10TH - TAMIL - PUBLIC MODEL QUESTION - 5 MARK QUESTION

2019 - 2020 ஆம் கல்வி ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மூலம் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்கான வினாக்கள்  சிறு  வினாக்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.  

 

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

ஐந்து மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு

முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்

மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும்.

( செய்யுள் நெடு வினாக்கள் )

வினா எண் : 38

1.      நதியின் பிழையன்று

நறும்புனலின்மை அன்றே

          பதியின் பிழையன்று

                    பயந்த நம்மைப் புரந்தான்

          மதியின் பிழையன்று

                    மகன் பிழையன்று மைந்த

          விதியின் பிழை நீ

                    இதற்கென்னை வெகுண்டதென்றன்              - கம்பன்

 

          நதிவெள்ளம் காய்ந்து விட்டால்

          நதிசெய்த குற்றம் இல்லை

          விதிசெய்த குற்றம் இன்றி

          வேறு – யாரம்மா !                                               - கண்ணதாசன்

          கவிச் சக்கரவர்த்தியின் கவிதையையும், கவியரசின் கவிதையையும் ஒப்பிட்டுக் கருத்துகளை எழுதுக.

2.    சிலப்பதிகார மருவூர்ப் பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக

3.    கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

4.    இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்திப் பாடலின் அழகிய நயத்தைச் சுவைபட விளக்குக

5.    காலக் கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் உரைப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

6.    மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

 

கடித வினா

வினா எண் : 39

உறவு முறைக் கடிதம்

 

1.      ஓட்டுநர்  உரிமம் பெற்றுள்ள உறவினருக்கு, முக்கியச் சாலை விதிகளை விளக்கி,அவற்றைக் கடைபிடிக்க வலியுறுத்திக் கடிதம் ஒன்று எழுதுக.

2.    பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்காகப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

 

3.    ‘ மரம் இயற்கையின் வரம் ‘ என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

 

4.    நீங்கள் விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி,உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.

 

5.    புதிதாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசிப் பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்று எழுதுக.

 

6.    உங்கள் பள்ளியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவிற்கு,நிகழ்கலை வல்லுநர் ஒருவரை சிறப்பு விருந்தினராகப் பள்ளிக்கு அழைத்துக் கடிதம் எழுதுக.

 

கடித வினா

வினா எண் : 39

விண்ணப்பக் கடிதம்

1.      உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

2.    உங்கள் தெருவில் பழுதடியந்துள்ள மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகளைப் பொருத்துமாறு மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

3.    நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் குறுங்கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

4.    “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “  - குறித்த செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி,அதனைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுதுக.

5.    உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும் புயலில் சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும்,பழுதுபட்ட சாலைகளை சீரமைத்தும்,பழுந்தடைந்த மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.

6.    “ பள்ளித் தூய்மை – செயல்திட்டம் ‘ ஒன்றை உருவாக்கி மாணவர்களின் சார்பாக மாணவர் தலைவரான நீங்கள், உங்கள் பள்ளியின் தலைமையாசிரியருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக/நயமிகுத் தொடர்களில் எழுதுக

வினா எண் : 40

1    .


        

2. 


3. 



5. 


6. 


 

படிவங்கள்

வினா எண் : 41

1.      கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்க.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவம்

2.    மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவம்

3.    நூலக உறுப்பினர் படிவம்

4.    நூலக உறுப்பினர் படிவம்

5.    பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புதல்

6.    மேல்நிலை வகுப்பு – சேர்க்கை விண்ணப்பப் படிவம்

நிற்க அதற்குத் தக/மொழிப்பெயர்ப்பு

வினா எண் : 40

1.      நம் பழம்பெருமையையும்,வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்களான கல்வெட்டுகள்,கோவில்களிலும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் காணப்படும். அவற்றைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற ஐந்து செயல்களைப் பட்டியலிடுக.

2.      The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

3.    இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்கும் நிலையில், நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.


வ.எண்

நாம் செய்ய வேண்டிய அறங்கள்

அறங்கள் தரும் நன்மைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4.      1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

5.    தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றை ஐந்து தொடர்களில் பட்டியலிடுக.

6.    ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக.

யாழிசை

 

அறைக்குள் யாழிசை

       ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன்

       பேத்தி,

நெட்டுரு பண்ணினாள்

       நீதிநூல் திரட்டையே

-     பாரதிதாசன்

 

Its like new lute music

Wondering at the lute music

      Coming from the Chamber

Entered I to Look up to in still

      My grand – daughter

Learning by rote the verses –

     Of a didactic compilation

-     Translated by Kavignar Desini

 

அ. Lute music -                              ஆ. Grant-daughter -                        இ. To look up -

ஈ. Rote -                                      உ. Didactic compilation –

7.    பள்ளியில் நான், வீட்டில் நான் – என்னும் தலைப்புகளில் நீங்கள், பள்ளியிலும்,வீட்டிலும் நடந்துகொள்ளும் முறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக.

8.    மொழி பெயர்க்க:-

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutham region was fit for cultivation, as it had the most fertile lands. The properity of a  farmer depended on getting the necessary sunlight.Seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.

9.    நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றிற்கான மதிப்புரையினைக் குறிப்புகளைப் பயன்படுத்தி எழுதுக.

குறிப்புகள் : நூலின் தலைப்பு – நூலின் மையப் பொருள் – மொழி நடை – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்.

10.   மொழி பெயர்க்க:

Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about out Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamil who have defined grammar for  language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughtout  India, Srilanka, Malaysia, Singapore, England and World wide. Though our culture is very old, it has been updated Consistently. We should feel proud about our culture. Thank you one and all.

11.    கவிதையை உரையாடலாக மாற்றுக.

 

மகள் சொல்கிறாள்

அம்மா என் காதுக்கொரு தோடு – நீ

    அவசியம் வாங்கி வந்து போடு!

சும்மா இருக்க முடியாது – நான்

    சொல்லிவிட்டேன் உனக்கு இப்போது

தாய் சொல்லுகிறாள்

 காதுக்கு கம்மல் அழகன்று – நான்

    கழறுவதைக் கவனி நின்று

நீதர் மொழியை வெகுபணிவாய் – நிதம்

   நீ கேட்டு வந்து காதில் அணிவாய்

பின்னும் மகள்

ஆபர ணங்கள் இல்லை யானால் – என்னை

   யார் மதிப்பார் தெருவில் போனால்?

கோபமோ அம்மா இதைச் சொன்னால் – என்

    குறைதவிர்க்க முடியும்

அதற்குத் தாய்

 கற்பது பெண்களுக்கு ஆபரணம் – கெம்புக்

     கல்வைத்த, நகைதீராத ரணம்!

கற்ற பெண்களை இந்த நாடு – தன்

    கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அன்போடு

 

12.   மொழி பெயர்க்க:

Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

 

CLICK HERE TO GET PDF

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post