10TH - TAMIL - PUBLIC MODEL QUESTION - 3 MARK QUESTION

 

2019 - 2020 ஆம் கல்வி ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மூலம் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்கான வினாக்கள்  சிறு  வினாக்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். 


நன்றி ,வணக்கம்

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

மூன்று மதிப்பெண் வினாக்கள்

முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்

மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும்.

பிரிவு – 1

( உரைநடை சிறு வினாக்கள் )

1.      சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்கு எடுத்துக்காட்டு தந்து விளக்குக.

2.    உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

3.    சோலைக் ( பூங்கா ) காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஒரு சிறு உரையாடல் அமைக்க.

4.    ‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’

இது போல் இளம்பயிர் வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைத்து எழுதுக.

5.    ஜெயகாந்தனின் ‘ தர்க்கத்திற்கு அப்பால் ‘ சிறுகதையின் கதை மாந்தர் ஒருவரின் சிறப்புக் கூறு ஒன்றினைக் குறிப்பிட்டு எழுதுக.

6.    முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.

7.    “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

 

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

 

1.      தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

 

அ) ஆவூர் மூழங்கிழாரின் போர் அறம் யாது?

ஆ) போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

இ) யாருக்கெல்லாம் தீங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும்

 

2.    சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன,

 

அ) பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணை செய்கின்றன?

ஆ) நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

இ) நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக திகழ்கின்றன?

 

3.  பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல்

     விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த  

     ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும்    

    மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப்

    பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி

     நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

 

அ). புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

          ஆ). பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

இ). உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

 

4     தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

 

அ) போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?

ஆ) ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?

இ) போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?

 

5.  அம்மானை பாடல்கள்,சித்தர் பாடல்கள்,சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவு

 பெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கதைகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வேன்.

யான் முறையாக ஏட்டு ஏட்டுக் கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி

ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச்செல்வம் பற்றி ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

 

அ. ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?

ஆ. ம.பொ.சி. அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?

இ. ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி. அதனை எவ்வாறு ஈடு செய்தார்?

 

6.    தற்போது  வெளிவருகிற சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது, இன்றைய தொழில் நுட்பம். செயற்கை நுண்ணறிவு, படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

 

அ. திறன்பேசியைத் திறக்கும் பழைய முறைகள் எவை?

ஆ. திறன்பேசியில் படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?

இ. உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?


பிரிவு – 2

( செய்யுள் சிறு வினாக்கள் )

1.      தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவனவற்றைச் சுருக்கமாக எழுதுக.

2.    பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதனை எழுதுக.

பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

3.    மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

4.    ‘ கவிஞன் யானோர் காலக் கணிதம் ‘ – எனத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசனின் கவிதையில் உங்களைக் கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.

5.    ‘ மாளாத காதல் நோயாளன் போல் ‘ என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

 

கட்டாய வினா

1.      “ தூசும் துகிரும் ஆரமும் அகிலும் “ – எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக

2.    “ அன்னை மொழியே “ எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனாரின் பாடலை எழுதுக

3.    “ அன்னை மொழியே “ எனத் தொடங்கி ‘ பேரரசே ‘ என முடியும் அன்னை மொழியே பாடலை எழுதுக.

4.    ‘ மாற்றம் எனது மானிடத் தத்துவம் ‘ எனத் தொடங்கி ‘ தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!’ என முடியும் காலக் கணிதப் பாடலை எழுதுக.

5.    “ ஒலித்து அழுவ போன்றே “ – என முடியும் தேம்பாவணிப் பாடலை எழுதுக.

6.    “ தென்னன் மகளே !” எனத் தொடங்கும் ‘ அன்னை மொழியே ‘ பாடலை எழுதுக.

பிரிவு – 3

( இலக்கண சிறு வினாக்கள் )

1.      தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.

2.    தீவக அணியை விளக்கி, மூவகை தீவக அணிகளையும் குறிப்பிடுக.

3.    கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை விளக்குக.

4.    கண்ணே கண்ணுறங்கு!

  காலையில் நீயெழும்பு!

  மாமழை பெய்கையிலே

  மாம்பூவே கண்ணுறங்கு!

  பாடினேன் தாலாட்டு!

  ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

5     தன்மையணி என்பதனை விளக்கி, அதன் வகைகளை குறிப்பிடுக.

6     கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

7     நிரல் நிறை அணியை விளக்குக.

8     கொண்டு கூட்டுப் பொருள்கோளினை விளக்கி, எடுத்துக்காட்டு ஒன்று தருக.

9     அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

10    தீவக அணியை விளக்கி அதன் வகைகளை எழுதுக.

11     வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

அலகிட்டு வாய்பாடு காண்க.

1.      பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

2.    உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

3.    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்

4.    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

5.    வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு

6.    அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்

 CLICK HERE TO GET PDF

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post