10TH -TAMIL - ONE MARKS - UNIT 8 ( BOOK INSIDE )

 

 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 லிருந்து தொடங்குகிறது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். பத்தாம் வகுப்பு இந்த பொதுத் தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார்ப்படுத்திக்கொள்ளூமாறு கல்விவிதைகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்கள் முழுமையாக வழங்க இந்த கல்வி விதைகள் மிகவும் உறுதுணையாக விளங்கும்.அந்த வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 முதல் இயல் 9 வரை உள்ள குறைக்கப்பட்டப் பட்டப் பாடப் பகுதியிலிருந்து புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் ஒரு மதிப்பெண் வினாக்களை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். தற்சமயம் பள்ளி அளவில் மூன்றாம் திருப்புதல் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் திருப்புத தேர்வுக்கு தயாராகும் வண்ணம் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கும் வினாக்களை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இயல்கள் திருப்புதல் தேர்வு  முடிந்தவுடன் பதிவேற்றம் செய்யப்படும்.

குறிப்பு : இந்த ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகள் , PDF  மற்றும் இதன் இணைய வழித் தேர்வு நாளை பதிவேற்றம் செய்யப்படும். நன்றி, வணக்கம்.

இயல் -8

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1)மேன்மை தரும் அறம் என்பது-----------

அ)கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ)மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம்செய்வது 

இ)புகழ் கருவி அறம் செய்வது ஈ)பதிலுதவி பெறுவதற்காக அறம்செய்வது

2)உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ)உதியன், சேரலாதன் ஆ)அதியன்,பெருஞ்சாத்தன்

இ)பேகன்,கிள்ளிவளவன் ஈ)நெடுஞ்செழியன்,திருமுடிக்காரி

3) காலக்கணிதம் கவிதை இடம்பெற்ற  தொடர்-------

அ)இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ)என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ)இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம் ஈ)என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

4) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா  ஆ) வெண்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா 

5)கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்-------

அ) கால்டுவெல் ஆ) அர்னால்டு  இ) மூ.வ  ஈ) பாவாணர் 

6)அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமையைப் பற்றிக் கூறியவர்-------

அ)ஏணிச்சேரி முடமோசியார் ஆ) ஔவையார்  இ) கபிலர்  ஈ) பரணர் 

7)”இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

         அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” -என்று குறிப்பிடப்பட்ட வள்ளல் 

அ)பாரி  ஆ) பேகன்   இ)ஆய்   ஈ) கர்ணன்

8)அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டவை

அ)தானம், தவம்  ஆ)உறுபொருள்,திறைப்பொருள்

இ) செங்கோல்,கொடுங்கோல் ஈ)செங்கோல்,வெண்கொற்றக்குடை 

9)நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பது-----கடமை

அ) அரசன்  ஆ) குடிமக்கள்  இ) வணிகர்  ஈ) அமைச்சர்

10)ஊன்பொதிப் பசுங்குடையார் கூறும் அரசியல் அறம்

அ)முறையாக வரிவசூலித்தல் ஆ)அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்குதல் இ)குடிமக்களின் வறுமை போக்குதல்  ஈ)எல்லைகளை விரிவாக்கல்

11)”நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும்  அறனும்காத்தலும் அமைச்சர் கடமை”-என்று குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி  ஆ)புறநானூறு  இ) அகநானூறு  ஈ) பதிற்றுப்பத்து

12)அரசருக்கு உதவிய அமைச்சர்களைசெம்மை சான்ற காவிதி மாக்கள்எனப்போற்றியவர்

அ)கபிலர்  ஆ) இளங்கோவடிகள்   இ) மோசிகீரனார்  ஈ) மாங்குடி மருதனார் 

13)’அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்எனக் குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி  ஆ)புறநானூறு  இ) அகநானூறு  ஈ) பதிற்றுப்பத்து

14)மதுரையில் இருந்த அவையம் பற்றிக்குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி  ஆ)புறநானூறு  இ) அகநானூறு  ஈ) பதிற்றுப்பத்து

15)தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக் கூடாது எனக் கூறியவர்

அ)மாங்குடி மருதனார் ஆ)அவ்வையார்  இ)ஆவூர் மூலங்கிழார்  ஈ)கிள்ளிவளவன் 

16)பின்வருவனவற்றுள் போர் அறம் எது?

