ஒரு மதிப்பெண் வினாக்கள்
அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இனிய வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 6 முதல் நடைபெற உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நமது தமிழ் விதை வலைதளமானது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சியினை எளிதாக்குவதற்காக பல்வேறு பயிற்சி வினாக்கள், இணைய வழித்தேர்வுகள் மற்றும் தேர்வு சமயத்தில் வழிகாட்டும் தேர்ச்சி வழிக்காட்டிக்கான இணைய வகுப்பு என தொடர்ந்து நமது வலைதளம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில் பொதுத்தேர்வுக்கு பயன்படக்கூடிய சில பயிற்சிகளை முன்னெடுக்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வித்துறை 2019 - 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாளில் இடம் பெற்றுள்ள குறைக்கப்பட்ட பாடத்திலிருந்து கேட்கப்பட்ட வினாக்களை இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை தவறாது பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளவும். இந்த வினாக்களிலிருந்து வினாக்கள் இடம் பெறலாம் என்ற எண்ணத்தில் வினாக்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைக்குறிப்புடன் கூடிய 58 ஒரு மதிப்பெண் வினாவினை மாணவர்களுக்கு படிக்க வைத்து விட்டு, இதன் இணைய வழித் தேர்வினை தங்களின் கணினி உயர் தொழில் நுட்ப ஆய்வகத்திலோ, கைப்பேசியிலோ,மடிக்கணினியிலோ எழுதி பெற வைக்கவும். இந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் யாவும் பள்ளிக்கல்வித்துறை 2019- 2020 ஆம் கல்வியாண்டில் வெளியிடப்பட்ட ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடப்பகுதி வினாக்கள் மட்டும் எடுத்து இணைய வழித் தேர்வாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒரு மதிப்பெண் வினாக்களை விடையுடன் கூடிய PDF ஆகவும், விடைக்குறிக்காமல் வினாத்தாள் PDF ஆகவும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இந்த பயிற்சியினை வழங்கவும்.
- விடைக்குறிப்புடன் கூடிய ஒரு மதிப்பெண் வினாக்கள் PDF- CLICK HERE
- ஒரு மதிப்பெண் வினாத்தாள் - PDF - CLICK HERE
- ஒரு மதிப்பெண் இணைய வழித் தேர்வு - CLICK HERE