ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 லிருந்து தொடங்குகிறது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். பத்தாம் வகுப்பு இந்த பொதுத் தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார்ப்படுத்திக்கொள்ளூமாறு கல்விவிதைகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்கள் முழுமையாக வழங்க இந்த கல்வி விதைகள் மிகவும் உறுதுணையாக விளங்கும்.அந்த வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 முதல் இயல் 9 வரை உள்ள குறைக்கப்பட்டப் பட்டப் பாடப் பகுதியிலிருந்து புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் ஒரு மதிப்பெண் வினாக்களை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். தற்சமயம் பள்ளி அளவில் மூன்றாம் திருப்புதல் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் திருப்புத தேர்வுக்கு தயாராகும் வண்ணம் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கும் வினாக்களை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இயல்கள் திருப்புதல் தேர்வு முடிந்தவுடன் பதிவேற்றம் செய்யப்படும்.
குறிப்பு : இந்த ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகள் , PDF மற்றும் இதன் இணைய வழித் தேர்வு நாளை பதிவேற்றம் செய்யப்படும். நன்றி, வணக்கம்.
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1)சுதந்திர
இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது----
அ)அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ)அறிவியல்
முன்னேற்றம்
இ)பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் ஈ) வெளிநாட்டு
முதலீடுகள்
2)பூக்கையைக்
குவித்துப்பூவே புரிவொடு காக்க என்று
---------------------------------,------------------------------------------வேண்டினார்.
அ)கருணையன் எலிசபெத்துக்காக ஆ)எலிசபெத்
தமக்காக
இ)கருணையன் பூக்களுக்காக ஈ)எலிசபெத் பூமிக்காக
3)வாய்மையே
மழைநீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி-----------------------------
அ)உவமை
ஆ)தற்குறிப்பேற்றம் இ)உருவகம் ஈ)தீவகம்
4)கலையின்
கணவனாகவும், சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்-இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது___________________________
அ)தம்வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ)சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ)அறத்தைக் கூறுவதற்காக எழுதினார் ஈ)அழகியலுடன்
இலக்கியம் படைத்தார்.
5) சாகித்திய
அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தனின் புதினம்_________________________
அ)கங்கை எங்கே போகிறாள்?
ஆ)யாருக்காக அழுதாள்
இ)சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ)இமயத்துக்கு அப்பால்
6)வியாசர்
பாரதத்தை எழுதியதன் காரணமாக ஜெயகாந்தன் கூறுவது-----------------------------------------------------
அ)இறைவனின் வேண்டுகோளின் படி
ஆ)தர்மார்த்தங்களை உபதேசிக்க
இ)இலக்கிய ஆர்வத்தால் ஈ)சமூகப்பணிக்காக
7)தொகைச்
சொல்லை விரித்து எழுதுக: நாற்பொருள்
---------------------------------------------
அ)அரிசி,பருப்பு,தானியம்,பழங்கள்
ஆ)அறம்,பொருள்,இன்பம்,வீடு
இ)நகை,அழுகை,வெகுளி,மருட்கை
ஈ)
சினம்,சிரிப்பு,துன்பம்,இன்பம்
8)’ஓரிரு பாயிரம் தோற்றி மும்மையினொன்றாய்
நாற்பொருள் பயத்தலொடு எழுமதந்தழுவி’ - இவ்வடிகளில் கூறப்பட்டது---------------------------------------
அ)இலக்கணம் ஆ)நூல் வரலாறு இ)நூலின்
இயல்பு ஈ)ஆசிரியன் வரலாறு
9) வடிவத்தை
வளமாக்குவது என ஜெயகாந்தன் குறிப்பிடுவது-----------------------------------------
அ)மொழிநடை
ஆ)அர்த்தம்
இ)சொல்வளம் ஈ)
மொழி ஆளுமை
10)துவேஷம்
என்ற சொல்லின் பொருள்-------------------------------
அ)நடிப்பு
ஆ)திறமை இ)ஆற்றல் ஈ)பகை
அல்லது வெறுப்பு
11)தேவன்
வருவாரா? என்பது ஜெயகாந்தனின்----------------------
அ)சிறுகதை தொகுப்பு ஆ)குறும்