அ)ஆயிரம் யானைகளைக் கொல்லுதல்

ஆ)வீரமற்றோர்,புறமுதுகிட்டோரை எதிர்த்துப் போரிடாமை

இ)அனைவரையும் பழிவாங்குதல் ஈ)பொருள் கொடுத்து உதவுதல் 

17)தமிழர்களால் வீரத்தை போன்றே போற்றப்பட்ட பண்பு

அ) கொடை  ஆ) போர்த்திறம்  இ) கல்வி  ஈ) தொழில்கள்

18)’செல்வத்துப் பயனே ஈதல்’ - என்று கூறியவர்

அ) கபிலர்  ஆ) அவ்வையார்  இ) நக்கீரனார்  ஈ) மாங்குடி மருதனார்

19)வள்ளல் எழுவரின் கொடை பெருமையைக் குறிப்பிடும் நூல்

அ)பெரும்பாணாற்றுப்படை ஆ)சிறுபாணாற்றுப்படை இ)புறநானூறு ஈ)கலித்தொகை

20)கொடை இலக்கியங்களாகக் கருதப்படுபவை

அ)சங்க இலக்கியங்கள் ஆ)நீதி இலக்கியங்கள்

இ)ஆற்றுப்படை இலக்கியங்கள் ஈ)காப்பியங்கள்

21)சேர அரசர்களின் கொடைப் பதிவாக உள்ள நூல்

அ)புறநானூறு  ஆ)கலித்தொகை  இ)பட்டினப்பாலை  ஈ)பதிற்றுப்பத்து

22)’இல்லோர் ஒக்கல் தலைவன்,பசிப்பிணி மருத்துவன்’  என்றெல்லாம் போற்றப்பட்டவர்

அ)வள்ளல்கள்  ஆ)அரசர்கள்   இ)அமைச்சர்கள்  ஈ)மருத்துவர்கள்

23)வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்;வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்றவர்

அ)பெருங்கௌசிகனார் ஆ)பெரும்பதுமனார்  இ) பெரும்பாணர்  ஈ)பெரியாழ்வார்

24)இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைப்பவன்

அ)பாரி  ஆ)அண்டிரன்  இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்  ஈ)குமணன் 

25)மறுமையை நோக்கி கொடுக்காதவன் என்று பரணரால்குறிப்பிடப்படுபவர்

அ)திருமுடிக்காரி  ஆ)வல்வில் ஓரி  இ) அண்டிரன்   ஈ)பேகன்

26) தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் என வருந்தியவன்

அ)பாரி  ஆ) அண்டிரன்  இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்  ஈ) குமணன் 

27)இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது- என்று கூறும் நூல்

அ) புறநானூறு  ஆ)கலித்தொகை  இ) பட்டினப்பாலை  ஈ)பதிற்றுப்பத்து

28)உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார்----------- என்று குறிப்பிடுகிறார்

அ) அறம்   ஆ) உதவியாண்மை  இ) நற்செயல்   ஈ) நல்லொழுக்கம்

29)உண்மையான செல்வம் என்று நல்லந்துவனார் குறிப்பிடுவது

அ)கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவது  ஆ)அறங்கள் பல புரிவது                                                                       இ)பிறர் துன்பம் தீர்ப்பது   ஈ)எதிர்காலத்திற்குச் சேர்த்து வைப்பது

30)வாய்மை பேசும் நாவை இலக்கியங்கள்--------- என அழைக்கின்றன

அ) கருநா ஆ) செந்நா  இ) பொய்படுபரியா வயங்கு செந்நா ஈ)இரட்டை நா

31)நற்றிணை  வாய்மையை----------என்றும், பொய்யை--------- என்றும் குறிப்பிடுகிறது.

அ)பிழையா நன்மொழி,பொய்ம்மொழிக் கொடுஞ்சொல் 

ஆ)பொய்ம்மொழிக் கொடுஞ்சொல்,பிழையா நன்மொழி 

இ)இன்சொல், இன்னாச்சொல் ஈ)அறம்,அறம் அல்லாதது

32)போதிதர்மர்---------- மாநகரத்தைச் சார்ந்த சிற்றரசர் ஆவார்.

அ)புகார்   ஆ) மதுரை   இ) வஞ்சி  ஈ) காஞ்சி 

33)போதிதர்மர் ---------சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார்.

