10TH - TAMIL - PUBLIC MODEL QUESTION - 8 MARK QUESTION

 

2019 - 2020 ஆம் கல்வி ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மூலம் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்கான வினாக்கள்  சிறு  வினாக்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

எட்டு மதிப்பெண் வினாக்கள்

முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்

மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும்.

( உரை நெடு வினாக்கள் )

வினா எண் : 43

1.      நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

2.    ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்காக சிறு கட்டுரை ஒன்றினை எழுதி,கட்டுரையின் சுருக்கத்தைச் சுவரொட்டியாக வடிவமைத்துத் தருக.

3.    தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைக் குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை விரிவாக எழுதுக.

4.    உங்களைக் கவர்ந்த எவரேனும் ஓர் அறிஞர் அல்லது அரசியல் தலைவர், தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தாமே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.

5.    சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறங்களைத் தொகுத்து,அவை இன்றும் தேவையே என்பதனை நிறுவுக.

6.    எழுத்தாளர் ஜெயகாந்தனின் இன்னொரு முகம் குறித்தும் அவரிடம்,’ தொடுத்த கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில்களுமாக’, ஜெயகாந்தன் குறித்து அறிந்தவற்றை விளக்குக.

 

( விரிவான நெடு வினாக்கள் )

வினா எண் : 44

1.      குறிப்புகளைக் கொண்டு நாடகம் ஒன்றை எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி

2.    நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா:

இடம் : பள்ளிக் கலையரங்கம்                                 நாள் : 08-03-2019

 

                   கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – சிறப்பு விருந்தினர் இதழாளர் – கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத்தலைவரின் நன்றியுரை.

 

3.    பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயல்.’ அன்னமய்யா’ புதிதாக வந்தவருக்கு உணவிட்ட செயலோடு ஒத்திருத்தலை ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதை வழி விளக்கி எழுதுக.

4.    அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

5.    ‘ என் மக்கள் அனைவருக்கும்  நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள் ‘ என்ற இராமானுசரின் கூற்றுக்கு ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

6.    அழகிரி சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

பொதுக் கட்டுரை

வினா எண் : 45

1.      குமரிக் கடல் முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து , அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

2.    குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொது வாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மக்கத்தான பணி – முடிவுரை

3.    குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

முன்னுரை – மனித வாழ்வு அறம் சார்ந்தது – இலக்கியம் காட்டும் அறம் – அறத்தான் வருவதே இன்பம் - முடிவுரை

4.    நீங்கள் சென்று வந்த அரசு பொருட்காட்சியில் அறிவிப்பு – அமைப்பு – சிறு அங்காடிகள் – நிகழ்த்தப்பட்ட கலைகள் – பேச்சரங்கம் – அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் போன்றவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு கட்டுரை எழுதுக.

5.    ‘ விசும்பின் துளியும் பசும்புல் தலையும் ‘ என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை ஒன்று எழுதுக.

குறிப்புகள் : முன்னுரை – இயற்கையோடு இயைந்து வாழ்வோம் – வானத்து மழைநீரைப் பூமியில் காப்போம் – மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம் – முடிவுரை

6.    குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதித் தலைப்பிடுக.

குறிப்புகள் : முன்னுரை – தமிழர் பண்பாட்டில் விருந்து – தமிழர் உணவு முறை – விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டின் மகுடம் – முடிவுரை.

7.    குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதி தலைப்பு ஒன்று தருக.

குறிப்புகள் : முன்னுரை – தமிழன் அறிவியலின் முன்னோடி – விண்வெளியும் கல்பனாச் சாவ்லாவும் – விண்ணியல் அறிவில் நமது கடமை – முடிவுரை

8.    உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் – சுழன்றும் ஏர் பின்னது உலகம்

-     இக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று எழுதி பொருத்தமான தலைப்பிடுக.

9.    குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

குறிப்புகள் : முன்னுரை – மொழிபெயர்ப்பு நூல்கள் – எட்டுத்திக்கின் கலைச் செல்வங்கள் கொண்ர்ந்திங்கு சேர்ப்பீர் – மொழிபெயர்ப்பும் கல்வியே – முடிவுரை

10.   உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக் குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரையாக்குக.

குறிப்புகள் : முன்னுரை – பொருள்காட்சி நடைபெறும் இடம் – பல்வேறு விளையாட்டு அமைப்புகள் – பலவிதமான வணிகம் – அரசின் நலத்திட்ட அரங்குகள் – மகிழ்வூட்டும் மக்கள் கூட்டம் – பாரம்பரிய நிகழ்கலைகள் – முடிவுரை.

11.    விசும்பின் துளியும் பசும்புல் தலையும் – காற்று மாசு – பசுமையைக் காப்போம் – மரம் நமக்கு வரம் – மழை நீர் உயிர் நீர்

-     இக்குறிப்புகளைப் பயன்படுத்தி ‘ இயற்கையைக் காப்போம் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

12.   குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று படைக்க.

குறிப்புகள் : முன்னுரை – இலக்கியம் காட்டும் அறம் – அறத்தான் வருவதே இன்பம் – அறவாழ்வே பண்பாட்டின் உச்சம் – அறம் என்பதே மனிதம் - முடிவுரை

click here to get pdf 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post