புதினம் இ)கவிதை
ஈ)நாடகம்
12)பொருந்தாத
சொல்லைக் கண்டறிக------------------------------------
அ)கை விலங்கு
ஆ)பிரளயம்
இ)கருணையினால் அல்ல ஈ)சுந்தர
காண்டம்
13)பிரெஞ்சு
மொழியில் வெளிவந்த காந்தியின் வாழ்க்கை வரலாறு----------------------------------------------
அ)சத்தியாகிரகம் ஆ)எனது போராட்டம் இ)வாழ்விக்கவந்த காந்தி ஈ)
போர்பந்தர்
14) முன்சி
பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு------------------------
அ)மூன்சி லைப் ஆ)ஒரு கதாசிரியனின் கதை இ)எழுத்தாளன் ஈ)எழுதுகிறேன்
15)திரைப்படமாக
எடுக்கப்பட்ட ஜெயகாந்தனின் படைப்பு--------------------------------
அ)யாருக்காக அழுதான் ஆ)யுக சந்தி இ)குருபீடம்
ஈ)பிரம்ம உபதேசம்
16)ஒரு
தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு
வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்
என்று கூறியவர்
அ) அசோகமித்திரன்
ஆ) அகிலன்
இ) ஜெயகாந்தன் ஈ)
செல்லப்பன்
17)’எண்ணமும் எழுத்தும்
உயர்ந்திருக்கும் - ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்‘இவ்வடிகளில்
ஜெயகாந்தன் குறிப்பிடுவது யாருடைய பாடல்?
அ)கண்ணதாசன் ஆ)மருதகாசி இ)ஆலங்குடி சோமு ஈ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
18)தன்னைப்
பெரிதும் பாதிப்பதாக ஜெயகாந்தன் குறிப்பிடுவது------------------------------------------------
அ)மனித வாழ்வின் பிரச்சினைகள் ஆ)அரசியல் குறுக்கீடு இ)வறுமை ஈ)சமூகம்
19)தர்க்கத்திற்கு
அப்பால் இது சிறுகதை
எந்த தொகுப்பில்
இடம்பெற்றுள்ளது?----------------------------------------------
அ)குருபீடம்
ஆ)யுக சந்தி
இ)ஒரு பிடி சோறு
ஈ)உண்மை சுடும்
20)சிறுகதை
மன்னன் என்று புகழப்பட்டவர்---------------------------
அ)கு,ப.ரா
ஆ)சுந்தர ராமசாமி
இ)ஜெயகாந்தன் ஈ)புதுமைப்பித்தன்
21)குடியரசுத்
தலைவர் விருது பெற்ற ஜெயகாந்தனின் படைப்பு-------------------------------------------------------
அ)தர்க்கத்திற்கு அப்பால் ஆ)இமயத்துக்கு
அப்பால் இ)யுக சந்தி ஈ) உன்னைப்போல் ஒருவன்
22)ஜெயகாந்தனின்
இமயத்துக்கு அப்பால் என்ற நூலுக்குக் கிடைத்த விருது----------------------------------------
அ)சோவியத் நாட்டு விருது ஆ)சாகித்திய அகாதமி
இ)ஞானபீட விருது ஈ) புலிட்சர் விருது
23)ஜெயகாந்தன்
சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆண்டு----------
அ)1972
ஆ)1971
இ)1975 ஈ)1978
24) தன்னுடைய
படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர்_____________________________
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன் ஈ)
ஜெயகாந்தன்
25)சமகாலக்
கருத்துக்களையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்--------------------------------
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன் ஈ)
கல்கி
26)பொருத்துக-------------------------------------------------
அ)தேவன் வருவாரா -
1. குறும்புதினம்
ஆ)சினிமாவுக்குப் போன சித்தாளு - 2.சிறுகதைத்தொகுப்பு
இ) சுந்தர காண்டம்
- 3.மொழிபெயர்ப்பு
ஈ) வாழ்விக்க வந்த காந்தி -
4. புதினம்
அ) 2
1 4 3 ஆ)1 2 3 4 இ)4 3 2 1 ஈ)3 2 4 1
27)படிக்காத
மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர்-------------------------------------------------
அ)அகிலன்
ஆ)புதுமைப்பித்தன் இ)கல்கி ஈ)ஜெயகாந்தன்
28)கிறிஸ்துவிற்கு
முன் தோன்றியவர்-----------------------------------
அ)சூசையப்பர்
ஆ)திருமுழுக்கு யோவான் இ)பேதுரு ஈ)ஆபிரகாம்
29)திருமுழுக்கு
யோவானை------------------------------- என்றும் அழைப்பர்
அ)அருளரசு
ஆ)அருள்தாசன் இ)அருளப்பன் ஈ)அருள்
மேத்யூஸ்
30)கிறிஸ்துவின்
வருகையை அறிவித்த முன்னோடி
--------------------------------
அ)சூசையப்பர்
ஆ)திருமுழுக்கு யோவான் இ)பேதுரு ஈ)ஆபிரகாம்
31)அருளப்பனுக்கு வீரமாமுனிவர்
தன் காப்பியத்தில்
----------------------------------------எனப் பெயரிட்டுள்ளார்.
