் உங்களை கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.

          ஏதேனும் மூன்று கவிதை வரிகள் எழுதி அதன் காரணம் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

34. “ தண்டலை மயில்களாட “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக

          தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுக       ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ

 

(அல்லது )

          “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.

          தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

 

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-

35. தீவக அணியை விளக்கி,மூவகை தீவக அணிகளையும் குறிப்பிடுக.

செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோ டு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

இது முதல்நிலைத் தீவகம்

இடைநிலைத் தீவகம்

கடைநிலைத் தீவகம்

என்னும் மூன்று வகையாக வரும்.

36. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

      டைந்துடன் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

         

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

வன் /கண்

நேர் - நேர்

தேமா

2

குடி /காத் / தல்

நிரை-நேர்-நேர்

புளிமாங்காய்

3

கற் / றறி /தல்

நேர் – நிரை - நேர்

கூவிளங்காய்

4

ஆள் /வினை /யோ

நேர் – நிரை - நேர்

கூவிளங்காய்

5

டைந் /துடன்

நேர் - நிரை

கூவிளம்

6

மாண் / ட

நேர் - நேர்

தேமா

7

தமைச்சு

நிரைபு

பிறப்பு

                  இக்குறள் “ பிறப்பு “ எனும் வாய்பாட்டினைக் கொண்டு முடிந்துள்ளது.

37. கண்ணே கண்ணுறங்கு !

     காலையில் நீயெழும்பு!

     மாமழை பொய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

   பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர்வகைகளை எழுதுக.

         

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

 

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

38. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதீகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

         

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

விலை அதிகம்

 

( அல்லது )

ஆ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

       

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

 

       

39. அ)“ மரம் இயற்கையின் வரம் “ என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற  கட்டுரைப் போட்டியில்

      முதல்  பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

          சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

         நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

         பெறுதல்

                 திரு.இரா.இளங்கோ,

                 100,பாரதி தெரு,

                 சேலம்.

 

( அல்லது )

    ஆ) “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்”- குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி,அதனைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி,தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

      அ)  அனுப்புதல்

               ஆஆஆஆஆ,

               மாணவச் செயலர்,

               பத்தாம் வகுப்பு,

               அரசு உயர்நிலைப்பள்ளி,

               கோரணம்பட்டி,

               சேலம் – 637102.

          பெறுதல்

               தலைமை ஆசிரியர்,

               அரசு உயர்நிலைப்பள்ளி,

               கோரணம்பட்டி,

               சேலம் - 637102

                              அம்மா,

பொருள் :- பள்ளியைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்த செயல்திட்ட வரைவுக்கு ஒப்புதல் வேண்டி சமர்பித்தல் சார்பு.

          வணக்கம். நமது பள்ளியில் நாள்தோறும் தூய்மை சார்ந்த விழிப்புணர்வுகளை இறை வணக்கக் கூட்டத்திலும், வகுப்பறையில் ஆசிரியர்கள் கூறும் போது மட்டுமே செயல்படுகிறோம். இதனால் மற்ற நேரங்களில் மாணவர்கள் பள்ளியை அசுத்தம் செய்து விடுகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு பள்ளியைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய செயல்திட்டத்தினை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். இதற்கு தங்களின் ஒப்புதல் வேண்டும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்

·                                                                                                                                                                                                                                          இப்படிக்கு,

                                                                                               தங்கள் உண்மையுள்ள மாணவன்,

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ.

               நாள் : 16-04-2022

               இடம் : கோரணம்பட்டி

               இணைப்பு :-

               பள்ளியைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய செயல்திட்ட வரைவு

·                             உறைமேல் முகவரி

               பெறுதல்

               தலைமை ஆசிரியர்,

               அரசு உயர்நிலைப்பள்ளி,

               கோரணம்பட்டி,

               சேலம் - 637102

ஏற்புடைய கடித விளக்கம் இருப்பின் மதிப்பெண் வழங்குக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.


 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத      

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி 

காற்று என் தேவையை பற்றி எழுது என்றது

மனிதன் என் தவிப்பைப்

பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று

 

41. சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  மதியழகன் மகள் தமிழினியாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேரவிருக்கிறார். அவரின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  மதிப்பெண் பட்டியல்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர் தம்மை தமிழினியாளாக நினைத்து உரியப் படிவத்தை நிரப்புகிறார்.

பெயர்

தமிழினியாள்

தேர்வெண்

15016032

தமிழ்

92

ஆங்கிலம்

89

கணிதம்

100

அறிவியல்

75

சமூக அறிவியல்

88

 

42. அ) பள்ளியில் நான்,வீட்டில் நான் – என்னும் தலைப்புகளில் நீங்கள்,பள்ளியிலும், வீட்டிலும் நடந்துகொள்ளும் முறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக.

         

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

 

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

 

( அல்லது )

    ஆ) Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about out Tamil culture. Sangam Literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago.Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughtout India, Malaysia, Singapore,England and World wide.Though our culture is very old,it has been updated consistently. We should feel proud about our culture.Thank you one and all.

          மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.

43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்

           பேசுவதற்கான உரைக் குறிப்புகளை விரிவாக எழுதுக.

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.

         இது போன்று ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

( அல்லது )

    ஆ) சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறக்கருத்துகளைத் தொகுத்து, அவை இன்றும் தேவையே

           என்பதனை நிறுவுக.

          குறிப்பு சட்டம் எழுதி, ஐந்து அறங்களைத் தொகுத்து அவை இன்றைக்கு தேவை என்பதனை நிறுவும் விதமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

         

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

         பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும்,துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

         பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

( அல்லது )

     ஆ) அழகிரிசாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

          ஒருவன் இருக்கிறான்

-கு.அழகிரிசாமி

 

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

         கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

         எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

 

45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

    குறிப்புகள் : முன்னுரை – மனித வாழ்வு அறம் சார்ந்தது – இலக்கியம் காட்டும் அறம் – அறத்தான் வருவதே இன்பம் – முடிவுரை

முன்னுரை

மனித வாழ்வு அறம் சார்ந்தது

இலக்கியம் காட்டும் அறம்

அறத்தான் வருவதே இன்பம்

முடிவுரை

மேற்கண்ட குறிப்புச் சட்டம் இயற்றி ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக.

( அல்லது )

     ஆ) குமரிக்கடல் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு,பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் அமைத்து,பரணி பாடி, கலம்பகம் கண்டு,உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாக பூட்டி அழகூட்டி அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

          இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக,

1. சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

         சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

         சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு:-

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

கோரணம்பட்டி,

சேலம்.

TO CLICK DOWNLOAD BUTTON GET PDF 


 

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post