அ)சமண   ஆ) சீக்கிய   இ) பௌத்த   ஈ) முகமதிய 

34)போதிதர்மர் போதித்த சமயத் தத்துவத்திலிருந்து உருவானதே--------தத்துவம்

அ)தாவோவியம்  ஆ) ஜென் தத்துவம்  இ) பன்மைத்துவம்  ஈ)தொழில் தத்துவம்

35)தனிச்சிறப்பு பெற்ற அவையம் அமைந்திருந்த இடம்------ 

அ) உறையூர்   ஆ) மதுரை   இ) திருநெல்வேலி   ஈ) காஞ்சிபுரம் 

36)சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறமாகக் கருதப்படுவது--------

அ)உதவி  ஆ)கொடை   இ)வாய்மை   ஈ)பொருள்

37)பொன்னினும் விலைமிகு பொருளென்செல்வம்-என்று கண்ணதாசன் குறிப்பிடுவது

அ) செல்வம்   ஆ) கவிதை   இ) பொருள்  ஈ) அறம்

38)இயம்புவதென் தொழில்-பிரித்தெழுதுக

அ)இயம்பு+என்+தொழில் ஆ)இயம்புவ+தென்+தொழில் இ)இயம்புவது+என்+ தொழில்

39) கண்ணதாசனால் பண்டோர் எனக் குறிப்பிடப்பட்டோர்

அ)கம்பர்,பாரதியார்,பாரதிதாசன்ஆ)வள்ளுவர்,இளங்கோ,கபிலர்                         இ)பாரதியார், அவ்வையார், சுரதா  ஈ)நாமக்கல் கவிஞர், கவிமணி, கம்பர் 

40)ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும் அவனும் யாருமே அறிந்தவை- இதில் கண்ணதாசன் அவன் என்று குறிப்பிடுவது

அ) உழைப்பாளி   ஆ) அரசன்  இ) இறைவன்  ஈ) வணிகன் 

41)பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன் - இவ்வடியில் பதவி வாள் என்பது

அ)ஆயுதம்  ஆ) படைக்கலன்  இ) ஆட்சியதிகாரம்  ஈ)கூர்மையான கருவி 

42)இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது - இத்தொடரில்  இறந்து எனும் சொல்------- என்னும் பொருளில் வந்துள்ளது.

அ) சாதல்  ஆ)தளர்ந்து  இ) குறைந்து  ஈ) சிதைந்து

43)கண்ணதாசனின் இயற்பெயர்

அ)சுப்பையா   ஆ) முத்தையா  இ) வேணுகோபாலன்  ஈ) சுப்புரத்தினம்

44)கண்ணதாசன் பிறந்த ஊர்

அ)சிறுகூடல்பட்டி  ஆ) வடுகபட்டி  இ) புளியம்பட்டி  ஈ) சேடப்பட்டி

45)கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல் 

அ)ஆறு மனமே ஆறு  ஆ)அண்ணன் என்னடா

இ)கலங்காதிரு மனமே  ஈ)வீடுவரை உறவு 

46)கண்ணதாசன் திரைப்படப் பாடல்களின் மூலம்  மக்களிடையே கொண்டு சேர்த்தது

அ) அரசியலை  ஆ) ஆன்மீகத்தை  இ) இன்பத்தை  ஈ) மெய்யியலை 

47)சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் நூல்

அ)மாங்கனி  ஆ)ஆட்டனத்தி ஆதிமந்தி இ)சேரமான் காதலி ஈ)இயேசு காவியம் 

48)கண்ணதாசன் அட்சயப் பாத்திரம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?

அ)தத்துவம்  ஆ) கொள்கை  இ) ஞானம்  ஈ) பண்பாடு

49)கண்ணதாசன் தன் வாக்கு மூலங்களாகக் குறிப்பிடுபவை

அ)தன் நூல்களை  ஆ) உரைகளை  இ) இதழ்களை  ஈ) வளமார் கவிகளை 

50)புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது

       இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது -இவ்வடிகளில் அமைந்த முரண்

அ)என்னுடல்,என் மனம் ஆ) புல்லரிக்காது,இறந்துவிடாது இ)புகழ்ந்தால்,இகழ்ந்தால் ஈ)புகழ்ந்தால்,என் மனம் 

51)வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன் எனக்கூறியவர்

அ) பாரதியார்  ஆ) கண்ணதாசன் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன் 

52)யாப்பின் உறுப்புகள் மொத்தம்-----

அ)5    ஆ)6   இ )7   ஈ)8

53)பா-------- வகைப்படும்

அ) ஆ)5   இ)4   ஈ)8

54)பாக்களுக்குரிய ஓசைகளை வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா என்ற வரிசைக்கிரமத்தில் தேர்வு செய்க