அ) கருணாகரன்
ஆ) கருணையன்
இ)சூசையப்பர்
ஈ) பேதுரு
32)கருணையனின் தாயார்
---------------------------------
அ)எலிசபெத்
ஆ)எழிலரசி
இ)டயானா
ஈ)கிரேசி
33)கணீர்
- என்பதன் இலக்கணக்குறிப்பு---------------------------------
அ)வினையெச்சம்
ஆ)பெயரெச்சம்
இ)இடைக்குறை
ஈ)மரூஉ
34)காய்மணியாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ-இக்கூற்றுக்கு
உரியவன்------------------------------------------
அ)சூசையப்பர்
ஆ)பேதுரு
இ)அருளரசு
ஈ)கருணையன்
35)பிரித்தெழுதுக:உணர்வினொத்து---------------------------------
அ)உணர்வு+ஒத்து
ஆ)உணர்வி+ஒத்து
இ)உணர்வின்+ஒத்து ஈ)உணர்வின்+நொத்து
36)செல்வழி
- என்பதன் இலக்கணக்குறிப்பு----------------------------
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை இ)உம்மைத்தொகை ஈ)உவமைத்தொகை
37)தவமணி
மார்பன் யார்?--------------------------------------------
அ)சூசையப்பர்
ஆ)பேதுரு
இ)அருளரசு
ஈ)கருணையன்
38)உருபும்
பயனும் உடன்தொக்க தொகையைக் கண்டறிக.----------------------------------------
அ)அன்புண்டு
ஆ)வாய்மணி
இ) கைமுறை
ஈ)பொழிந்தான்
39)இஸ்மத்
சன்னியாசி என்பதன் பொருள்--------------------------
அ)அன்னியர் துறவி ஆ)உள்நாட்டுத் துறவி இ)தூய
துறவி ஈ)தொழில் செய்பவர்
40)இஸ்மத்
சன்னியாசி என்பது------------------------- மொழிச் சொல்
அ)உருது
ஆ)பாரசீகம் இ)கிரேக்கம் ஈ)இலத்தீன்
41)வீரமாமுனிவருக்கு
இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை அளித்தவர் ----------------------------------
அ)சந்தாசாகிப்
ஆ)முகமது சாஹிப்
இ)அஜ்மல் சாஹிப்
ஈ)வகாப் ரியாஸ்
42) தேம்பா+அணி எனப்
பிரித்தால்--------------------------------- என்றும்.தேன்+பா+அணி எனப்
பிரித்தால்---------------------------- என்றும் பொருள்படும்.