அ)செப்பல், அகவல், துள்ளல், தூங்கல்   ஆ)செப்பல், தூங்கல், அகவல், துள்ளல்

இ) அகவல், செப்பல், தூங்கல், துள்ளல்   ஈ)தூங்கல், துள்ளல், செப்பல், அகவல் 

 

 

55)பொருத்துக

      அ) செப்பலோசை  -   1. வஞ்சிப்பா 

      ஆ) அகவலோசை -   2.கலித்தொகை

      இ)  துள்ளலோசை -  3. பெருங்கதை

      ஈ)   தூங்கலோசை - 4. நாலடியார்

அ)2 3 4 1      ஆ)4 3 2 1    இ)1 2 3 4    ஈ)3 2 1 4

56)பொருந்தாத சொல்லைக் கண்டறிக

அ) சிலப்பதிகாரம்   ஆ) மணிமேகலை  இ) நாலடியார்   ஈ) பெருங்கதை 

57)வெண்பாக்களின் வகைகள்------

அ) 3    ஆ) 4     இ)6    ஈ)

58)ஆசிரியப்பாவின் வகைகள்--------

அ)4     ஆ)5    இ)6    ஈ )8

59)ஈரசைச்சீர் மிகுதியாகவும், காய்ச்சி குறைவாகவும் பயின்று வரும் பா வகை

அ) வெண்பா   ஆ) ஆசிரியப்பா    இ) கலிப்பா    ஈ) வஞ்சிப்பா 

60)வெண்பாவிற்கான பெயர்க்காரணத்தைத் தேர்வு செய்க

அ)வெண்மையான  நிறமுடையவை ஆ)அறக்கருத்துக்களை கூற பயன்படுத்தப்படுதல் 

இ)வெண்டளைகள்  மட்டுமே வரும்  ஈ)ஈற்றடி முச்சீராய் வருதல்

61)வெண்பாவின் அடிவரையறை

அ)6-10   ஆ)9-12   இ)4-9    ஈ)2-12

62)பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க

அ)குறள் வெண்பா ஆ)கலிவெண்பா இ)நேரிசை வெண்பா  ஈ)சிந்தியல் வெண்பா 

63)காசு  என்னும் வாய்பாட்டில் முடியும் சொல்லைத் தேர்ந்தெடுக்க

அ)சால்பு     ஆ) இயல்பு      இ) தார்    ஈ) பொறை 

64) ஏகாரத்தில் முடியும்  பாவகை

அ) அகவற்பா   ஆ) வெண்பா  இ) கலிப்பா   ஈ) வஞ்சிப்பா 

65)வெண்பாவின் இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளால் வருவது

அ)சிந்தியல் வெண்பா ஆ)நேரிசை வெண்பா இ)குறள் வெண்பா ஈ)கலிவெண்பா

66)நான்கு சீர்களால் அமையும் அடி--------, மூன்று சீர்களால் அமையும் அடி----

அ)குறளடி, சிந்தடி  ஆ)சிந்தடி, அளவடி  இ)அளவடி, சிந்தடி  ஈ)சிந்தடி,குறளடி 

67)இருவர் உரையாடுவது போன்ற ஓசை--------

அ)செப்பலோசை   ஆ)அகவலோசை   இ)துள்ளலோசை   ஈ)தூங்கலோசை

68) சொற்பொழிவு ஆற்றுவது போன்ற ஓசை-------

அ) செப்பலோசை   ஆ) அகவலோசை   இ) துள்ளலோசை   ஈ) தூங்கலோசை

69)கன்று துள்ளினாற் போல சீர் தோறும் துள்ளிவரும் தோசை-------- 

 அ) செப்பலோசை   ஆ) அகவலோசை   இ) துள்ளலோசை   ஈ) தூங்கலோசை

70)சீர் தோறும் துள்ளாது தூங்கி வரும் ஓசை--------- 

அ)செப்பலோசை   ஆ)அகவலோசை   இ)துள்ளலோசை   ஈ)தூங்கலோசை

71) யாப்பதிகாரம் என்ற நூலை இயற்றியவர்---------


அ)இளங்கோவடிகள்   ஆ)புலவர் குழந்தை  இ)புலவர் மாணிக்கம் ஈ) சாத்தனார்

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post