அ)தேன் போன்ற பாடல்,வாடாத மாலை
ஆ)வாடாத
மாலை,தேன் போன்ற பாடல்
இ)அணிகலன், வாடாத மாலை
ஈ)தேன்
போன்ற பாடல்,இனிமையான உணவு
43)கிறித்துவின்
வளர்ப்புத் தந்தை
அ)சூசையப்பர்
ஆ)பேதுரு
இ)அருளரசு
ஈ)கருணையன்
44)தேம்பாவணியின்
பாட்டுடைத் தலைவன்-------------------------
அ)பேதுரு
ஆ)கருணையன் இ)வீரமாமுனிவர் ஈ)வளன்
45)தேம்பாவணி---காண்டங்களையும்,---படலங்களையும்,--பாடல்களையும்
உடையது---------------------------------------
அ)36,3,3615
ஆ)3,30,1234 இ)3,36,3615 ஈ)6,30,5641
46)தேம்பாவணி
படைக்கப்பட்ட நூற்றாண்டு----------------------
அ)17
ஆ)15 இ)18 ஈ)16
47)வீரமாமுனிவரின்
இயற்பெயர்------------------------------------------------
அ)அரிஸ்டாட்டில் ஆ)கான்சுடான்சு சோசப் பெசுகி இ)மேத்யூ
ஹைடன் ஈ) பிராவோ
48)தமிழின்
முதல் அகராதி------------------------------------------------
அ) பேரகராதி
ஆ)தொன்னூல்
இ) சதுரகராதி
ஈ) நேமிநாதம்
49)வீரமாமுனிவர்
இயற்றிய இலக்கண நூல்-------------------------
அ)பேரகராதி
ஆ)தொன்னூல் விளக்கம் இ)சதுரகராதி ஈ)நேமிநாதம்
50)கானில்
செல்வழி அறியேன் - என்பது யார் கூற்று?----------------------------------------
அ)பேதுரு
ஆ)கருணையன் இ)வீரமாமுனிவர் ஈ)வளன்
51) பொருத்துக----------------------------------------------------
1.கடிந்து
- அ. விலக்கி
2.உவமணி
- ஆ.மாலை
3.படலை
- இ.
மணமலர்
4. துணர்
- ஈ. மலர்கள்
அ)ஆ அ ஈ இ
ஆ)ஈ அ ஆ இ இ)ஆ
அ இ ஈ
ஈ)அ இ ஆ ஈ
52)செய்யுளுக்கு
அழகு செய்து சுவையை உண்டாக்குவன
----------------------------------------------------
அ)நயங்கள்
ஆ)அணிகள்
இ)சொற்கள்
ஈ)ஓசைகள்
53)இயல்பான
நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது-------------------------------------------------------
அ)தன்மை அணி
ஆ)தீவக அணி
இ)தற்குறிப்பேற்ற அணி ஈ)நிரல்நிறை
அணி
54)தீவகம்
என்ற சொல்லுக்கு-------------------- என்பது பொருள்
அ)விளக்கு
ஆ)தீமை
இ)துன்பம் ஈ)பகை
55)செய்யுளில்
ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று
பொருந்திப் பொருளை விளக்குவது-----------------------------------------------------அணி
அ)தற்குறிப்பேற்ற அணி ஆ)சொல்பின்வருநிலையணி
இ)தீவக அணி ஈ) தன்மையணி
56)சொல்லையும்
பொருளையும் வரிசையாக நிறுத்தி அவர் இப்படியே இணைத்துப் பொருள் கொள்வது
-----------------------------------------------------
அ)தன்மையணி
ஆ)தீவக அணி இ)தற்குறிப்பேற்ற அணி ஈ)நிரல்நிறை
அணி
57)அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - இக்குறளில் பயின்று வந்த அணி----------------------------------------------------------------------------
அ)தன்மையணி
ஆ)தீவக அணி இ)தற்குறிப்பேற்ற அணி ஈ)நிரல்நிறை
அணி
58)எவ்வகைப்பட்ட
பொருளாக இருந்தாலும், அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம்
மகிழுமாறு பாடுவது-----------------------------------------அணி
அ)தன்மையணி
ஆ)தீவக அணி இ)தற்குறிப்பேற்ற அணி ஈ)நிரல்நிறை
அணி
59)பாடப்பகுதியின்
அணியிலக்கணம் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?_______________________
அ)நன்னூல் ஆ)தண்டியலங்காரம் இ)அகப்பொருள் ஈ)புறப்பொருள் வெண்பாமாலை
60) தன்மையணி---------
வகைப்படும்
அ)3
ஆ)4 இ)5 ஈ)6